Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜென்டில்மேன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகரா? கிளைமாக்ஸ் சீனுக்கு பயந்த அர்ஜுன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜென்டில்மேன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அர்ஜுன் இல்லையாம். அவருக்கு பதில் யார் நடிக்கவிருந்தார் தெரியுமா? அது போல் கிளைமாக்ஸ் சீனுக்கு அர்ஜுன் பயந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்படி எதற்காக பயந்தார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து செல்வன் அன்பு கூறியிருப்பதாவது: ஜென்டில்மேன் .... எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குனராக இருந்தவர் டிஎம்ஈ பட்டயதாரி சங்கர். சங்கர் உதவி இயக்குனராக பவித்ரனிடம் இருந்த போது கதை ரெடி செய்து கொண்டு காத்திருந்தார்.

குஞ்சுமோனும், பவித்ரனும் வசந்தகால பறவைகள் எடுத்தனர். ஹீரோ ரமேஷ் அரவிந்தை விட வில்லன் சரத் பேசப்பட்டார். அது ஹிட். உடன் அவரை ஹீரோவாக்கி சூரியன் படத்திற்கு பூஜை போட்டனர் பவித்ரன்- குஞ்சுமோன்- சரத் டீம். மூவர் கூட்டணியில் சூரியன் சூப்பர் ஹிட்டாக அடுத்து மூவர் கூட்டணியில் ஐ லவ் இந்தியா (அப்போது வேறு பெயர்..'இன்டியா டுடே' என நினைக்கிறேன்...) என்ற படம் பூஜை போடப்பட்டது.

சூட்டிங் காஷ்மீரில். தர்க்கத்தில் குஞ்சுமோனுக்கும், பவித்ரனுக்கும் லடாய் ஏற்பட இருவரும் பிரிந்தனர். பவித்ரன் பக்கம் சரத் போய்விட ஐ லவ் இந்தியா என்ற பெயரில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியை அணுகினார். அவர் தயாரிப்பில் 'ஐ லவ் இந்தியா' எடுக்கப்பட்டது.

கோபம் கொண்ட குஞ்சுமோன், பவித்ரனிடமிருந்து சங்கரை அழைத்து கதை கேட்க ஜென்டில்மேன் உருவானது. சரத்துக்கு அட்வான்ஸ் கொடுத்ததால் அவரை அழைத்தார்கள். அவர் பவித்ரனோடு போய் விட்டார். அப்போது தான் அர்ஜுன் கொண்டு வரப்பட்டார்.

அர்ஜூன் 'கோகுலம்' என்ற படத்தில் ரிட்டர்ன் ஆகியிருந்தார். ஜென்டில்மேன் வந்தது 93 july 30ல்... அப்போது அது ஒரு ட்ரெண்ட் செட்டிங் படமானது... பின் இதே சாயலில் நிறைய படங்கள் இறங்கின... பெயர் கூட அதே சாயலில் லக்கிமேன் போன்றெல்லாம் வைத்தார்கள்....

சங்கரின் இந்தக் கதையை நிறைய தயாரிப்பாளர்கள் டப்பிங் படம் போல இருக்கிறது என ஒதுக்கிவிட்டார்கள். குஞ்சுமோன் ஏற்றுக் கொண்ட போதே சில மாற்றங்களை சொன்னார். சங்கர் நடிகர் ராஜசேகரை சஜஸ்ட் செய்ய அது நடைபெறாமல் அர்ஜுன் வந்தார்.

பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். படத்தின் காட்சிகளும் புதுமை. கிளைமாக்சில் பிரேமதாசாவின் கொலை சம்பவம் போன்று காட்சி அமைக்க சொன்னார் குஞ்சுமோன். அதற்கு அர்ஜுன் ஒத்துக் கொள்ளவில்லை. எல்லா கிரெடிட்டும் அந்த சைக்கிள் கொலைகார சிறுவனுக்கு போய்விடுமோ என பயம்.

கடைசியில் குஞ்சுமோன் சொன்னது போல் படமாக்கப்பட்டு அந்த காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது.... இசை, ரஹ்மானின் பாடல்கள், கவுண்டமணி-செந்தில் காமெடி, அர்ஜுனின் சண்டை காட்சிகள்.. பல சுவைகளில் மனதில் நிறைந்தான் ஜென்டில் மேன்.... சங்கர் ஷங்கரானார்....

படம் ஹிட்டானதும் குஞ்சுமோன் ஒரு அபார்ட்மென்ட்டும், மாருதி காரும் பரிசாக கொடுத்தார். காதலன் பூஜையும் போடப்பட்டது... கோவிந்தா மும்பையிலிருந்து பறந்து வந்து ஹிந்தி ரைட்சுக்கு அணுகும் முன்பே அதை அல்லு அர்விந்த் சிரஞ்சீவிக்காக வாங்கியிருந்தார்...

arjun gentleman climax scene gentleman movie who is gentleman

அன்று பவித்ரன் மட்டும் போகாமலிருந்தால் ஷங்கர் என்கிற இயக்குனர் வேறு பரிமாணத்தில் வேறு ரீதியில் சில காலம் கழித்து கிடைத்திருப்பார்... ஆனாலும் ஷங்கர் நல்ல என்டர்டெயினராக தன்னை வளர்த்துக் கொண்டு விட்டார் பின்னாளில்... கமல் மற்றும் சுஜாதாவுடனான நட்பு அவரை வேறு பரிமாணத்தில் சிந்திக்க வைத்தது...

பாவம் சரத். ஐ லவ் இந்தியா ஊற்றிக் கொண்டது. அவருக்கோ ஆதித்யன், ஊர்மரியாதை, கட்டபொம்மன் போன்ற ஒரே மாதிரி வாய்ப்புகளே வந்தது. நாட்டாமை வரும் வரை.... ஒருவரின் முடிவு தான் அடுத்தவரின் ஆரம்பம்... முடிவு= முடிவெடுத்தல்..... என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+