ஒரே படத்தில் விஜய் அஜித்துடன் ஜோடி போட்ட ஒரே நடிகை.. இந்திரஜாவின் கணவர் இவர்தானா? 6 ஆண்டு காதல் கதை!
சென்னை: ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்த இந்திரஜாவை நினைவிருக்கிறதா? அவரது கணவரை பார்த்துள்ளீர்களா?
சினிமா துறையில் நடிகர், நடிகைகளுக்கு உழைப்பா, அதிர்ஷ்டமா, விதியா என்ற கேள்வி நிறைய உண்டு. சுமாராக நடிப்பவர்கள் தங்களின் அதிர்ஷ்டத்தால் சூப்பராக வலம் வருவதும், நல்ல உழைப்பு இருந்தும் துரதிருஷ்டத்தால் தத்தி தடுமாறுவதும் உண்டு.

இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அதிலும் நடிகைகளை சொல்லவே வேண்டாம். அவர்களுக்கான கதைக்களம் இருந்தால் மட்டுமே அவர்களால் நிலைத்திருக்க முடியும் என்பது ஒரு விதி. இந்த விதி வொர்க் அவுட் ஆனால் அவர்களது கொடி தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும். இல்லாவிட்டால் மார்க்கெட் இழந்து நிற்பர்.
19 வயது: அந்த வகையில் தனது 19 வயதில் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை இந்திரஜா. இவர்களது பூர்வீகம் கேரளா. ஆனால் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். அதாவது வடசென்னை. இவர் வடிவுடையம்மன் கோயில் அருகே தனது குடும்பத்தினருடன் குடியிருந்தார். இவர் தனது துறையில் ஏற்பட்ட அனுபவங்களை தனியார் யூடியூப் சேனலுக்கு தெரிவித்துள்ளார்.

பேட்டியில் கூறிய இந்திரஜா: அவர் கூறியிருப்பதாவது: எனது தாய் மியூசிக் டீச்சர். தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நாங்கள் முதலில் கேரளாவில் இருந்தோம். அதன் பிறகு சென்னைக்கே வந்துவிட்டோம். நான் பரதநாட்டியம் கற்றுள்ளேன். நான் சில நாடகங்களில் கூட நடித்துள்ளேன். எனது போட்டோ ஷூட்டை பார்த்துவிட்டு என்னை தெலுங்கு படத்திற்காக அணுகினார்கள்.
குடும்ப சூழல்: குடும்ப சூழல் காரணமாக 9 ஆம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிக்கத் தொடங்கினேன். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். அது போல் தமிழில் ராஜாவின் பார்வையிலேதான் முதல் படம். இந்த படத்தில் அஜித்- விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளேன்.
கிளைமாக்ஸ் சீன்: அந்த படத்தில் கடைசி கிளைமாக்ஸ் காட்சியின் போது ஒரு வீட்டை ரவுடிகள் கொளுத்திவிடுவார்கள். அந்த வீட்டின் பின்பக்கத்தில் உள்ள கதவை உடைத்து கொண்டு நான் வெளியே வர வேண்டும். இதுதான் சீன். கேமராமேன், டைரக்டர், நடிகர்கள் எல்லாம் வீட்டின் முன் பக்கத்தில் இருக்கிறார்கள். நான் பின்பக்கம் கதவை திறக்க முடியாமல் நெருப்பில் சிக்கிக் கொண்டேன். பின்பக்கம் ஸ்டன்ட் கலைஞர்கள் கதவை உடைத்து கொண்டு வருமாறு கூறுகிறார்கள்.

கதவை உடைத்த கலைஞர்கள்: ஆனால் என்னால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து வெளியே என்னை எடுத்தார்கள். அந்த சம்பவத்தை நான் மறக்கவே மாட்டேன். நானும் முகமது அப்சரும் காதலித்தோம். எங்கள் வீட்டில் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். ஆனால் அப்சர் வீட்டில் ஒப்புக் கொள்ளவில்லை. அதாவது சினிமா நடிகை என்றால் குடும்ப வாழ்க்கைக்கு செட் ஆக மாட்டார், குழந்தை வளர்ப்பு, வீட்டு பொறுப்பை ஏற்க மாட்டார் என்ற ஒரு நெருடல் சிலருக்கு இருக்கும்.
6 ஆண்டுகள் காத்திருப்பு: அவர்கள் சம்மதம் தெரிவித்தவுடன்தான் திருமணம் என 6 ஆண்டுகள் காத்திருந்தோம். தற்போது நான் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்துவிட்டு எனது மாமியாரும், மாமனாரும் எதுவாக இருந்தாலும் அப்சரை விட எனக்குதான் முதலில் போன் செய்வார்கள். என்னிடம்தான் முதலில் எந்த விஷயத்தையும் சொல்வார்கள். எனது கணவருக்கு கெட்ட பழக்கங்கள் இருக்கக் கூடாது என விரும்பினேன். நான் விரும்பியதை போலவே அப்சர் இருந்தார்.

நான் சைவம்: அதனால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நான் திருமணமானதும் போட்ட முதல் கண்டிஷனே, நான் சுத்த சைவம். வீட்டில் அசைவம் சமைக்கக் கூடாது என்பதுதான். அதை இன்று வரை பின்பற்றுகிறார்கள். எங்களுக்கு ஒரே மகள் உள்ளார், அவர் பெயர் சாரா. டெலிவிஷன் வாய்ப்புகள் வந்தன. நான் எதையும் ஏற்கவில்லை. குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும். இவ்வாறு நடிகை இந்திரஜா தெரிவித்தார்.
பாண்டவர் இல்லம்: நடிகை இந்திரஜாவின் கணவர் முகமது அப்சர். இவர் நிம்மதி உங்கள் சாய்ஸ் எனும் தொடரில் நடித்துள்ளார். கடந்த 1998ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடித்து கொண்டிருக்கிறார். இவர் செல்வி, அகல்யா, சொந்தம், தாமரை, இனிய தோழியே, பொம்மலாட்டம், பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் நல்ல சுந்தரமாக நடிகை ரோஷிணியின் கணவராக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications
