ஹீரோயின் மேடம் என்ன அண்ணானு சொல்லீட்டீங்க.. எனக்கு இன்னும் அவ்ளோ வயசு ஆகல.. விஜய பிரபாகரன் கலகல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி பக்கம் திரும்புமா அல்லது திமுக கூட்டணி பக்கம் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் தேமுதிக தரப்பில் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் சண்முக பாண்டியன், யாமினி சந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த விழாவில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகியும், விஜயகாந்தின் மூத்த மகனுமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.

Don t Call me Anna says DMDK Youth Wing Head Vijaya Prabhakaran to the heroine of Padaithalaivan film

அப்போது விஜய பிரபாகரன் பேசுகையில், இளையராஜா சாரின் குடும்பத்தினர் என் சகோதரரின் படத்திற்கு இசையமைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரமணா திரைப்படத்திற்கு பின் முருகதாஸ் சார் எங்கள் வீட்டிற்கு தொடர்ச்சியாக வருவார். அவருடன் இந்தி கஜினி படத்தில் பாடல்களை எங்கள் வீட்டில் அமர்ந்து பார்த்த அனுபவம் மறக்க முடியாது. தற்போது பொன்ராம் மற்றும் சசிகுமார் ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விஜயகாந்தை எப்படி நீங்கள் சொல்கிறீர்களோ, அப்படிதான் சசிக்குமார் சார் இருக்கிறார். படைத்தலைவன் படத்தின் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைந்துள்ளது. கஸ்தூரி ராஜா சார் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவர் எனது தம்புயுடன் நடித்தது பெருமை அளிக்கிறது. கடைசியாக நாயகி.. என்னை பிரபா அண்ணா என்று சொல்லிவிட்டீர்கள்..

எனக்கு ஒன்றும் அவ்வளவு வயசாகவில்லை. நீங்களும் சிறப்பாக நடித்துள்ளீர்கள். நீங்கள் அலுவலகம் வந்த போது சந்தித்தேன். இனி என்னை பிரபா ப்ரோ என்று கூட அழையுங்கள். எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதகமாக இருக்கும். கடைசியில் விஜயகாந்த் கண்களை காட்டும் போது கண் கலங்கிவிட்டது.

தேமுதிகவின் 2.0 தொடங்கிவிட்டது என்று அறிவித்தேன். அதுவெறும் அரசியலுடன் மட்டும் நின்றுவிடாது. ஒரு பக்கம் தம்பி சண்முக பாண்டியன் நிச்சயம் வளர்வார். அதேபோல் தேமுதிகவும் அடுத்தக் கட்டத்தை எட்டும். நாங்கள் இங்கு இருப்பதற்கு விஜயகாந்த் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+