விட்டதை பிடிக்குது விஜய் டிவி.. மணிமேகலை Vs பிரியங்கா.. குக் வித் கோமாளியில் திடீர்னு ஒரு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி சீசன் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த சீசனை துவங்க விஜய் டிவி மும்முரமாகி வருகிறது.. இதுகுறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வருகிறது. இதனால் விஜய் டிவி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.

விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாகவே ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி... காமெடிக்கு கொஞ்சமும் பஞ்சமே இல்லாத அளவுக்கு, சமையல் ஒருபக்கம், நகைச்சுவை மறுபக்கம் என ரசிகர்களை ஈர்த்திருந்தது.

television manimegalai priyanka

இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் மக்கள் தந்த ஆதரவால், அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன ஆனால், கடந்த 5வது சீசன்தான் தலைகீழான மாற்றத்தை தந்துவிட்டது. சண்டையிலும், சச்சரவுகளிலும் சிக்கிக் கொண்டது. இந்த சீசன் ஆரம்பத்திலிருந்தே இந்த சீசனில் நிறைய தடைகள் ஏற்பட்டன.

அதிர்ச்சி:
செப் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியை விட்டு வெளியே முதல் ஷாக்கை தந்திருந்தார்.. பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜை நடுவராக போட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்தும்கூட, சர்ச்சைகள் ஓயவில்லை.. ஒவ்வொருவராக வெளியேறி கொண்டேயிருந்தனர்.. கடைசியாக மணிமேகலையும் விலகிவிட, உச்சக்கட்ட விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டது.. அதுவும் சீசனின் இறுதிக்கட்டத்தில், மணிமேகலை விலகியது, விஜய் டிவி மீதான சலசலப்பை கூட்டிவிட்டது.

பலரும் சொன்னது போலவே, பிரியங்கா தேஷ்பாண்டே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. அந்தவகையில், கடைசிவரை பிரியங்காவை விஜய் டிவி விட்டுக் கொடுக்காமலேயே இருப்பது, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது...

சப்போர்ட்: ஏற்கனவே மணிமேகலை விவகாரம் விவாத பொருளாக மாறியிருந்த நிலையில், பிரியங்கா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளதும், விஜய் டிவி மீதான விமர்சனத்தை பெருக்கி வருகிறது. போதாக்குறைக்கு விஜய் டிவியின் பிரபலங்கள், பிரியங்காவுக்கான சப்போர்ட்டை வழங்குகிறேன் என்ற பெயரில் செருப்பு, துடைப்பம் என்று இன்ஸ்டாவில் பதிவுகளை போட்டது, விஜய் டிவிக்கே மைனஸாகிவிட்டதாக சொல்கிறார்கள்..

ஆக, மணிமேகலை - பிரியங்கா என்ற இரு தொகுப்பாளர்களின் பிரச்சனையாகவும் மட்டுமே இது இல்லாமல், ஒட்டுமொத்த விஜய் இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டிய பொறுப்பு விஜய் டிவிக்கு வந்துள்ளதாக தெரிகிறது. எனவே, இதற்கெல்லாம் தீர்வை தந்து, மக்களின் அதிருப்தியை போக்க வேண்டியதற்கான நடவடிக்கைகளில் விஜய் டிவி இறங்கியிருக்கிறதாம்.

விஜய் ஸ்டார்ஸ்கள் எல்லாரும் இணைந்து சமைக்க போகிறார்களாம்.. வழக்கமாக, "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில், கோமாளிகளும் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்த "குக்கிங் ஸ்டார்ஸ்" சமையலில் கோமாளிகள் பங்கேற்பார்களா? என்று தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியிலும், நடுவர்களாக செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் பங்கேற்க போவதாகவும், ரக்சன் தொகுத்து வழங்க போவதாகவும் சொல்கிறார்கள். இதில் ஜாக்குலினையும் களமிறக்க முடிவு செய்துள்ளார்களாம்.. பிரியங்காவால்தான், ஜாக்குலின், டிடி, ரம்யா என பலரும் விஜய் டிவியை விட்டு விலகி சென்றுவிட்டதாக சொல்லப்பட்டு வரும், அந்த அதிருப்தியை போக்கவும், ஜாக்குலினை உள்ளே கொண்டுவர திட்டமிடப்பட்டு வருகிறதாம்.

சறுக்கல்: மொத்தத்தில், குக் வித் கோமாளி, தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து, வேறு பாணிக்கு திரும்ப போவதாக தெரிகிறது.. ஒருவேளை, இப்படியொரு மாற்றம் நடக்கும் பட்சத்தில், அது மணிமேகலைக்கான வெற்றியாகவும், விஜய் டிவிக்கான சறுக்கலாகவே பார்க்கப்படும் என்கிறார்கள் இணையவாசிகள்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+