போய் 5 வாரம்தான் ஆச்சு! பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன யுகேந்திரன், வினுஷாவின் ஊதியம் என்ன?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள வினுஷா மற்றும் யுகேந்திரனுக்கு எவ்வளவு தொகை ஊதியமாக கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இது தற்போது சீசன் 7 நடந்து வருகிறது. 100 நாட்களுக்கு மேல் இந்த வீட்டில் யார் தங்குகிறார்களோ மக்களின் வாக்குகளின் அடிப்படையில் அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.

இதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் வந்தனர். அவர்களில் வாரம் ஒருவர் மக்களின் வாக்குகளில் யாருக்கு ஓட்டு குறைவாக இருக்கிறதோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் வாரம் அனன்யா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் வெளியேறிய மறுநாளே பவா செல்லத்துரை தானாக விரும்பி வெளியேறியுள்ளார். இதையடுத்து மூன்றாவது வாரம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். தற்போது 4 ஆவது வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
15 போட்டியாளர்கள் கடுமையாக போட்டியிட்டு வருகிறார்கள். இது போதாமல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 5 பேர் நுழைகிறார்கள் என கமல்ஹாசன் ப்ரோமோவில் தெரிவித்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியில் ஒருவர்தான் வருவார்கள். ஆனால் தற்போதுள்ள போட்டியாளர்கள் யாரும் சரியாக கன்டென்ட் தரவில்லை என கருதப்படுகிறது.
இதனால் ஒரு 5 பேரை வைல்ட் கார்டு என்ட்ரியாக அனுப்ப பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளது. இதுதான் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறை என சொல்லப்படுகிறது. இந்த முறை குறைந்த வாக்குகளுடன் கூல் சுரேஷ், விஷ்ணு, மாயா, சரவண விக்ரம், அக்சயா ஆகியோர் இருந்தனர். இதில் டேஞ்சர் ஜோனில் வினுஷாவும் யுகேந்திரனும் இருந்தனர்.

எனவே இந்த வாரம் வினுஷா, யுகேந்திரன் ஆகிய இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என சொல்லப்பட்டது. நிக்ஷனும் ஐஷுவும் அடிக்கடி மைக்கை மூடிவிட்டு ஏதோ பேசிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்து கொண்ட வீடியோவும் வைரலானது. இது தொடர்பாக நேற்றைய எபிசோடில் நிக்ஷனை கமல் எச்சரித்துள்ளார். ரகசியம் பேச வேண்டும் என்றால் வெளியில் இங்கே வந்து பேசுங்கள். இதே நிலை நீடித்தால் எலிமினேட் செய்யப்படுவீர்கள் என கமல் எச்சரித்தார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து யூகித்த வாறே யுகேந்திரனும் வினுஷாவும் வெளியேற்றப்பட்டனர். இவர்களுக்கு எத்தனை ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் 5 ஆவது வாரம் நடந்தது. அதில் யுகேந்திரனுக்கு ஒரு எபிசோடிற்கு ரூ 27 ஆயிரம் வீதம் ரூ 7 லட்சமும் வினுஷாவுக்கு ரூ 20 ஆயிரம் வீதம் ரூ 5 லட்சமும் ஊதியமாக வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications