பிக்பாஸ் ஜேசன் மனைவி யார் தெரியுமா? ரகுவரன் போல மிரட்டியவர்.. சாந்தினியால் விமர்சனத்தில் சிக்கல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் ஜேசன் வந்ததிலிருந்தே அவருடைய பேச்சு, முகபாவனை, மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதம் என ஒவ்வொன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக ரகுவரன் பாணியில் அவர் பேசுவதையும், சில நேரங்களில் வில்லன் மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பதையும் பார்த்து அவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது. இப்போது அவருடைய குடும்பப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் அவருடைய விளையாட்டு குறித்த விவாதமும் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் போட்டியாளராகக் களமிறங்கியிருக்கும் ஜேசன் கௌஷி, மற்ற போட்டியாளர்களைப் போல இல்லாமல் தனக்கென்று ஒரு பாணியில் விளையாடி வருகிறார். இவர் ஒரு உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இசையிலும் ஆர்வம் கொண்ட இவர், 'ரவுடி டாடி' என்ற பெயரில் தனிப்பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் தனது திறமைகளைப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் இவருடைய நோக்கப
ரகுவரன் மாதிரி பேசும் ஜேசன்
ஜேசனைப் பற்றி பிக்பாஸ் ரசிகர்கள் பேசும்போது முதலில் குறிப்பிடுவது அவருடைய தனித்துவமான உடல்மொழியைத்தான். அவர் பேசும் விதம், மற்றவர்கள் பேசும்போது கொடுக்கும் ரியாக்ஷன், சில நேரங்களில் அமைதியாக இருந்து கவனிப்பது என எல்லாவற்றிலும் ஒரு வித்தியாசமான பாணி இருக்கிறது. இதனால் அவரை மறைந்த நடிகர் ரகுவரனுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரகுவரன் படங்களில் வில்லனாக வந்தால் அவருடைய வசன உச்சரிப்பும், முகபாவனையும் தனியாகத் தெரியும். அதேபோல ஜேசனும் பிக்பாஸ் வீட்டுக்குள் சில நேரங்களில் அமைதியாக இருந்து, சரியான நேரத்தில் பேசும் விதத்தால் ரசிகர்களிடம் கவனம் பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், தனக்கான விளையாட்டை விளையாடுகிறார் என்று கூறுகின்றனர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஒருவருக்கு ரசிகர்கள் கிடைப்பது எவ்வளவு சீக்கிரமோ, அதே அளவுக்கு விமர்சனங்களும் வந்துவிடும். இப்போது ஜேசனுக்கும் அதுதான் நடக்கிறது.
சாந்தினியுடன் அதிக பேச்சு
ஜேசன் தற்போது சாந்தினியுடன் அதிக நேரம் பேசுவது குறித்துதான் சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது, நீண்ட நேரம் ஒன்றாக அமர்ந்து பேசுவது, குறிப்பாக இரவு நேரங்களிலும் இங்கிலீஷில் பேசிக்கொண்டே இருப்பது போன்ற காட்சிகளைப் பார்த்த சில ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதைப் பார்த்த சிலர், வீட்டுக்குள் நடக்கும் மற்ற விஷயங்களை விட இவர்கள் இருவரின் உரையாடல்களே அதிகமாகக் காட்டப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்னும் சிலர், ஜேசனின் குடும்பத்தினரோ அல்லது சாந்தினியின் கணவரோ பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து இருவரிடமும் பேச வேண்டும் என்று தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் பழகும் விதத்தை நிகழ்ச்சியில் காட்டப்படும் காட்சிகளின் அடிப்படையில்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

ஜேசன் ஃபேமிலி போட்டோ
இப்படிப் பிக்பாஸ் வீட்டுக்குள் ஜேசனின் நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவருடைய குடும்பப் புகைப்படமும் இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது. ஜேசன் அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களும் சுசில் மீடியாவில் வைரல் ஆகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு காமன் மேன் நிகழ்ச்சியில் ஜேசன் கலந்து கொண்டிருந்தாலும் ஜேசன் குடும்பத்தை பற்றி பெரியதாக தகவல்கள் வெளியே தெரியாது. ஆனால் இப்போது அவருடைய குடும்ப ஃபோட்டோ பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications
