34 வயதில் திடீரென காலமான பிரபல நடிகர்.. திரையுலகில் எதிர்பாராத சோகம்! பின்னணி காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல அமெரிக்கத் தொடரான 'பிரேக்கிங் பேட்'டில் வால்டர் ஒயிட் ஜூனியராக நடித்த ஆர்.ஜே. மிட்டி 34 வயதில் உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவுச் செய்தி வெளியானதும், அந்த தொடரை பார்த்து ரசித்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வருத்தத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

பிரேக்கிங் பேட் தொடரைப் பார்த்தவர்களுக்கு வால்டர் ஒயிட் என்ற கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பிரையன் க்ரான்ஸ்டன் நடித்த அந்தக் கதாபாத்திரத்தின் மகனாக வால்டர் ஒயிட் ஜூனியர் என்ற பெயரில் நடித்தவர்தான் ஆர்.ஜே. மிட்டி. 2008-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்தத் தொடரின் 5 சீசன்களிலும் அவர் நடித்திருந்தார்.

பிரேக்கிங் பேட்

இந்தத் தொடரில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நெருக்கமான ஒன்றாக மாறியது. வால்டர் ஒயிட் தனது வாழ்க்கையில் பல தவறான முடிவுகளை எடுக்கும்போது, அவருடைய மகன் அதனால் பாதிக்கப்படுவதையும், குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களையும் கதை காட்டியிருக்கும். அந்தக் கதையில் மிட்டியின் நடிப்பு முக்கியமான இடத்தைப் பிடித்தது.

Hollywood RJ Mitte Tamil cinema web series

நிஜ வாழ்க்கையிலும் சவால்கள்

ஆர்.ஜே. மிட்டியை பற்றிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவருக்கு மூளை முடக்குவாதம் இருந்தது. பிரேக்கிங் பேட் தொடரில் அவர் நடித்த கதாபாத்திரத்துக்கும் இதே பின்னணி இருந்தது. தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தை நடிப்பில் இயல்பாகக் கொண்டுவந்ததன் மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்கு தனித்துவம் கொடுத்தார்.

நடிப்பை தாண்டியும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள், அவர்களுக்குச் சமமான வாய்ப்புகள் கிடைப்பது, பொழுதுபோக்கு துறையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிப்பது போன்ற விஷயங்களுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். யுனைடெட் செரிப்ரல் பால்சி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு பணிகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

அதனால், அவருடைய மறைவு ஒரு நடிகரை இழந்த சோகமாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தனது புகழைப் பயன்படுத்திய ஒருவரை இழந்துவிட்டதாகவும் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மரணம் குறித்து வெளியான தகவல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில்லில் ஆர்.ஜே. மிட்டி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 12-ம் தேதி பிற்பகல் அவர் உயிரிழந்ததாக கேமரூன் கவுண்டி அமைதி நீதிபதி சிண்டி ஹினோஜோசா தெரிவித்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும், பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வருத்தத்தில் ரசிகர்கள்

சில ஊடகங்களில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களில் மரணத்துக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை அந்தத் தகவலை உறுதியான முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. 34 வயது என்பது வாழ்க்கையில் இன்னும் பல சாதனைகளைச் செய்யக்கூடிய வயது. அந்த வயதில் மிட்டி உயிரிழந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+