அடேங்கப்பா! நடிகை நயன்தாராவுக்கு பிடித்த சீரியல் எது தெரியுமா? ஒரு நாள் கூட மிஸ் செய்ய மாட்டாராமே!
சென்னை: நடிகை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த சீரியல் எது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அது போல் அந்த சீரியலை அவர் பார்க்காமல் இருக்கவே மாட்டாராம்.
முன்பெல்லாம் சினிமா நடிகர், நடிகைகளுக்கு மட்டும் ரசிகர் பட்டாளம் இருந்தனர். சில்க் ஸ்மிதா கடித்து வைத்த ஆப்பிள் அந்த காலத்திலேயே லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் போனது. அது போல் 1990 களில் குஷ்புவுக்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் இருந்தனர். இப்படியாக எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ள செய்கிறது.

ஆனால் தற்போது அப்படி இல்லை, டிவி சீரியல் நடிகர், நடிகைகள் முதல் டிவி தொகுப்பாளினி, இன்ஸ்டா, யூடியூப், டிக்டாக் பிரபலங்களுக்குக் கூட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். இதன் மூலம் சீரியல் நடிகை, நடிகர்கள், சமூகவலைதள பிரபலங்களும் அதிக வியூஸ், லைக்ஸ்களை பெற்று சம்பாதிக்கிறார்கள்.
இவர்கள் துணிக் கடை , நகைக் கடை , சலூன்கள் உள்ளிட்ட கடைகளை திறந்து வைக்கிறார்கள். அதன் மூலமும் இவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. சீரியல் நடிகைகளும் கிட்டதட்ட சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல்களில் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கும் பாடல், ரொமான்ஸ், காதல், சண்டை, டூயட், சோகம் என அனைத்து அம்சங்களும் இருக்கின்றன.
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் வரும் சீரியல்கள் மக்கள் முன் பிரபலமடைந்துள்ளன. சினிமாக்களுக்கு டிரெய்லர்கள் போடுவதை போல் சீரியல்களுக்கு அன்றாடம் ப்ரோமோ போடும் அளவுக்கு மெகா சீரியல்கள் மக்கள் வாழ்வில் பெருவாரியான ஆதரவை பெற்றுள்ளன. அதிலும் ப்ரோமோக்களை பார்த்து இயக்குநர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்குகிறார்கள். ரசிகர்களின் கருத்துகளை ஏற்று தங்கள் சீரியலின் கதையையே இயக்குநர்கள் மாற்றுகிறார்கள்.
அந்த வகையில் சன் டிவியில் எதிர் நீச்சல் சீரியலுக்கு ரசிகர்களே இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு அந்த சீரியலின் கேரக்டர் ஆதி குணசேகரனுக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தனர். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து இறந்த நிலையில் அவருக்கு பதில் வேல ராமமூர்த்தி நடித்தார். ஆனால் மாரிமுத்து பார்த்த இடத்தில் வேறொருவரை மக்களால் ஏற்க விரும்பவில்லை.
என்னதான் வேல ராமமூர்த்தி சிறப்பாக நடித்திருந்தாலும் இந்த சீரியல் விரைவில் முடித்து வைக்கப்பட்டது. விரைவில் 2ஆம் பாகம் எடுக்கப்படும் என்கிறார்கள். அது போல் கயல் சீரியல் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. கயல் கேரக்டரில் சைத்ரா ரெட்டி, எழில் கேரக்டரில் சஞ்சீவ் கார்த்தி நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் நடுத்தர குடும்பத்து பெண்ணின் சம்பாதியத்தில் ஒரு குடும்பமே நடத்தப்படுகிறது.
அந்த ஒற்றை சம்பளத்தில்தான் வீட்டு வாடகை, கரன்ட் பில் கட்டுவது இரு தங்கைகளை படிக்க வைப்பது, ஒரு தம்பியை படிக்க வைப்பது, அண்ணன் அண்ணி, அவருடைய குழந்தையை காபபாற்றுவது என தன் வாழ்வில் பெரும்பகுதியை கயல் செலவிடுகிறாள். ஆனால் அவளுக்கென வாழ்க்கை அமைய அவருடைய குடும்பத்தினர் விரும்புகிறார்கள். தன்னுடன் படித்த பணக்கார பையன் தன்னை விரும்பினாலும் அதை முதலில் ஏற்க மறுத்து பிறகு அவளுக்குள் இருக்கும் காதலை உணர்ந்து எழிலை விரும்புகிறாள்.
ஆனால் கயலை ஏற்க எழிலின் அம்மா தயாராக இல்லை. இதற்காக பல்வேறு சதி செய்கிறாள். இதையெல்லாம் முறியடித்து இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் சேர்ந்து வாழ என்னென்ன தடங்கல்கள் வருகிறது என்பதுதான் மீதி கதையாக இருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சீரியலுக்கு பல ரசிகைகள் இருக்கும் போது நடிகை நயன்தாராவும் இந்த சீரியலை பார்ப்பாராம். அவருக்கு இந்த சீரியல் என்றால் மிகவும் பிடிக்குமாம். தினந்தோறும் இந்த சீரியலை நடிகை நயன்தாரா பார்த்துவிடுவாராம். ஒரு வேளை பிஸியாக இருந்தாலும் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட் ஆகிய செயலிகள் மூலம் பார்த்துவிடுவாராம். எதிர்நீச்சல் சீரியலை ரசித்தவர் நடிகர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications