பாளையத்து அம்மனாக நடித்தாரே நடிகை திவ்யா உன்னி.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனா நடிப்பில் வெளியான பாளையத்து அம்மன் படத்தில் முன்னணி ரோலில் நடித்திருந்த திவ்யா உன்னி தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?

சினிமாவில் நடிகைகள் நீண்டகாலமாக ஆக்டிவ்வாக இருப்பது என்பது சிலருக்கு மட்டுமே அரிதாக நடக்கும். மற்றவர்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆரம்பத்தில் நிறைய படங்களில் வாய்ப்பு கிடைக்கும் இவர்களுக்கு திடீரென சிலநேரங்களில் வாய்ப்பு கிடைக்காமல் மார்க்கெட்டை இழந்துவிடுகிறார்கள்.

do you know What is Actress Divya Unni doing?

சிறிது காலம் அக்கா,அண்ணி ,தோழி கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு பின்னர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர் திவ்யா உன்னி.

இவருக்கு வயது 43 ஆகிறது. இவர் தமிழில் கண்ணன் வருவான், சபாஷ், பாளையத்து அம்மன், ஆண்டான் அடிமை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் சுதீர் சேகரன் என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

do you know What is Actress Divya Unni doing?

அமெரிக்காவில் வசிக்கும் அருண்குமார் என்பவரை 2018இல் மறுமணம் செய்து கொணடார். தற்போது அமெரிக்காவில் திவ்யா உன்னி வசித்து வருகிறார். அவர் அங்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார்.இதுகுறித்து அவர் கூறுயிருப்பதாவது: சினிமாவோடு இருந்த தொடர்பை நான் விடவே இல்லை.

ரிலீஸ் ஆகும் படங்களை தொடர்ந்து பார்க்கிறேன். சில பொறுப்புகள் காரணமாக நடிப்பை கைவிட வேண்டியதாகிவட்டது. சரியான நேரம் வரும் போது மீண்டும் நடிக்கத் தொடங்குவேன். தற்போதெல்லாம் ஸ்கிரிப்ட் கேட்டு நடிக்கிறார்கள். அப்போதெல்லாம் அப்படி இல்லை. உஸ்தாத் படத்தில் மோகன் லாலுடன் நான் நடித்திருந்ததை இன்னமும் ரசிகர்கள் நினைவு கூர்கிறார்கள்.

do you know What is Actress Divya Unni doing?

அது போன்றதொரு கதாபாத்திரம் கிடைத்தால் சினிமாவுக்கு மீண்டும் வருவேன் என திவ்யா உன்னி தெரிவித்துள்ளார். திவ்யா உன்னி பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் போன்ற நடனங்களை கற்றுக் கொணடுள்ளார். இவர் ரம்யா நம்பீசனின் உறவினர் ஆவார். திவ்யாவுக்கு முதல் திருமணத்தில் இரு மகள்கள் உள்ளனர். இரண்டாவது கணவர் மூலம் ஒரு மகன் பிறந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு வரை மலையாள படங்களில் நடித்துள்ளார். (இந்த புகைப்படங்கள் சஜீவ் சந்திரன், சுனில் குமார் என்ற புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்டது. இவற்றை நடிகை திவ்யா உன்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+