ரூ 35-க்கு மின்சார கொள்முதல் செய்யாவிட்டால் 3 மணி நேரம் மின்வெட்டு! நிர்மல் குமார் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ 35-க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்யவில்லை என்றால் மின்வெட்டு 2 முதல் 3 மணி நேரம் வரை அதிகரிக்கும் என மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ரூ 35 -க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வது என்பது குறுகிய கால ஏற்பாடுதான். நிரந்தரம் இல்லை. 15 நாட்களுக்கு மட்டும் வாங்க போகிறோம்.

Nirmal Kumar

இதற்காக ரூ 5 கோடி மட்டுமே கூடுதல் செலவு ஆகும். இந்த ரூ 35-க்கு மின்சாரம் கொள்முதல் செய்வதால் 1 லட்சம் கோடி இழப்பு என வதந்தி பரப்ப வேண்டாம். அதிக விலை கொடுத்து வாங்கக் கூடிய கியாஸ் பவர் மின்சாரம் இனி எதிர்காலத்தில் தவிர்க்கப்படும்.

தற்போது அனல் மின்சாரம் இருப்பு இல்லை என்பதால் கேஸ் பவரை அதிக விலைக்கு ரூ 35 -க்கு வாங்குகிறோம். இந்த கொள்முதலில் எந்த முறைகேடும், தவறும் நடக்காது. ஒரு யூனிட் ரூ 8 என்ற விலையில் அஸ்ஸாமிடம் இருந்து வாங்குகிறோம். நமது தேவையான 4500 மெகா வாட் மின்சாரத்தில் 3000 மெகா வாட் மின்சாரத்தை குறைந்த விலையில்தான் வாங்குகிறோம். ஆனால் 1500 மெகா வாட் மின்சாரம்தான் கிடைக்கவில்லை. இதனால் கேஸ் பவர் மின்சாரத்தை வாங்குகிறோம்.

அமைச்சராக இருந்த போது வசூலை மட்டுமே செந்தில் பாலாஜி பார்த்துக் கொண்டிருந்தார். மின்துறை சீரமைப்பை அவர் பார்க்கவில்லை. திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு மின்சார கொள்முதல் திட்டங்களையும் ரத்து செய்யவில்லை. மின்சார கொள்முதலில் உற்பத்தி தொடங்கிவிட்டால் இடையில் ரத்து செய்ய முடியாது என நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

ரூ 35-க்கு மின்சாரம் கொள்முதலை கண்டித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி கொடுத்த நிலையில் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். செந்தில் பாலாஜி தனது பேட்டியில் திமுக ஆட்சியில் எவ்வளவு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது, எவ்வளவு மின் உற்பத்தி செய்யப்பட்டது, தேவை போக வெளிமாநிலங்களுக்கு விற்கப்பட்டது எவ்வளவு உள்ளிட்டவை குறித்தும் விளக்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+