Bigg Boss 7: 18 பேரில் அதிக சம்பளம் இவருக்கா? கூல் சுரேஷுக்கு எவ்வளவு? அப்போ வனிதா மகளுக்கு?
சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 18 போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி நேற்று முன் தினம் விஜய் டிவியில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இந்த முறை இரு பிக்பாஸ் ஹவுஸ் இருக்கின்றன. இரு வீடு , ஒரு வாசல், ஒரு கிச்சன் என்ற அடிப்படையில் இந்த வீடு அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், வினுஷா, மணி சந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, மாயா கிருஷ்ணன், சரவணா, யுகேந்திரன் வாசுதேவன், விசித்திரா, அனன்யா ராவ், விஷ்ணு விஜய், பாவா செல்லத்துரை, விஜய் வர்மா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுவாக இது போல் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் என்றால் யார் யார் போட்டியாளர்கள் என தெரிந்து கொள்ள ஆவல் இருப்பதை போல் அவர்களுடைய சம்பளம் என்னவாக இருக்கும் என்பதை அறிய பலர் விரும்புவார்கள். அந்த வகையில் உத்தேச சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி கூல் சுரேஷுக்கு ரூ 18 ஆயிரமும் பூர்ணிமா ரவிக்கு ரூ 15 ஆயிரமும், ரவீனா தாஹாவுக்கு ஒரு நாளைக்கு 18 ஆயிரமும் , பிரதீப் ஆண்டனிக்கு ஒரு நாளைக்கு ரூ 20 ஆயிரமும் நிக்சனுக்கு ரூ 13 ஆயிரமும் வினுஷாவுக்கு ரூ 20 ஆயிரமும் மணி சந்திராவுக்கு ரூ 18 ஆயிரமும், அக்ஷயா உதயாகுமாருக்கு ரூ 15 ஆயிரமும் ஜோவிகாவுக்கு ரூ 13 ஆயிரமும் ஐஷுவுக்கு ரூ 1.05 லட்சமும் வழங்கப்படுகிறது.
அது போல் விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணனுக்கு ரூ 18 ஆயிரமும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரமுக்கு ரூ 18 ஆயிரமும் யுகேந்திரனுக்கு ரூ 27 ஆயிரமும், விசித்ராவுக்கு ரூ 27 ஆயிரமும் அனன்யாவுக்கு 12 ஆயிரமும் விஷ்ணுவுக்கு ரூ 25 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படுகிறது.
அது போல் பாவா செல்லத்துரைக்கு 28 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது விஜய் வர்மாவுக்கு ரூ 15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் ஒரு போட்டியாளர் எத்தனை நாட்கள், எத்தனை வாரங்கள் இருக்கிறாரோ அதுதான் அவருடைய மொத்த ஊதியம் ஆகும்.

அந்த வகையில் கூல் சுரேஷுக்கு வாரத்திற்கு ரூ 1.26 லட்சமும் பூர்ணிமா ரவிக்கு ரூ 1 லட்சமும், ரவீனா தாஹாவுக்கு ரூ1.26 லட்சமும் , பிரதீப் ஆண்டனிக்கு ரூ 1.40 லட்சமும் நிக்சனுக்கு ரூ 91 ஆயிரமும் வினுஷாவுக்கு ரூ 1.40 லட்சமும் மணி சந்திராவுக்கு ரூ 1.26 லட்சமும், அக்ஷயா உதயாகுமாருக்கு ரூ 1.05 லட்சமும் ஜோவிகாவுக்கு ரூ 91 ஆயிரமும் ஐஷுவுக்கு ரூ 1.50 லட்சமும் வழங்கப்படுகிறது.
அது போல் விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணனுக்கு வாரத்திற்கு ரூ 1.26 லட்சமும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணனுக்கு ரூ 1.26 லட்சமும் யுகேந்திரனுக்கு ரூ 1.89 லட்சமும், விசித்ராவுக்கு ரூ 1.89 லட்சமும் விஷ்ணுவுக்கு ரூ 1.75 லட்சமும், அனன்யாவுக்கு 84 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
அது போல் பாவா செல்லத்துரைக்கு 1.96 லட்ச ரூபாய் ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது விஜய் வர்மாவுக்கு ரூ 1.216 லட்சமும் வழங்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications