எதிர்நீச்சல்! குணசேகரன் அன்ட் கோ-வை அலறவிடும் அப்பத்தா.. கமல் பட நடிகை, யார் இந்த பட்டம்மாள்?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் அப்பத்தா பட்டம்மாள் குறித்து கடந்த இரு நாட்களாக நெட்டிசன்கள் தேடி வருகிறார்கள்.
எதிர்நீச்சல் எனும் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக போகிறது. ஜனனியை வீட்டை விட்டு துரத்திய குணசேகரன் அன்ட் கோ, தற்போது குந்தவை எனும் சிங்கப்பூர் பணக்கார வீட்டு பெண்ணை தம்பி சக்திக்கு வளைத்து போட நினைத்தார்கள்.
இதற்காக தந்திரமாக குந்தவையிடம் பேசி முதல் திருமணத்தை மறைத்து தாலி கழுத்தில் ஏறும் நேரத்தில் திடீரென ஜனனி வந்து தமக்கும் சக்திக்குமான தொடர்பு குறித்தும் குணசேகரன் எப்படிப்பட்டவர் என்பது குறித்தும் புட்டு புட்டு வைத்துவிட்டார்.

நாக்கு
குந்தவை நாக்கை பிடுங்குகிற மாதிரி கேட்பதும் அதற்கு குணசேகரன் அசிங்கப்படுவதும் அதற்கு ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி ஆகியோர் நமட்டு சிரிப்பு சிரிப்பதும் என கதைக்களம் நகர்ந்தது. இந்த சீரியலில் திடீர் திருப்பமாக பட்டம்மாள் எம்ஏ என தான் படித்த கல்லூரிக்கு ஜனனியை அழைத்து செல்கிறார் குணசேகரனின் அப்பத்தா.

ஆணாதிக்கம்
அங்கு வைத்து ஆணாதிக்க சமூகத்தினால் தான் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டேன் என்பதை விளக்குகிறார். வெளியூர் செல்ல இருந்த ஜனனியை தடுத்து நிறுத்து மீண்டும் தனது வீட்டிற்கே அழைத்து வருகிறார். அவரை குணசேகரன் உள்ளிட்டோர் விரட்டுகிறார்கள். அப்போது 4 மருமகள்களையும் ஓட ஓட விரட்டும் சத்யபிரியாவை அவரது மாமியாரான அப்பத்தா விரட்டுகிறார்.

சொத்துகள்
குணசேகரன் சேர்த்த சொத்துகள் எப்படி வந்தது, யார் கொடுத்தது, அவருடைய நிறுவனத்தில் தனக்கு இருக்கும் 40 சதவீத பங்குகள் குறித்தும் பட்டம்மாள் கூறியதால் கதை விறுவிறுப்பாக செல்கிறது. சத்யபிரியாவையும் குணசேகரனையும் பட்டம்மாள் கடுமையாக பேசிய காட்சிகளை பார்த்த ரசிகர்கள் யார் இந்த பட்டம்மாள் என்றும் அவருடைய எதார்த்தமான நடிப்பு குறித்தும் பேசி வருகிறார்கள்.

அதிரடி
அந்த வகையில் சீரியலில் அதிரடி திருப்பத்தை கொண்டு வந்த பட்டம்மாள் யார் என்பதை பார்ப்போம். அவரது உண்மையான பெயர் பம்பாய் ஞானம். மேடை நாடக கலைஞர். இவர் 1989 இல் மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழுமத்தை தொடங்கினார். அதாவது பெண்களுக்கான பிரத்யேகமாக தொடங்கியது பாராட்டும் வகையில் ஞானம் குறித்து பேச வைத்தது.

கோலங்கள்
இவர் கோலங்கள், மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட சீரியல்களிலும் நளதமயந்தி, வெயில், ஜிகர்தண்டா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி திரைப்படத்திலும் நடித்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

10 ஆண்டுகள் கழித்து ரீஎன்ட்ரி
10 ஆண்டுகள் கழித்து தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். அப்பத்தா பின்னி பெடலெடுக்கிறார் என நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள். இவர் குறித்து 80ஸ் கிட்ஸ்களுக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கும் தெரிந்த நிலையில் 2கே கிட்ஸ் இவர் குறித்து இணையத்தில் தேடி வருகிறார்கள். மேடை நாடக கலைஞரான அப்பத்தாவின் நடிப்பை சொல்லவா வேண்டும்?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications