தமிழ் சினிமாவில் மக்கள் அதிகம் கொண்டாடும் ஜானர் எது தெரியுமா? யூனிக் ஸ்டைல்னு சொல்லலாம்!
தமிழ் சினிமா தனது ஆரம்ப காலத்திலிருந்தே பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும், காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திரைப்படங்கள் உருவாகியுள்ளன. 1950, 60, 70-களில் சமூகத்தை பிரதிபலிக்கும் தரமான குடும்பக் கதைகள், சமூக உணர்வு திரைப்படங்கள், மற்றும் புரட்சிகரமான கதைகளைக் கொண்ட படங்கள் அதிகமாக வெளிவந்தன.
குறிப்பாக, கே. பாலச்சந்தர், விசு போன்ற இயக்குநர்கள் குடும்ப கதைகளை முக்கியமாக எடுத்துக்கொண்டு, உறவுப் பிணைப்பு, சமூக நிலை, கல்வியின் முக்கியத்துவம் போன்ற பல சிந்தனைத் தூண்டும் விஷயங்களை புகுத்தினர்.

80-களில் குடும்ப கதைகளின் வெகுமதி
1980-களில், தமிழ் சினிமா பெரும்பாலும் குடும்ப கதைகளின் மீது கவனம் செலுத்தியது. கே. பாலச்சந்தர், விசு, முத்துராமன் போன்ற இயக்குநர்கள் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு பல வெற்றிப் படங்களை உருவாக்கினர். விசுவின் படங்கள் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வியல் போராட்டங்களை பேசின, அதே நேரத்தில் பாலச்சந்தரின் "ஆபூர்வ ராகங்கள்" போன்ற படங்கள் சமூகத்துக்குள் இருந்த தடைகளை சுட்டிக் காட்டின. பாரதிராஜா படங்களில் கிராமத்து மண் வாழ்வியல் சார்ந்து இருக்கும் , பாலுமகேந்திரா படங்களில் காதல் நிரம்பி இருக்கும் , பஞ்சு அருணாச்சலம் படத்தில் எல்லாமே கலந்து இருக்கும் . இப்படி ஒவ்வொரு இயக்குநர்களிடமும் வேறு வேறு சாயல் ஸ்டைல் இருக்கும்.
90-களில் ஹீரோயிஸம், காதல், நகைச்சுவை
1990-களில், ஹீரோ சிந்தனையை மையமாகக் கொண்ட கதைகள் அதிகமாக வெளிவர தொடங்கின. இதற்கு காரணம், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ் , கார்த்திக் , சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்கள். அவர்களின் நடிப்பில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றிகளைப் பெற்ற படங்கள் வெளிவந்தன. மசாலா திரைப்படங்கள், காதல், action நகைச்சுவை ஆகியவை கலந்த படங்கள் மிகுந்த ஆதரவைப் பெற்றன. மணிரத்னம், ஷங்கர், கே. எஸ். ரவிக்குமார் போன்ற இயக்குநர்கள் கதைகளில் புதுமையை புகுத்தி, புதிய கோணங்களில் திரைப்படங்களை எடுத்தனர்.
2000-களில் பன்முக கதைகள்
2000-களுக்குப் பிறகு தமிழ் சினிமா பல்வேறு பரிணாமங்களை கண்டது. விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன. ஒவ்வொரு நடிகரும் தனக்கே உரிய மாஸ் கதைகளை தேர்ந்தெடுத்து, அதில் உணர்ச்சி, காதல், action என அனைத்தையும் கலந்து உருவாக்கினர். அஜித்தின் "மங்காத்தா," விஜயின் "கத்தி," விக்ரமின் "அந்நியன்" போன்ற திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன.
2020-களில் பேய், திரில்லர், கிரைம் படங்களின் வளர்ச்சி
இன்றைய தமிழ் சினிமா பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளது. குறிப்பாக பேய், திரில்லர், கிரைம் வகை திரைப்படங்கள் அதிகம் வெளிவர ஆரம்பித்துள்ளன. ராட்சசன், விக்ரம் வேதா, ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் கதைக்களத்தில் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருந்ததால் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டன.
ஹீரோயிஸம் படங்களின் தொடர்ச்சி
இன்றைய தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் ஹீரோசிம் கொண்ட படங்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறுகின்றன. "கேஜிஎப்," "புஷ்பா," "ஜெயிலர்" போன்ற திரைப்படங்கள் தமிழகத்திலும் இந்தியா முழுவதும் மிக பெரிய வெற்றியை கிளப்பியது, பான்-இந்திய ஹிட்களாக மாறின. இந்த படங்களில் ஹீரோவை மிகப்பெரிய தளத்தில் காட்டும் மாஸ் element-கள், பரபரப்பான action காட்சிகள், ஸ்டைலான முத்திரைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மெகா ஸ்கேல், சிறந்த இசை, பிரமாண்ட ஒளிப்பதிவு ஆகியவைகளை கொண்ட இந்தப் படங்கள் இந்திய திரையுலகில் மாபெரும் வசூலை குவித்தது. ஹீரோயிஸம் படங்களின் வெற்றியால், எதிர்காலத்திலும் இது தொடரும் என்பது உறுதி.
- குரு கிருஷ்ணன்
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications