வனிதா விஜயகுமார் 50 வயசுல கல்யாணம் பண்ணி என்ன செய்ய போறாங்க? சுருக்னு கேட்ட பிரபலம்.. ஒரே சிரிப்பு
சென்னை: ராபர்ட் - வனிதா விஜயகுமார் இருவரது போட்டோ ஒன்று இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இவர்களுக்கு திருமணமா? என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.. சிலர் ஒருபடிமேலே போய், இருவருக்கும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
வனிதா விஜயகுமார் ஏற்கனவே "எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.. இந்த படத்தை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தயாரித்து, ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

வனிதா: இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது, ராபர்ட்டும், வனிதாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. அதற்கேற்றவாறு, வனிதாவின் பெயரை ராபர்ட் பச்சை குத்தியதாகவும் சலசலப்பு கிளப்பியது. ஆனால், படத்தின் புரமோஷனுக்காகவே இப்படியெல்லாம் செய்திகள் வெளிவந்ததாக ராபர்ட் தரப்பில் சொல்லப்பட்டது.
இதற்கு பிறகுதான், பீட்டர் பால் என்பவருடன் பழகி, அவரை காதலித்து, 2020ல் திருமணமும் செய்தார்.. ஆனால், பீட்டர் பாலை விட்டு, வனிதா விஜயகுமார் 3 மாதத்திலேயே பிரிந்துவிட்டார்.. இப்போதும்கூட வனிதா பிசியாக நடித்து வருகிறார்.. சொந்தமாக யூடியூப் சேனல், சினிமா படங்கள், நிகழ்ச்சிகள், விழாக்கள் என படுபிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிகினி உடை: இப்படிப்பட்ட சூழலில், வனிதா - ராபர் இருவரின் போட்டோ ஒன்று, கடந்த 2 நாட்களாகவே இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதில் ராபர்ட் மாஸ்டருக்கு புரபோஸ் செய்துள்ளார் வனிதா.. பீச்சில், அதுவும் பிகினி உடையில் முட்டி போட்டு, இரு கைகளையும் நீட்டி புரபோஸ் செய்துள்ளார்... அக்டோபர் 5-ம் தேதி முக்கிய தகவல் வெளியாக போவதாக, "Save the Date" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்" படத்தில் நடித்தபோது இந்த போட்டோ எடுத்திருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் ராபர்ட் - வனிதா விஜயகுமார் இருவரும் இணைந்து, ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அந்த படம் சம்மந்தமான அறிவிப்புக்காகதான், இப்படி வித்தியாசமான புரோமோஷன் பணி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இன்னொரு தகவல் பரவியது.
ராபர்ட் - வனிதா: இதுகுறித்துதான், கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன..ராபர்ட் - வனிதா இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் படம்தான் "Mr&Mrs".. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் விரைவில் வெளியாக இருக்கிறது.
அதற்கான புரொமோஷன் போட்டோவைதான் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளனர். எனினும் 5ம்தேதி அப்படி என்னதான் அறிவிப்பு வரப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு இப்போதே எழுந்துள்ளது.. இந்தப்படத்தில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் பணியாற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பயில்வான் ரங்கநாதன்: இதனிடையே, அப்பு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.. இதில், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், அப்பு படத்தை பற்ற பேசிக் கொண்டிருந்தார்.. அப்போது செய்தியாளர்கள் திடீரென, வனிதாவுக்கு 4வது கல்யாணமா? என்று கேட்டார்கள்.

அதற்கு பயில்வான் ரங்கநாதன், "இந்த நிகழ்ச்சிக்கும் இந்த கேள்விக்கும் சம்மந்தம் இருக்கா?" என்றார்.. உடனே செய்தியாளர்கள்,"நீங்க தான் வனிதாவோட நல்ல நண்பராயிற்றே" என்றார்கள்.
50 வயசு கல்யாணம்: உடனே பயில்வான் ரங்கநாதன், "அதற்கு அது வெறும் படம் புரமோஷன் தான்.. ஏற்கனவே இப்படி ஒரு போட்டோ வந்தது பற்றி நான் வனிதாவிடம் கேட்டேன்.. அது படத்தின் புரமோஷன்னு சொல்லிட்ங்க.. அதனால், இதுவும் அப்படி ஏதாவது அறிவிப்பு வரலாம்.. 50 வயசுல கல்யாணம் பண்ணி அவரு என்ன பண்ண போறாரு?" என்று கிண்டலாக பயில்வான் சொல்லவும், அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட்டார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications