பிரென்ட்ஸ் படத்தில் குட்டி விஜய்யாக நடித்த பரத் ஜெயந்த்! ஐஸ்கிரீம் கடை மூலம் வரும் மாத வருமானம என்ன?
சென்னை: பிரென்ட்ஸ் படத்தில் சிறு வயது விஜயாக நடித்த நடிகர் பரத் ஜெயந்த் சென்னை பெசன்ட் நகரில் ஐஸ்கிரீம் கடை வைத்திருக்கிறார். அந்த கடை மூலம் அவருக்கு மாத வருமானம் எவ்வளவு கிடைக்கிறது தெரியுமா?
நிறைய குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி பிறகு பெரிய ஆளாக வருகிறார்கள். அதற்கு உதாரணம் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஷாலினி, ஷாமிலி, ஹன்சிகா உள்ளிட்டோர்.
அது போல் சிறு வயதில் நடித்தவர்கள் மாஸ்டர் மகேந்திரன், பரத் ஜெயந்த். பிரென்ட்ஸ் திரைப்படத்தில் பிளாஷ்பேக்கின் போது சிறு வயது விஜய்யாக நடித்திருந்தார். அது போல் வானத்தை போல திரைப்படத்திலும் அவர் சிறுவயது விஜயகாந்தாக (தம்பி விஜயகாந்தாக) நடித்திருந்தார்.

சிறுவயதில் பள்ளிக்கு செல்லும் போது அவரின் சைக்கிள் பஞ்சராகும் அப்போது பரத்தை பெரிய விஜயகாந்த் (டபுள் ஆக்ஷன் அண்ணன்- தம்பி) தலை மேலே உட்கார வைத்து தூக்கிச் சென்று பள்ளிக்கு கூட்டிச் செல்வார். மேலும் சில திரைப்படங்களிஸல் சிறுவனாக பரத் ஜெயந்த் நடித்திருந்தார்.
இவர் சன்டிவியில் ஒளிபரப்பான முதல் மெகா தொடரான வாரிசு என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பூம் பூம் ஷக்கலக்க உள்ளிட்ட சில சீரியல்களிலும் பரத் நடித்திருந்தார். எனினும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இவர் பெசண்ட் நகரில் The Tickle Truck எனும் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார்.
ஒரு வேனை கடை போல் மாற்றி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் நிறைய பேர் பேட்டி எடுத்து வருகிறார்கள். அவர்களிடம் பரத் கூறுகையில் சிறு வயதில் பல படங்களில் நடித்துள்ளேன், சீரியல்களிலும் நடித்துள்ளேன். அப்போதெல்லாம் வெளியே சென்றால் மக்கள் என்னை சூழ்ந்து கொள்வார்கள், பலர் என்னிடம் ஆட்டோகிராப் வாங்குவார்கள். இப்படி சிறிய வயதிலேயே அனைத்து புகழையும் அடைந்துவிட்டேன்.
சிறு வயதில் ஒரு ஐஸ்கிரீம் கடை வைத்து அதில் உள்ள எல்லா ஐஸ்கிரீம்களையும் சுவைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது அதுவே என் தொழிலாகிவிட்டது. என் கடைக்கு வரும் பலர் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். என்னிடம் பேசுவார்கள். சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. வாய்ப்பு கிடைக்க வில்லை என நான் சொல்ல மாட்டேன். நான் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை.

ஆனால் என் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் கடை நான் இல்லாவிட்டாலும் இயங்கும் என்ற நிலை வர வேண்டும். அதற்கு இன்னும் சில காலம் ஆகும். அந்த காலம் வந்ததும் நான் நிச்சயம் சினிமாவில் நடிப்பேன் என்றார். இவர் விஸ்காம் பட்டதாரி. இவர் பிரியமான தோழி படத்திலும் நடித்துள்ளார். லயோலா கல்லூரியில் படித்த இவர் சில காலம் மாடலாகவும் வலம் வந்தார். இந்த ஐஸ்கிரீம் கடை மூலம் இவருக்கு மாதம் ரூ 1 லட்சத்திற்கும் மேல் வருமானம் வருவதாக கூறுகிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications