கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சு! இளையராஜா இசை! எஸ்பிபி குரலை தாண்டி பாட்டில் இருப்பது என்ன?
சென்னை: குங்குமச் சிமிழ் படத்தில் இடம் பெற்ற கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருக்கு என்ற பாடலில் இளையராஜா இசை, வைரமுத்து வரிகளை தாண்டி இன்னொன்றை கவனித்திருக்கிறீர்களா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: "சிறிய பறவை சிறகை விரிக்க நினைக்கிறதே...." இந்த மாஜிக் பாட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்... கமலோடு 'கல்யாணராமன்' படத்தில் நடிக்கும் போதே மேஜர் கேட்டிருப்பார் போல..

"கமல்...நான் டைரக்டராகணும் உங்க படத்துக்கு...I want to be a director in your film" கமலும் ஒப்புதல் தந்தாலும் கால்ஷீட் சில வருடங்கள் கழித்து தான் கிடைத்திருக்கும் போல... கதை அதே பழைய 80 கதையை எடுத்து ஒப்பேற்றியிருப்பார்..
இளையராஜா அவ்வளவு அழகான டியூன் தந்தும் மேஜரின் கற்பனை பழைய ஊறுகாய் தான்... நாயகி பழைய கனவில் தங்களை நினைப்பதாக கற்பனை...முதலில் சலீம்-அனார்கலி, பின் அம்பிகாபதி-அமராவதி..மூன்றாவதாக வெள்ளைக்காரர்களாம்....ரோமியோ-ஜூலியட்டை கற்பனை பண்ணிக்கோங்க...... கமல் தன் மேக்கப் மாறினாலும் நடை மூன்றும் ஒரே ஸ்டைல் தான்.
அப்போ அந்த அளவுக்கு நடிப்புக்காக யோசித்ததில்லை போல...குறுந்தாடி வச்சா வெள்ளைக்காரன்.... பாடல் வரிகள் அற்புதம்...
"மது போதை வேண்டுமா?
இதழ் போதை நல்லது..
உன் பேரை சொல்கிறேன்
அதில் போதை உள்ளது.."
"நெற்றியில் வியர்வை சொட்டுமே..கைகள் பற்றுமே ஒற்றுமே..."
"மெல்லினங்கள் பாடு கண்ணே...
வல்லினங்கள் வாய் வலிக்கும்..."

அம்பிகாபதி-அமராவதி பாடும் போது
"கன்றுகள் ரெண்டு இன்று போல் என்றும் வென்று வாழ் கின்றது..."..அது மட்டும் சேரவில்லை. அமராவதியின் காதல் வெற்றிக்காதலில்லை....
கடைசியாக கமல் வந்து ஊர்வசியை சமாதானப்படுத்துகிறார்.. "பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே...
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே..."
எழுதியவர் வைரமுத்து...படத்தை தயாரித்தவர் பழ.கருப்பையா...
இதே ஸ்டைலில் சுந்தர்ராஜன் 'கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சு' பாடலை 'குங்குமச்சிமிழ்' படத்தில் எடுத்திருப்பார். Same thinking.... அந்த SPBயின் சிரிப்புக்காக எத்தனை முறை வேணாலும் கேட்கலாம்..... இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications