"உசுரே நீ தானே" சகோதரி மகளுக்கு தந்தையாக மாறிய தாய்மாமன் நடிகர் சஞ்சீவ்! ஷ்ரேயா என்ன செய்கிறார்?
சென்னை: நடிகர் விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ், தனது அக்கா மகளுக்கு தந்தையாக மாறிய காட்சிகள் குறித்து அவரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதை கேட்ட ரசிகர்கள் வேதனை அடைந்தனர். பிறகு சஞ்சீவின் மனைவி ப்ரீத்தியின் இன்ஸ்டா, டிவிட்டர் ஐடிகளுக்கு "அண்ணனுக்கு ஆறுதல் சொல்லிடுங்க" என நிறைய பேர் பதிவுகளை போட்டிருந்தனர்.
சஞ்சீவ் பிக்பாஸில் இருந்ததால் அவர் வெளியே வந்தால்தான் பதிவுகளை பார்க்க முடியும் என்பதால் ப்ரீத்தியின் ஐடிக்கு சிலர் தங்களது ஆறுதல்களை அனுப்பியிருந்தனர்.

நடிகர் சஞ்சீவின் அக்காள் சிந்து. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவரும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1990ஆம் ஆண்டு வெளியான இணைந்த கைகள் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை சிந்து. அதன் பிறகு பட்டிக்காட்டுத் தம்பி என்ற படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பரம்பரை, ஊர்க் குருவி, நம்ம வீட்டு கல்யாணம் , அன்பே அன்பே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் கோகுலம் வீடு, எங்கள் குடும்பம், மெட்டி ஒலி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருந்தார். 2005 ஆம் ஆண்டு சுனாமி நிதி திரட்டும் ஊர்வலத்தில் சின்னத்திரை நடிகர், நடிகையர்களுடன் கலந்து கொண்டார்.
வெகு தூரம் ஊர்வலமாக நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மக்கள் பணியில் இருந்த போது உயிரிழந்த சிந்துவின் இழப்பு திரைத்துறையினரை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் கலங்கடிக்கச் செய்தது.
சிந்து கடந்த 1995 ஆம் ஆண்டு ரகுவீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷ்ரேயா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே சிந்துக்கு ஆஸ்துமா எனப்படும் மூச்சுத் திணறல் நோய் இருந்துள்ளது. அவ்வப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். சிந்து இறந்த போது அவருடைய மகளுக்கு 9 வயது. சிந்துவுக்கு 33 வயது இருக்கும்.
இந்த நிலையில் தனது அக்கா மகளுக்கு சஞ்சீவ் ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டார். இதை அவரே பிக்பாஸில் குறிப்பிட்டிருந்தார். அந்த பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக அமீரும் சஞ்சீவும் நுழைந்தனர். அந்த பிக்பாஸில் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள அன்பறிவு படத்தின் குழுவினர் அங்கு வந்திருந்தனர். இயக்குநர் அஸ்வின் தனது உறவினர் என சஞ்சீவ் கூறியிருந்தார். அதாவது தனது அக்கா மகள் ஷ்ரேயாவை அஸ்வினுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் சஞ்சீவ். நடிகர் சஞ்சீவும் சிந்துவும் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் சகோதரி ஷியாமளாவின் மகன், மகள் ஆவார்கள். அதாவது இவர்களுக்கு மஞ்சுளா பெரியம்மா அல்லது சித்தி முறையாகும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications