Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மல்லுக்கட்டிய மணிமேகலை.. கலங்கடித்த பிரியங்கா.. செட்டில் நடந்தது இதுதான்.. உடைத்து பேசிய பிரபல நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிமேகலை - பிரியங்கா இருவருக்குள்ளும் ஈகோ வெடித்து கிளம்பிய நிலையில், விஜய் டிவி பிரபலம் ஒருவர் தந்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.. காரணம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அப்படி என்னதான் நடந்தது? என்பதை பற்றி தெரிவித்துள்ளார்.

மணிமேகலை Vs பிரியங்கா விவகாரம் விஸ்வரூபமெடுத்து மெல்ல அடங்கி வருகிறது.. எனினும், இந்த பிரச்சனையின் உள்ளார்ந்த விஷயம் முழுமையாக வெளிவரவில்லை.

television manimegalai priyanka

ஆனால், யாரெல்லாம் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்தார்களோ, அவர்களது பதிவுகள் பல டெலிட் செய்யப்பட்டிருந்தன.. விஜய் டிவியின் பிரபலங்கள், திடீரென பிரியங்காவுக்கு ஆதரவை தர துவங்கினார்கள்....

மணிமேகலை: அத்துடன் மணிமேகலையையும் மறைமுகமாக விமர்சிக்க துவங்கிவிட்டார்கள்.. "அமானுஷ்யம்" , செருப்பு, துடைப்பம் என்று பதிவுகளை பதிவிட்டனர்.. இப்படியெல்லாம் ஒரு பெண்ணை அவமானப்படுத்த வேண்டுமா? என்று மணிமேகலையின் ரசிகர்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பவே செய்தனர்.

இந்த அளவுக்கு விவகாரம் முற்றியிருக்கும் நிலையில், விஜய் டிவி பிரபலமான சரண்யாவின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. காரணம், சம்பவம் நடந்ததாக கூறும் அந்த குறிப்பிட்ட நாளில், சூட்டிங்கில் சரண்யாவும் அங்கு இருந்திருக்கிறார்.

சரண்யா: Little Talks சேனலுக்கு தந்த பேட்டியில், குக் வித் கோமாளி பற்றின தன்னுடைய அனுபவங்களை சரண்யா பகிர்ந்திருந்தார்.. அப்போது, மணிமேகலை - பிரியங்கா விவகாரம் குறித்தும் பேசியிருக்கிறார்.

"குக் வித் கோமாளி யாரையுமே இறக்கிவிடாது.. ஏற்றி மட்டுமே விடும்.. நான் அந்த ஸ்பாட்டிலேயே இருந்து கண்ணாலே பார்த்தாலும்கூட, சம்பந்தப்பட்டவர்களுக்கு தான் தெரியும்... எதுக்காக ஒருத்தர் கத்தினார்? எதற்காக அவர் இதை எதிர்பார்த்தார்? என்பதெல்லாம் அவங்க 2 பேருக்கும் அத்தனை வாரமாக கூடவே இருப்பவர்களால் கூட அதை ஜட்ஜ் பண்ண முடியாது..

வார்த்தைகள்: என்ன வார்த்தை இவங்க சொல்லி அவங்களை குத்தியிருக்கும்? என்ன வார்த்தை பதிலுக்கு சொல்லி இவருக்கு வலிச்சிருக்கும்? என்பதெல்லாம் நமக்கு தெரியாது இல்லையா? எனவே சம்பந்தப்பட்ட இருவரும் உட்கார்ந்து பேசிக்கொள்ள வேண்டிய விஷயம்.. அல்லது சண்டை போட்டுக் கொள்ள வேண்டிய விஷயம்.. அத்துடன் இதில் சம்பந்தப்பட்ட புரோடக்‌ஷன் ஹவுஸ்.. இவங்கதான் உட்கார்ந்து பேசிக் கொள்ளணும்..

உள்ளேயிருந்து வேடிக்கை பார்த்தவர்களுக்கெல்லாம், கரெக்ட்டா சொல்லிவிட முடியாது.. இவங்க என்ன சொல்லி, அவங்க அதுக்கு இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருப்பாங்க என்பது அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும்" என்று தெரிவித்துள்ளார் சரண்யா.

புகழ் பேட்டி: சில நாட்களுக்கு, இதே குக் வித் கோமாளியில் பங்கேற்று வரும் புகழ், இதே கருத்தை தான் சொல்லியிருந்தார்.. "சம்பந்தப்பட்ட 2 பேரும்தான் உட்கார்ந்து பேசி கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார். இப்போது சரண்யாவும் அதே கருத்தைதான் கூறியிருக்கிறார்..

ஆக, மணிமேகலை, பிரியாவுக்குள் உண்மையிலேயே என்னதான் பிரச்சனை என்று? குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சம்பவம் நடந்த நாளிலும் கண்ணெதிரே பார்த்த, புகழ், சரண்யா போன்றவர்களாலுமே கணிக்க முடியவில்லையாம்.. இந்த பதில்கள் அனைத்துமே ரசிகர்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

புதிய பொலிவு: குக் வித் கோமாளி அடுத்த சீசன் விரைவுல் துவங்க போவதால்தான், இப்படி பிரபலங்கள் வெளிப்படையாமல் எதையும் பேசாமல் இருக்கிறார்கள் என்று சலசலக்கப்படுகிறது.. அதுமட்டுமல்ல, பழைய நிகழ்ச்சியான குக் வித் விஜய் ஸ்டார்ஸ் இப்போது புத்தம் புதிய பொலிவுடன் மீண்டும் வரப்போகிறதாம். பிரபல விஜய் டிவி ஸ்டார்ஸ்கள் எல்லாரும் இணைந்து "குக்கிங் ஸ்டார்ஸ்" நிகழ்ச்சியில் சமைக்க உள்ளனர்.

நடுவர்களாக செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் பங்கேற்க போவதாக தெரிகிறது. விட்டதை பிடிக்க விஜய் டிவி முயன்றுவரும் நிலையில், சரண்யாவின் இந்த பேட்டியும் வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+