குக் வித் கோமாளி சீசன் 4.. Ticket to Finale வென்ற போட்டியாளர்.. ரசிகர்கள் ஆரவாரம்.. யாரா இருக்கும்?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ticket to Finale சென்றது யார்? என்பது தெரியுமா?
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சீசன்களில் ரக்ஷனே தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கெனவே 3 சீசன்களில் கோமாளியாக இருந்த மணிமேகலை 4 ஆவது சீசனில் சில வாரங்கள் மட்டுமே வந்த நிலையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிஷோர் ராஜ்குமார், காளையன், ராஜ் அய்யப்பா, விஜே விஷால், ஷெரின், கஜேஷ், ஆன்டிரியானே ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள கிரண், ஸ்ருஷ்டி, விசித்திரா, மைம் கோபி, சிவாங்கி ஆகியோருக்கிடையே போட்டி நிலவுகிறது. இந்த சீசனில் வெல்ல போவது யார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள். இதில் விசித்திரா, மைம் கோபி, ஸ்ருஷ்டி ஆகியோர் சிறப்பாக சமைப்பதாக செஃப்களே பல முறை கமென்ட் கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் இந்த வாரம் Ticket to Finale ரவுண்டில் விசித்திரா ஜெயித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகும் போதுதான் தெரியவரும். விசித்திரா ஏற்கெனவே கேரளாவில் ஹோட்டல் வைத்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இவர் செஃப் பட்டுடன் சமையல் கலையை விசித்திரா படித்ததாகவும் ஏற்கெனவே பட் அறிவித்திருந்தார். எனவே விசித்திராவுக்கு இந்த டிக்கெட் டூ ஃபினாலே கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் குக் வித் கோமாளி டைட்டில் வின்னராகும் அனைத்து தகுதியும் விசித்ராவுக்கு இருப்பதாகவும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications