நேற்றிருப்பார் இன்றில்லை.. மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜியின் சகோதரர் இந்த நடிகரா? சுவாரஸ்யம்
சென்னை: மறைந்த நடிகர் ஆர். எஸ். சிவாஜியின் சகோதரரும் ஒரு நடிகரும் இயக்குநருமாவார். அவர் யார் தெரியுமா. இவரையும் எல்லா கமல்ஹாசன் படங்களிலும் பார்க்க முடியும்.
நடிகர் ஆர் எஸ் சிவாஜி 1981 ஆம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், சத்யா, ஜீவா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

எனினும் 1989 இல் இவர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை வயிறு குலுங்கி சிரிக்க வைத்தது. அந்த படத்தில் ஒரு லாரியில் கிடைக்கும் உடலை வைத்து யார் கொன்றார்கள் என கண்டுபிடிக்கும் போலீஸாக ஜனகராஜும் அவருடன் ஆர்.எஸ்.சிவாஜியும் சேர்ந்து நடித்திருப்பர். இதில் ஜனகராஜ் கொலை குறித்து ஒவ்வொரு விஷயங்களையாக கண்டுபிடித்து சொல்வார்.
அத்தனை அபத்தமாக இருந்தாலும் அதற்கெல்லாம் ஜனகராஜை பாராட்டும் அளவுக்கு எங்கேயோ போய்ட்டீங்க சார் என இவர் பேசும் வசனம் பிரபலமாகும். அதன் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் ஒவ்வொரு படங்களில் ஆர்.எஸ்.சிவாஜி இருப்பார், அண்மையில் நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்திருந்தார்.
அது போல் 2021 ஆம் ஆண்டு சாய் பல்லவி நடித்த கார்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் நிழல்கள் ரவி, சுரேஷ் ஆகியோருடன் பங்கேற்றிருந்தார். அதில் அபூர்வ சகோதரர்கள் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் நேற்றைய தினம் சென்னை உலக சினிமா விழாவில் கலந்து கொண்டு நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொணடார். இந்த நிலையில் இவர் உயிரிழந்திருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவருடைய சகோதரரும் நடிகராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர்தானாம். அவர் வேறு யாருமில்லை சந்தானபாரதி. கரகாட்டக்காரன் படத்தில் கனகா மீது ஆசைப்படும் அதே வில்லன்தான். கமல்ஹாசனுக்கு சந்தான பாரதி நெருங்கிய நண்பர். இன்றும் ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் தலைமையில் நடக்கும் மீட்டிங்கில் சந்தான பாரதி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications