Coolie: "கூலி" உபேந்திராவின் மனைவியும் ஒரு நடிகையாமே! அஜித்தின் "கடைசி படத்தில்" நடித்தாராமே!
சென்னை: கூலி திரைப்படத்தில் நடிக்கும் கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவி யார் தெரியுமா? அவர் தமிழில் அஜித் படத்தில் நடித்துள்ளாராமே! யார் இவர் என்பதை பார்க்கலாம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் கூலி எனும் திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் உபேந்திரா கூலியாக நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவில் உபேந்திரா பேசுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் ரஜினிகாந்தை பார்த்தேன். அன்று முதல் இன்று வரை அவர் மாறவே இல்லை. அப்படியே இருக்கிறார்.
அவரை நான் பாலோ செய்து வருகிறேன். ஹாலிவுட், பாலிவுட்டில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், முதல் நாள் முதல் காட்சியில் அதிக ரசிகர்கள் கூட்டம் வருவது இவருடைய படத்திற்குத்தான் என உபேந்திரா தெரிவித்தார்.
பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்த கூலிக்கு அட்வான்ஸ் புக்கிங் நடந்து வருகிறது. கேரளாவில் தியேட்டரில் கேட்டை திறந்ததுமே ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கும் நிலை உள்ளது. ஒரு மணி நேரத்தில் 50,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. கூலி முன் பதிவு டிக்கெட் விற்பனையில், கேரளாவில் மட்டும் ₹3 கோடி வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூலி படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருப்பதால் ஐநாக்ஸ், பிவிஆர், ஏஜிஎஸ் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கூலி படத்திற்கு 18 வயதிற்குள்பட்ட குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என போர்டு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்பதை நிரூபிக்க அடையாள அட்டை கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஜினிகாந்துக்கு சின்ன குழந்தைகள் ஏராளமானோர் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் இதனால் வசூலில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக உபேந்திரா தனது வீட்டில் ஒரு பூஜையை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் உபேந்திராவின் மனைவி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருடைய மனைவி பெயர் பிரியங்கா திவிவேதி. இவர் கொல்கத்தாவில் பிறந்தவர். அமெரிக்கா, சிங்கப்பூரில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர்.

இவர் பெங்காலி படத்தில் நடித்துள்ளார். அது போல் தமிழில் ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஜனனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜா படத்தில் அஜித், ஜோதிகாவுடன் பிரியங்காவும் நடித்திருந்தார். இந்த படம்தான் அஜித்தின் கடைசி காதல் படம். அதன்பிறகு அவர் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ரா, எச்2ஓ ஆகிய படங்களில் நடித்த கன்னட நடிகர் உபேந்திராவை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, ஆயுஷ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications