கே.பி. சுந்தராம்பாளிடம் சுட்ட பழம் வேண்டுமா என கேட்டாரே மாஸ்டர் ஸ்ரீதர்! இந்த நடிகையின் கணவரா?
சென்னை: கந்தன் கருணை படத்தில் முருகனாக வேடமணிந்து கே.பி.சுந்தராம்பாளிடம் சுட்ட பழம் வேண்டுமா இல்லை சுடாத பழம் வேண்டுமா என கேட்டாரே மாஸ்டர் ஸ்ரீதர் , இவர் எந்த நடிகையின் கணவர் தெரியுமா? அது போல் அந்த நடிகையின் தங்கையும் நடிகைதானாமே!
இதுகுறித்து செல்வன் அன்பு தனது பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு நல்ல மருமகன் கிடைச்சா அந்த குடும்பம் எப்படி இருக்கும்? பேபி இந்திரா நமக்குத் தெரியும். அவர் தந்தை அவரை நடிகையாக்க வேண்டும் என தீர்மானித்து மூன்று வயதிலேயே பல மொழிகளையும், டான்ஸ் பாட்டெல்லாம் சொல்லிக் கொடுத்து நடிகையாக்கி விடுகிறார்.

அமிதாப் முதல் எம்.ஜி.ஆர், சிவாஜி கூட நடிச்ச இந்திரா எல்லோருக்கும் பிடிச்ச பேபி நடிகை. எம்.ஜி.ஆரோடு ஐந்தாறு படங்களில் பேபி இந்திரா நடித்திருக்கிறார். இந்திராவின் சிறந்த நடிப்பைப் பார்த்த எம்.ஜி.ஆர் தான் ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் முதலில் 'சிறந்த குழந்தை நட்சத்திரம்' என ஒரு கேட்டகிரியை உருவாக்கி அதில் முதல் பரிசை பேபி இந்திராவுக்கு கொடுக்கிறார்.
பேபி இந்திரா வளர்ந்ததும் கமல், பாக்யராஜ், ரஜினி இவங்களோடு நடிக்கிறார். இதில் ரஜினி-இந்திரா ஸ்பெஷல் என்னன்னா 'மூன்று முடிச்சு' படத்தில் ரஜினிக்கு தங்கை பேபி இந்திரா. பின் வளர்ந்து 'பாயும் புலி' படத்திலும் தங்கை பேபி இந்திரா. பாயும்புலி படத்தில் இந்திராவைக் கொன்றவர்களை பழி வாங்குவதே கதை. 'படிக்காதவன்' படத்தில் ரஜினியின் தங்கை ஃபரீதாவாக வருவார்.
சத்யா படத்தில் கமலின் தங்கை. வேறொரு ஸ்பெஷல் என்னன்னா அதில் அவர் தங்கை ராசியும் ஒரு தங்கையாக வருவார். சகோதரிகள் இருவருமே நடித்த படம் 'சத்யா'. சத்யா படம் நடிக்கும்போது இந்திராவின் தந்தை ராமச்சந்திரனுக்கு தன் மகள் பேபி அல்ல... குமாரி எனப் புரிகிறது. இனி நடிக்க வேண்டாம் என தீர்மானிக்கிறார். இந்திரா நான்கு மொழிகளிலும் நடிப்பவர்.
அப்போது 20 படங்களில் நடித்துக் கொடுக்க அட்வான்ஸ் வாங்கி இருந்தார் அவர் தந்தை. எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டு இந்திரா நடித்துக் கொண்டிருந்த ஒரு சீரியலுக்கு மட்டும் அனுமதி கொடுத்தார். அந்த சீரியலில் நாயகனாக நடித்துக் கொண்டிருந்தவர் மாஸ்டர் ஸ்ரீதர். மாஸ்டர் ஸ்ரீதர் நமக்குத் தெரியும். கந்தன் கருணை படத்தில் கே.பி.சுந்தராம்பாளிடம் 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' எனக் கேட்டவர்.
இந்திரா நடிப்பை நிறுத்திய சில மாதங்களுக்குப்பிறகு தந்தை ராமச்சந்திரன் இந்திராவிடம் வந்தார். "உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன். வேறு யாருமில்லை. ஸ்ரீதர் தான்" எனச்சொல்ல அப்பாப் பிள்ளையான இந்திரா 'உங்க இஷ்டம்பா' என்கிறார். திருமணம் இனிதாக நடக்க பேபி இந்திரா 'இந்திரா ஸ்ரீதர்' ஆகிறார். ஆனால் விதி வசத்தில் தானே வாழ்க்கை. இரண்டு மாதம் கழித்து தந்தை இறக்கிறார்.
இனி ஸ்ரீதர் மூத்த மகளான இந்திராவுக்கு துணையாக நிற்கிறார். இந்திராவின் ஒரு தம்பியை நமக்குத் தெரியும். 'எங்க மாமா படத்தில் திக்கி திக்கிப்பேசி சேஷ்டைகள் செய்யும் சிறுவன். அதிலேயே இந்திராவின் தங்கை லக்ஷ்மியும் ஒரு குழந்தையாக நடித்திருப்பார். இன்று தம்பி சென்னையில் பிஸினஸ் செய்கிறார். தங்கை லக்ஷ்மியை டெல்லியில் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார் ஸ்ரீதர்.
இந்திராவின் மற்றொரு தம்பி செந்தில் விஜய்காந்தின் 'வேங்கையின் மைந்தன்' படத்தில் சிறுத்தையோடு சிறுவனாக நடித்திருப்பார். அவர் படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டிலாக ஸ்ரீதர் தான் காரணம். இந்திராவின் மற்றொரு தங்கையான ராசியை தன் தம்பிக்கே திருமணம் செய்து வைக்கிறார் ஸ்ரீதர்.
இவர்கள் ஒரு மகனோடு சென்னையில் இருக்கிறார்கள். அதைப்போல் தன் தங்கையை இந்திராவின் தம்பிக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார். ஆன்மீகப்படங்களில் நடித்ததாலோ என்னவோ ஸ்ரீதர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கும், திருப்பணிகளுக்கும் நிறைய பண உதவி செய்திருக்கிறார். ஆன்மீகச் சொற்பொழிவுகளில் வல்லவர். ஸ்ரீதர் Zee tamil தொடங்கிய போது அதில் ஆன்மீகத்தைப்பற்றி, கோவில்கள் பற்றிப்பேசும் எபிஸோடுகளைப் பார்த்திருக்கிறேன்.
மாஸ்டராக நடித்து நல்லப்பெயர் பெற்ற ஸ்ரீதர் நாயகனாகவும் நடித்தார். ஸ்ரீதர் நாயகனான'குறத்தி மகன்' படத்தில் கமல், ஸ்ரீதரின் நண்பனாக சிறு ரோல் செய்து விட்டு வீட்டில் வந்து ஏமாற்றப்பட்டதாக கமல் அழுததாக கதை உண்டு. காலம் கமலை சினிமாவில் நாயகனாக்கியது. வீடுகள் கட்டிக் கொடுக்கும் ப்ரமோட்டர் கம்பெனி தொடங்கிய ஸ்ரீதர் , இந்திராவுக்கு தன் பிஸினஸை சொல்லிக் கொடுத்தார். சென்னை, கோவை, பெங்களூரு பகுதிகளில் ஸ்ரீதரின் கம்பெனி கட்டிய வீடுகள் உண்டு. இரண்டு மகன்கள். பிஸினஸ் மட்டுமல்லாது ஆன்மீகம், மொழி, தொழில் என நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீதரின் வீட்டினரும், இந்திராவின் வீட்டினரும் நல்ல விதமாக செட்டிலாக ஸ்ரீதர் நிறைய உழைத்திருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஸ்ரீதர் மறைந்து போக இந்திரா அதிலிருந்து மீண்டு மகன்களோடு சென்னையில் வசிக்கிறார். சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருக்கிறார். ஸ்ரீதர் மிகச்சிறந்த மருமகன். நல்ல மனம். ஆன்மீகவாதி. சினிமா கை கொடுக்கவில்லையென்றாலும் தன் மாமனாரின் கடமைகளை செய்து விட்டு சென்றிருக்கிறார். நல்ல மனம் வாழ்க.... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications