ரியாஸ் கான் மருமகள் மரியா ஷாரிக்கிற்கு வளைகாப்பு! அசைவ விருந்தளித்து அசத்திய கட்டதுரை! மெனு என்ன?
சென்னை: நடிகர் ரியாஸ்கானின் மருமகள் மரியா ஷாரிக் ஹாசனுக்கு இன்று மாலை தடபுடலாக வளைகாப்பு நடத்தப்பட்டு அசைவ விருந்தும் பரிமாறப்பட்டது. என்னென்ன உணவு விருந்தளிக்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.
நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக், மரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி நடந்தது. இந்த நிலையில் மரியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தான் தாத்தாவாகும் சந்தோஷத்தில் இருக்கும் ரியாஸ்கான், தனது மருமகளுக்கு வளைகாப்பு நடத்தினார்.

தனது வீட்டிலேயே மரியாவுக்கு வளைகாப்பு விழா நடத்திய நிலையில் இந்த நிகழ்வுக்கு பல்வேறு பிரபலங்கள் வந்து வாழ்த்தினர். மேலும் சிக்கன், மட்டன் பிரியாணி, மீன் வறுவல், வெள்ளை சாதம், அதற்கான கறி குழம்பு, இனிப்பு, பஜ்ஜி, ரைத்தா உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
முன்னதாக மரியாவுக்கு நலங்கு வைக்கும் நிகழ்வு நடந்தது. தந்தை ஸ்தானத்தில் இருக்கும் ரியாஸ் கானும் நலங்கு வைத்தார். ஷாரிக்கும் மரியாவும் செம்பு நிற ஆடை அணிந்திருந்தனர். உமா ரியாஸ் பச்சை நிற புடவையும் ரியாஸ் கான் கருப்பு நிற உடையும் அணிந்திருந்தனர். ரியாஸ் கான் ரசித்து ருசித்து சாப்பிட்டார்.
ஷாரிக்கின் மனைவி மரியா ஜெனிஃபர் அவரைவிட 3 வயது பெரியவர். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார். இந்த ஒரு காரணத்திற்காகவே ஷாரிக்கை பலர் பாராட்டினர். எனினும் வழக்கம் போல் பலரும் ஆபாச கருத்துகளை பதிவிட்டு ஷாரிக்- மரியா தம்பதியை நோகடித்தனர்.
இதைத் தொடர்ந்து மரியா எப்போது பேட்டி கொடுத்தாலும் ஷாரிக்கை பற்றியும் மாமனார் ரியாஸ்கான், மாமியார் உமா ரியாஸ் ஆகியோரை பற்றியும் பெருமையாக சொல்வார். தனது பெண் குழந்தையை ஷாரிக் நன்றாக பார்த்து கொள்கிறார். அந்த குழந்தையுடன் நன்கு விளையாடுகிறார், தன்னை விட தற்போது தனது மகள், ஷாரிக்கிடம்தான் நெருக்கமாக இருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் தனது குழந்தை சொந்த பேத்தியாகவே மாமனாரும் மாமியாரும் பார்த்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஷாரிக்கும் தனது மகளும் எப்படி தந்தை மகள் போல் இருக்கிறார்கள் என்ற வீடியோக்களையும் தனது இன்ஸ்டாவில் மரியா அவ்வப்போது வெளியிடுகிறார்.
தான் கர்ப்பமாக இருப்பதை கடந்த பிப் 21 ஆம் தேதி மரியா போட்டோஷூட் நடத்தி வெளியிட்டிருந்தார். மரியா கிறிஸ்துவர் என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கடந்த ஆண்டு குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்வித்தனர்.
வளைகாப்பு வீடியோவை பார்க்கும் இன்ஸ்டாவாசிகள், ஷாரிக்கிற்கும் மரியாவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஷாரிக்கிற்கு ஏற்கெனவே பெண் குழந்தை இருப்பதால், தற்போது ஆண் குழந்தை பிறக்கும் என கணித்து மெசேஜ் அனுப்பி வருகிறார்கள். அண்மையில்தான் இந்திரஜா கார்த்திக் தம்பதி, டிவி நடிகர் கார்த்தி- காயத்ரி தம்பதிக்கு ஆண், பெண் குழந்தை பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக மரியாவிற்கு வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது. பேரனோ பேத்தியோ கடவுள் அருளாள் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என ரியாஸும் உமாவும் காத்திருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications