சம்சாரம் அது மின்சாரம் சரோஜினியா இது? இப்போ எப்படியிருக்கிறார்? ஆள வந்து காணாமல் போன நடிகை இளவரசி
சென்னை: நடிகை இளவரசியை ஞாபகமிருக்கா? அவர் இப்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: ஹிட்லர் அப்படின்னு ஒரு மலையாளப்படம். அதில் மம்முட்டிக்கு ஐந்து தங்கைகள். அதில் மூத்த தங்கை வயது ஆகிக் கொண்டிருக்கும். ஒரு மழை நேரத்தில் வயதான ப்ரபசரோடு உறவு ஏற்பட்டு விடும். ப்ரபசர் மம்முட்டியை அழைத்து தவறுசெய்து விட்டோம் எனச் சொல்லுவார். மம்முட்டி துணியோடு நிர்வாணமாக நிற்பதாக உணர்வார்.

மூத்த தங்கையை அடி வெளுத்து விடுவார். பின் தன் தங்கையின் வயதையும், ஏக்கங்களையும், வயதுக்குண்டான பிரச்சினைகளையும் புரிந்து கொண்டு "நீ உறங்கியோ நிலாவே..." எனப் பாடி சமாதானப்படுத்துவார். என்ன ஒரு அழகான காட்சிக்கான எழுத்து. அந்த மூத்த தங்கையாக நடித்தவர் இளவரசி... ஒரு நாட்டோட இளவரசி காணாமப் போனா தேடுவாங்க தானே....
ஆனா இந்த 'இளவரசி' காணாமப் போய் பல வருஷமாச்சு. ஆனா யாருமே தேடவில்லை.. 'சுமதி என் சுந்தரி'ன்னு ஒரு படம் சிவாஜி நடிச்சு வந்துச்சு. அதில் தேங்காய் சீனுவாசனுக்கு அசிஸ்டண்ட்டாக ஒரு நடிகர் நடித்தார். கக்கத்தில் எப்போதும் பேக் வச்சுக்கிட்டு தேங்காய் சார் கூடவே வருவார். அவர் பெயர் ஜம்பு. திரையுலகம் கண்டுக்காத ஒரு நடிகர் ஜம்பு.
ஜம்பு வீடு திருவல்லிக்கேணி. இந்த ஜம்புவுக்கு ஒரு மகள் இருந்தாங்க. பெயர் மஞ்சு. மகளை நடிகையாக்க ஜம்புவுக்கு ஆசை. மகள் குழந்தை நட்சத்திரமா நடிச்சாலும் நாயகியாக்கும் ஆசை மகளுக்கு பதினெட்டு வயசானதும் கொக்கரக்கோ படம் மூலமா நிறைவேறியது. கங்கை அமரன் 'கோழி கூவுது' ஹிட் கொடுத்திருந்த நேரம். அடுத்து எடுத்தது கொக்கரக்கோ. அவர் தான் மஞ்சுவின் பெயரை 'இளவரசி' என மாற்றினார்.
அதற்குப்பின் இளவரசி வெற்றி மேல் வெற்றியாக நடக்க ஆரம்பித்தார். கொக்கரக்கோ சுமார் தான். நாயகனாக அமர் அலைகள் ஒய்வதில்லையில் நடிச்ச பொடியனை ஹீரோவாக்கினார். படம் பெருவெற்றி இல்லை. ஆனாலும் இளவரசி ராமநாராயணன், விசுவோட ஆஸ்தான நாயகி மாதிரி ஆகிப்போனார். கடமை, மனைவி சொல்லே மந்திரம்னு ராமநாராயணன் இன்னிங்ஸை தொடங்கி வைத்தார்.
ஆர்.சுந்தர்ராஜன் 'நான்பாடும் பாடல்'னு ஒரு படம் எடுத்தார். நாயகன் சிவக்குமார். நாயகி அம்பிகாவோ விதவை கேரக்டர். ஆனா படத்தை துள்ளலோட கொண்டு போறது யாருன்னா இளவரசி-பாண்டியன் ஜோடி தான். இளவரசி மாதிரி விடலைப் பொண்ணுங்களை அப்போ நீங்க உங்க வாழ்க்கையில் பார்த்திருக்கலாம். பாண்டியனோடு அவர் நடிச்ச டூயட் 'மச்சானை வச்சுக்கடி...' மாதிரி இளமைத்துள்ளல் வேறு இருக்கா?
பாக்யராஜ் என்கிற மகா திறமைசாலியோடு 'தாவணிக் கனவுகள்' படத்தில் நடித்த போது சிவாஜி என்கிற மகா நடிகனோடு நடிக்கும் வாய்ப்பும் இளவரசிக்கு கிடைத்தது. ஆனால் பாக்யராஜ் சிவாஜியை ஆவக்காய் ஊறுகாய் போல பயன்படுத்தியது போல் இளவரசியை கோங்குரா ஊறுகாயாக பயன்படுத்தி இருப்பார். ராமநாராயணன் அசிஸ்டண்ட் சோழராஜன் தனி இயக்குனராகி 'அவன்' என ஒரு படமெடுத்த போது அதில் நாயகி இளவரசி தான்.
அதேப்போல் அசோசியட் குமரேசன் ராமராஜன் என்கிற பெயரில் 'மண்ணுக்கேத்த பொண்ணு' படமெடுத்த போது நாயகி யாருன்னா இளவரசி தான். அந்த அளவுக்கு இளவரசி ராமாநாராயணன் செட்டுகளில் செல்லப்பெண். மணிவண்ணன் நூறாவது நாள் ஹிட் கொடுத்து அடுத்து எடுத்த படம் 24 மணி நேரம் படத்தில் x.w.ராமரத்னம் என்கிற பெண் பித்தன் வில்லன் கேரக்டரை நமக்கு அறிமுகப்படுத்த முதல் காட்சியிலேயே மணிவண்ணன் இளவரசியைத்தான் பயன்படுத்தி இருப்பார்.
இளவரசி பள்ளி ஸ்போர்ட்ஸில் பங்கெடுத்து பரிசு வாங்கிய இளவரசியை கடத்தி வந்து Cat and mouse கேம்லாம் விளையாடி இளவரசியை கொல்வது அட்டகாசமான சீன். அந்த சீனை த்ரில்லராக்கியது இளவரசியின் நடிப்பு தான். விசுவின் சிதம்பர ரகசியம் படத்தில் நாயகியாக நடித்தும், பின் அவள் சுமங்கலி தான் படத்தில் சென்டிமெண்ட் விதவையாக நடித்ததும் விசு அடுத்த பரிமாணமாக தந்தது இளவரசிக்கு திமிர் பிடித்த பெண் கேரக்டர்.
திமிர் பிடித்த சரோஜினியை சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மறக்கமுடியுமா? அதே கேரக்டர் மலையாளத்தில் கொச்சின் ஹனீஃபா வாத்சல்யம் என்கிற படமெடுத்த போது அதில் இதே திமிர் பிடித்த மருமகளாக வந்து குடும்பத்தை பிரிப்பார். நல்ல நடிகையாக இருந்தும் தமிழ்சினிமா இவரை பாண்டியன், சுரேஷ், ஆனந்த்பாபு, எஸ்.வி.சேகர் போன்ற சிறிய நடிகர்களுக்கு ஜோடியாகவே வைத்திருந்தது.
இளவரசியை மஞ்சுளா சர்மாவாக்கி கன்னட படவுலகம் உயரங்களில் கொண்டு சென்றது. விஷ்ணுவர்த்தனோடு ஜோடியாக. நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனாலேயே தமிழை ஒதுக்கி தெலுங்கில் கல்பனாகவும், கன்னடத்தில் மஞ்சு ஷர்மாவாகவும் நிறைய படங்களில் நடித்தார். ஆனால் வாய்ப்புகள் படிப்படியாக குறைய குறைய இளவரசி 2007, 2008க்கு பிறகு காணாமல் போனார்.
திரையுலகை விட்டு ஒதுங்கி வாழும் இளவரசிக்கு வயது ஐம்பத்து நான்கு. கோபால் என்கிற வங்கி அதிகாரியை திருமணம் செய்து கொண்டு ஒரே மகளோடு அமைதியான குடும்ப வாழ்க்கையை சென்னை ஈசிஆரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் இன்றும் நிலவு தூங்கும் நேரம், கீதம்..சங்கீதம் பாடல்களின் மூலம் பசுமையாக நம்மோடு இளவரசியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆள வந்து காணாமல் போன இளவரசி... இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications