பாடகியின் கட்டுப்பாட்டில் ஜெயம் ரவி? "சலான்" மூலம் கசிந்த ரகசியம்? இந்த ஆதாரம் நிஜமா? பரிதாப ஆர்த்தி
சென்னை: ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினரின் பிரிவுக்கு காரணமே பிரபல பாடகிதான் என்று முணுமுணுக்கப்பட்டு வரும் நிலையில், தம்பதி இருவரும் விரைவில் இணைய வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
ஜெயம் ரவி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளதையடுத்து, தம்பதிக்குள் எதனால் பிரிவு? என்பது இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.. மருமகனை வைத்து படம் தயாரிக்க முயன்ற மாமியார் சுஜாதா விஜயகுமாரிடம் சம்பள விவகாரம் தொடர்பாக இந்த பிரச்சனை வெடித்ததாக சொல்கிறார்கள்.

பிரபல பாடகி: ஆனால், சம்பள விவகாரம் அப்படியே அமுங்கி, அதற்கு பதிலாக ஜெயம் ரவி பக்கம் விவகாரம் திரும்பிவிட்டது. அப்போதுதான், பாடகி பற்றின தகவலும் றெக்கை கட்டி இணையத்தில் பறக்க ஆரம்பித்தது.
பெங்களூரை சேர்ந்த பாடகி ஒருவருடன் ஜெயம் ரவி நெருக்கமாக இருந்து வருவதாக கூறுகிறார்கள். இந்த பாடகி தமிழ் படங்களிலும், ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.. ஆன்மீக மன வளர்ச்சியாளராகவும் வலம் வருபவர்.
பப்புகளில் பாடி வருவதால், கோவாவிலுள்ள பப்புகளிலும் பாடி வந்திருக்கிறார். அப்போதுதான் ஜெயம் ரவிக்கு நட்பானதாக சொல்கிறார்கள். திருமணத்திற்கு முன்பேயே ஜெயம் ரவிக்கு நட்பு இருந்ததால், பாடகியுடன் பலமுறை கோவா சென்று வந்ததாகவும் கூறுகிறார்கள்.
பாடகி கோவா: இதுகுறித்து பிரபல தமிழ் செய்தி நிறுவனம் ஆதாரப்பூர்வமாக சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில்கூட, அதாவது கடந்த ஜுன் 24ம் தேதி, தன்னுடைய காரில் பாடகியுடன் கோவா சென்றிருந்தாராம் ஜெயம் ரவி..
காருக்குள்ளே இருப்பது, வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கார்களில் போடப்படும் டின்ட், கோவா அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் கோவா போலீஸ் அபராதம் விதித்துள்ளது..
அதேபோல, அதிக வேகத்தில் காரை ஓட்டியதற்காகவும் அபராதம் செலுத்தியிருக்கிறாராம் ஜெயம் ரவி. விலை உயர்ந்த சொகுசு கார் ஜெயம் ரவியின் பெயரில் பதிவாகியிருக்கிறதாம்.. ஜுன் 24ம் தேதி ஒரு அபராதமும், ஜூலை 14ம் தேதி ஒரு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டிற்குமான "சலானை" அந்த செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டிருப்பது, மிகுந்த பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
சலான் ஆதாரம்: அந்த சலானில், ஜெயம் ரவி பெயர் இருப்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.. இந்த சலான் பில்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதேபோல, பாடகியின் போன் நம்பரை ஆய்வு செய்தபோது, அதில், அவரது கெனிஷா ரவி என்றே அவரது நிஜப்பெயர் தெரியவந்துள்ளது.
இவ்வளவும், ஜெயம் ரவியின் திருமணத்தன்று நடந்துள்ளதால்தான், விஷயம் பெரிதாகிவிட்டதாகவும், இந்த கோவா விவகாரம் ஏற்கனவே ஆர்த்தி காதுகளுக்கு எட்டியதால்தான், மனம் உடைந்து, தன்னுடைய இன்ஸ்டா போட்டோக்களை ஆர்த்தி நீக்கியதாகவும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, சென்னையில் தங்க பிடிக்காமல் கோவா, பெங்களூர் என்றே ஜெயம் ரவியின் சுற்றுப்பயணம் இருந்தது ஆர்த்தியை கவலைக்குள்ளாக்கி விட்டதாம்.,

குழப்பம்: இரு மகன்களும் அப்பாவை கேட்டு தொந்தரவு செய்ய, "அப்பா, ஷூட்டிங் சென்றுள்ளார்.. திருமண நாளுக்கு வந்துவிடுவார்" என்று ஆர்த்தி குழந்தைகளை சமாதானம் செய்தாராம். ஆனால், அந்த நாளில்தான் மேற்கண்ட சம்பவங்கள் நடைபெற்றதால், அதிருப்திக்கு ஆர்த்தி ஆளாகிவிட்டாராம்..
இதையடுத்து, ஜெயம் ரவியின் குடும்பமும், ஆர்த்தியின் குடும்பமும் தம்பதியை சேர்த்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஜெயம் ரவி யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை என்றும், பாடகியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதாகவும், எனினும் குடும்பத்தின் முயற்சி தொடர்வதாகவும், அதே பிரபல செய்தி நிறுவனத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன...
இணைவார்களா?: இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா? என்று தெரியவில்லை.. காரணம், இதுவரை ஜெயம் ரவி மீது எந்தவிதமான கிசுகிசுக்களும் வந்ததில்லை.. அதனால் பலரும், இது தொடர்பான புகார்களை நம்பவுமில்லை.. அதேசமயம், குழந்தைகளுக்காக பெற்றோர் இருவரும் இணைய வேண்டும் என்று இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
முன்னதாக, தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை குறித்து மனம் விட்டு பேச ஆர்த்தி முயற்சி செய்த போதிலும், ஜெயம் ரவி அவரை பார்க்காமல் தவிர்த்துவிட்டதாகவ்ம, இதற்கும் காரணம் பாடகிதான் என்றும் கூறப்படுகிறது.. தன்னுடைய குடும்பத்தினரை கூட சந்தித்து பேச ஜெயம் ரவி மறுப்பதாகவும், போன் செய்தால் கூட அதை எடுப்பதில்லை என்றும் தகவல்கள் பரபரக்கின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications