சுடப்பட்டு குண்டடிப்பட்டவுடன்! மறுபிறவி எடுத்தும் "எடுக்காத" எம்ஜிஆர்! குறுக்கே வந்த ரஜினி
சென்னை: தாய் மீது சத்தியம் படம் எம்ஜிஆர் நடிக்கவிருந்து அதை ரஜினிகாந்த் நடித்த சுவாரஸ்ய கதை தெரியுமா? எம்ஜிஆருக்கு கழுத்தில் குண்டடிப்பட்டவுடன் நடந்தது என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பிறகு கொஞ்சம் ஓய்வெடுத்து பின் திரும்ப நடிக்க வந்தார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான தயாரிப்பாளர் தேவரை வைத்து பல படங்களுக்கு பூஜை போட்டார். எம்.ஜி.ஆர் சுடப்பட்டதால் இனி அவர் படம் வருமா என ரசிகர்கள் கலங்கி இருந்த நேரம்.

அதை முறியடிக்க எம்.ஜி.ஆர் நினைத்தாரோ என்னவோ தேவரிடம் சொன்னாரோ என்னவோ பல படங்களுக்கு தேவருக்காக பூஜை போடப்பட்டன. விவசாயி, தேர்த் திருவிழா, மறுபிறவி, காதல் வாகனம், தந்தையும் மகனும் என படங்கள் டைட்டில்களுடன் தேவர் பூஜை நிகழ்ச்சிகளை செய்தார்.
முதல் படமாக 'விவசாயி'க்காக கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுத்தார். விவசாயி ரிலீசானதும், ராதா எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கின் தீர்ப்பும் ஒரே நாள். வழக்கின் தீர்ப்பு வென்றது. விவசாயி படம் தோற்றது.
அடுத்து நடித்துக் கொடுத்த 'தேர்த்திருவிழா' படமும் சீந்துவாரின்றி போனது.
அப்பா-மகனாக எம்.ஜி.ஆர் நடிக்காததால் அவரே ஆசைப்பட்ட படம் 'தந்தையும் மகனும்'. கதை பின்னாளில் பார்த்துக் கொள்ளலாம் என தள்ளி வைத்தார் எம்ஜி.ஆர். தேவர் பிலிம்ஸ் தனி கதை இலாகாவைக் கொண்டது. தோல்விக்கு அது தான் காரணம் என நினைத்த எம்.ஜி.ஆர் அப்போது வெற்றிகரமாக இருந்த ராமண்ணாவை அழைத்து வந்தார்.
முதலில் தேவர் முரண்டு பிடித்தாலும் எம்.ஜி.ஆருக்காக சம்மதித்தார். படம் 'காதல் வாகனம்'. காதல் வாகனம் படமும் வெற்றி பெறவில்லை. தேவரின் பூஜை போடப்பட்ட 'மறுபிறவி' படத்தில் குதிரைக் காட்சிகள் நிறைய இருந்தால் எம்.ஜி.ஆருக்கு அப்போது இருந்த உடல் நிலைக்காக அவர் ஒத்துக் கொள்ளவில்லை.
அதன் பின் அரசியலில் 'மறுபிறவி' எடுத்தார் எம்.ஜி.ஆர். அவரது படமான 'மறுபிறவியை' பத்தாண்டுகளுக்கு பிறகு தேவர் தயாரித்தார். அப்படி தயாரிக்க ஒரு நடிகர் காரணமாக இருந்தார். அவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தேவரை எடுக்க வைத்தது. எம்.ஜி.ஆரிடம் கிடைக்காத வெற்றி அவரிடம் கிடைத்தது. அவர் ரஜினிகாந்த். அந்தப்படம் 'தாய் மீது சத்தியம்'..(மறுபிறவி).... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications