பிரியங்காவின் விஷமம், விஷம்.. மூக்குடைப்பட்ட மணிமேகலை.. 10 பைசாக்கு பிரயோஜனமில்ல.. யார்னு பாருங்க
சென்னை: மணிமேகலை - பிரியங்கா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று மூத்த பத்திரிகையாளரும், விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
King 24X7 என்ற சேனலில் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது, "பிரியங்கா, மணிமேகலை 2 பேருக்குமே வாய், காதுவரை நீளுது.. பிரியங்கா தேஷ் பாண்டே .. பேரை பார்த்தீங்களா? நிறுவனத்தை சேர்ந்த நபரையே திருமணம் செய்து, அவரை கழட்டியும் விட்டுட்டாரு..

மணிமேகலை தன்னுடைய பெயருக்கேற்றபடியே இருப்பவர்.. இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.. சிறந்த இசை நிகழ்ச்சி தொகுப்பாளினி.. ஆனால், இவங்க 2 பேருமே ஆர்ஆர்பி ரேட்டை ஏத்தறதுக்காக சண்டை போட்டுக்கிட்டாங்க.. விளையாட்டா ஆரம்பிச்ச சண்டை, வில்லங்கமா முடிஞ்சிருச்சு..
செல்லப்பிள்ளை: பிரியங்கா எப்பவுமே விஜய் டிவி செல்லப்பிள்ளை.. அதனால், நேரா போயி மணிமேகலை பற்றி புகார் சொல்லியாச்சு. ஏன்னா, விஷமம், விஷம் இது இரண்டும் சேர்ந்த கலவைதான் பிரியங்கா.. சிரிக்காதே என்றால் சிரிப்பாங்க.. சிரிங்க என்றால் சிரிக்க மாட்டாங்க.. இப்படி முரண்பாடான கேரக்டர் கொண்டவர்.. இவரது கலகலப்பு எல்லாருக்கும் பிடிச்சுடுச்சு. அதனாலதான் நிறைய வாய்ப்புகளும் பிரியங்காவுக்கு தேடி வருது.
ஆனால், குக் வித் கோமாளியில், செப் தாமு, பிரியங்காவை கண்டிச்சதை இல்லைன்னு சொல்ல முடியுமா?? மணிமேகலையை மூக்குடைக்கிற மாதிரியே சொன்னாரு.. அப்பவே இதை தாமுகிட்ட மணிமேகலை கேட்டிருக்க வேண்டிதுதானே?
மணிமேகலை: நிறுவனத்துகிட்ட பிரியங்கா புகார் சொல்லிடவும், அவங்க மணிமேகலையை கூப்பிட்டு, பிரியங்காவிடம் மன்னிப்புக் கேட்க சொன்னாங்க.. இவர் மறுக்கவும், விஜய் டிவியே இவரை வெளியே போக சொல்லிருச்சு. மணிமேகலை வெளியே வந்தாச்சு.. மற்றபடி, மானம், சுயமரியாதை இதெல்லாம் சும்மா..
பிறகு, ஒவ்வொருத்தரா மணிமேகலைக்கு எதிராக பேச துவங்கினார்கள்.. இதில், செப் வெங்கடேஷ் பட் அதிகமா இதை பற்றி பேசியவர்.. செப் தாமு - செப் வெங்கடேஷ் பட் இருவருக்குமே, விஜய் டிவியில் ஈகோ வந்துவிட்டது. இருவருக்குமே சண்டை வந்துவிட்டது.. தாமு செஃப்பாக இருந்தவர்.. வெங்கடேஷ் பட், ஒரு சமையல்காரர்... இவர் எதுக்கு மணிமேகலை விவகாரத்தில் உள்ளே தலையிட்டு, கருத்து சொல்லி மணிமேகலையை தூக்கி நிறுத்தணும்?
நாஞ்சில் விஜயன்: உடனே விஜய் டிவி தன்னுடைய ஆட்களை உள்ளே இறக்கிவிட்டுடுச்சு.. இறக்கடுச்சு.. நாஞ்சில் விஜயன், மகாபா, குரேஷி இவங்கெல்லாம் கருத்து சொல்லி, இந்த சண்டையை, டிஆர்பி ரேட்டை கூட்ட முயற்சி செய்றாங்க.
எப்போதுமே, ஒரு கம்பெனியில் நியாயம், தர்மம் பேசிக்கொண்டு வெளியே விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ மீண்டும் அந்த நிறுவனத்துக்கு போகக்கூடாது...
மணிகேலை ஏதாவது புலம்பினால், அதை கண்டுக்காம போகணும்.. இதை பற்றி புரோகிராம் நடத்த நான் தயாராக இல்லை.. ஒருவளை மணிமேகலைக்கு யாராவது சப்போர்ட் தருவதாக இருந்தால், இதை பற்றி பேசாதீங்க. அவங்கவங்க வேலையை பாருங்க.. அல்லது அவங்களை வேலை பார்க்க விடுங்கப்பா
முற்றுப்புள்ளி: பிரியங்கா அவங்க பாட்டுக்கு என்ஜாய் பண்றாங்க.. ஆனால், மணிமேகலை இதுவரை புகார் சொல்லிட்டே இருக்காங்க.. அதனால் இவர்களை பற்றின எந்த பிரச்சனையையுமே, கண்ணுக்குள் வைத்து பார்க்க வேண்டாம்.. காதுகொடுத்து கேட்காதீங்க..
இந்த பிரச்சனையெல்லாம் வேஸ்ட்டு.. 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.. இதோடு மணிமேகலை - பிரியங்கா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - நல்லதை யோசிப்போம்... நமக்கு வருமானம் வருவதை சிந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்












Click it and Unblock the Notifications