Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்தேன்.. அசிங்கப்பட்டேன்.. விக்கி விக்கி அழுத மணிமேகலை.. காரணம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளியின் பழைய நிகழ்ச்சி ஒன்றில், மணிமேகலை பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஆரம்பக்கட்டத்தில் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு "கோமாளியாக" உயர்ந்தேன் என்பது குறித்து மணிமேகலை உணர்ச்சிப்பொங்க பேசியிருக்கிறார்.

மணிமேகலை வெளியிட்ட அறிக்கையின் அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை.. இதையடுத்து, கடந்த 2 நாட்களாகவே பிரியங்கா மீதான குற்றச்சாட்டை பிரபலங்கள் ஒவ்வொருவராக பகிர்ந்து வருகிறார்கள். இது மேலும் பரபரப்பை கூட்டி வருகிறது.

manimegalai priyanka

அதேபோல, விஜய் டிவி பிரபலங்கள், சின்னதிரை நடிகர்கள், விமர்சகர்கள், என ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு நடுவில், பிரியங்காவின் ஆதிக்கம் குறித்த வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த புகைச்சலுக்கு காரணம், பிரியங்காவுக்கு தரப்பட்ட விருதுதான் என்றும் பரவலாக சொல்லப்பட்டு வருகிறது.

ரஞ்சித் பேட்டி: இதுகுறித்து பிரபல தொகுப்பாளர் ரஞ்சித் எஸ். எஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியிலும், "விஜய் டிவியில், எப்பொழுதும் சிறந்த தொகுப்பாளினியாக பிரியங்கா தான் தேர்வு செய்யப்படுவார்.. அதுபோல சிறந்த தொகுப்பாளராக மாகபா தான் தேர்வு செய்யப்படுவார். ஆனால் இந்த முறை கொஞ்சம் மாறுதலாக ரியோவிற்கு விருது கொடுத்திருந்தார்கள்.

ஆனால், உண்மையில் மணிமேகலைக்கு சிறந்த தொகுப்பாளினி விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதை பார்க்கும் பொழுது சேனல் மணிமேகலையை ஓரம் கட்டுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது. இதனை மணிமேகலையிடம் பிரியங்கா ஒவ்வொரு முறையும் குத்திக்காட்டி பேசிக்கொண்டே இருந்தார்" என்று விருது பற்றி கூறியிருந்தார்.

கோமாளி: இந்நிலையில், மணிமேகலை பேசிய வீடியோ ஒன்றினை இணையவாசிகள் வைரலாக்கி வருகிறார்கள்.. அதாவது, குக் வித் கோமாளியின் பழைய சீசன் ஒன்றில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இணைந்து மணிமேகலைக்கு விருது ஒன்றை வழங்குகிறார்கள். அதை வாங்கி கொண்ட மணிமேகலை, மகிழ்ச்சியுடன் பேசத்துவங்குகிறார்.

சந்தோஷத்துடன் பேச ஆரம்பித்தவர், தீடீரென எமோஷனல் ஆகிவிடுகிறார்.. தனக்கு சீசன் 1 நிகழ்ச்சியில், கோமாளியாக சரியாக நடிக்க வரவில்லை என்று ஆதங்கத்தை கொட்டுகிறார். ஒரு தொகுப்பாளராகவே இருந்துவிட்ட நிலையில், கோமாளியாக தன்னுடைய பங்களிப்பை வழங்க, எந்த அளவுக்கு கஷ்டப்பட்டேன் என்று மணிமேகலை அதில் பேசியிருக்கிறார்.

நிகழ்ச்சி: அந்த வீடியோவில், "மனசுல ஒன்னை வெச்சிட்டு, வெளியில வேற ஒன்னு பேசுவதில் எனக்கு எப்பவுமே நம்பிக்கை கிடையாது.. இங்கே இருக்கும் போட்டியாளர்களிடம், எப்படி சமைக்க போறீங்க? என்று நான் கேள்வி கேட்பேன்.. ஆனால், உண்மையில், நிகழ்ச்சி முடிந்து இந்த செட்டை விட்டு வெளியே போனால், எல்லாருக்குமே சூப்பரான விஷயம் நடக்கணும்னு சொல்லி நினைச்சுக்கிற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

எனக்கு வாழ்க்கையில் 2 பெரிய விஷயமாக நினைப்பது ஒன்று உசேன், மற்றொன்று என்னுடைய தன்னம்பிக்கை... எனக்கு கொடுக்கப்பட்ட விஷயத்தை, நான் சரியாக செய்யாவிட்டால் எனக்கு தூக்கமே வராது.. எனக்கு நிறைய பழக்கப்பட்ட விஷயம் வெறும் ஆங்கரிங் மட்டும்தான்.

கோமாளி: திடீர்னு புகழ், பாலா போல எனக்கு கோமாளியாக பெர்பார்ம் பண்ண வரல.. எனக்கு அவர்களை போல பெர்பார்ம் பண்ண வரலியே என்று எனக்கு வெட்கமா இருக்கும்.. அசிங்கமா இருக்கும்.. வீட்டில போய் உசேன் கிட்ட சொல்லி அழுதிருக்கேன்.. எனக்கு பெர்மான்ஸ் வர மாட்டேங்குதே என்று கேவலமா இருந்தது.. "சீசன் 2-ல் இந்த பொண்ணை ஆங்கரிக்கு கூப்பிடாதீங்க" என்று கமெண்ட்ஸ்கூட நிறைய பேர் பண்ணுவாங்க" என்று விக்கி அழுகிறார் மணிமேகலை.

மணிமேகலை இப்படி அழுததுமே, அங்கிருந்த பாலா உள்ளிட்டோர் கைகளை தட்டி, மணிமேகலையை உற்சாகப்படுத்துகிறார்கள்.. அதற்கு பிறகுதான் மணிமேகலை, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இயல்பாக பேச துவங்குகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+