For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேணாம் தங்கம்.. சின்னவர் வழி நேர்கோட்டுல போயிட்டு இருக்கு.. நடுவுல நான் எதுக்கு?

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் கொஞ்சம் வருத்தப்படும்படிதான் போயிகிட்டு இருக்கு. ஆனா, லொகேஷன் மாத்தாம இருக்கறது கதைக்கு, காட்சிக்கு கூடுதல் பிளஸா இருக்கு.

மூக்கும் முழியுமா முத்துச்செல்வி நல்லாத்தானே இருக்கா... அவளுக்கு போயி இப்படி ஒரு படிக்காத காட்டானை கல்யாணம் கட்டிக்குடுக்க நினைக்கறானே இவனெல்லாம் என்ன அப்பன்னு சீரியல் பார்க்கற ஜனங்க பேசிக்கறாங்க.

அப்புறம் என்னங்க.. ஏழைன்னாலும், அவளுக்கு ஏத்த எள்ளுருண்டை மாதிரி சிறு வயசு கூலிக்காரன் கிடைக்காம போயிருவானா என்ன, முறை மாப்பிள்ளையாம், முறைக்காத மாப்பிள்ளையாம் அப்படின்னும் பேசிக்கறாங்க.

உள்ளங்கையோடு உள்ளங்கையை வைச்சு.. அடடா கட்டிப்பிடி வைத்தியம் மாதிரியே இருக்கேப்பா! உள்ளங்கையோடு உள்ளங்கையை வைச்சு.. அடடா கட்டிப்பிடி வைத்தியம் மாதிரியே இருக்கேப்பா!

டவுனுக்கு

டவுனுக்கு

முத்துசெல்விக்கு அவங்க அப்பா பார்த்திருக்கற மாப்பிள்ளை களவாணி, முத்துச்செல்வி எதிரிக்கு கூட்டுக்காரன் வேற.. மாமா கல்யாணம் நெருங்கி வருது.. முத்துவை அழைச்சுக்கிட்டு டவுனுக்கு போயிட்டு வரேன் மாமான்னு கேட்கறான் மாப்பிள்ளை. அப்பாவும் சரின்னு சொல்லிட முத்துசெல்விக்கு ஆத்திரம் வருது.

தங்கம்

தங்கம்

முத்துச்செல்வி கண்ணன் குடுத்த குங்கும சிமிழை வச்சுக்கிட்டு அழுதுகிட்டு இருக்கா.அங்கே அவளின் தங்கச்சி தங்கம் வர்றா. அக்கா உன் கஷ்டம் எனக்கு புரியுதுக்கா... பேசாம சின்னவருகிட்ட சொல்லிடலாமாக்கான்னு கேட்கறா.

சொல்லுவே

சொல்லுவே

வேணாம் தங்கம்.. என்ன சொல்ல முடியும் சொல்லுன்னு இவ சொல்ல, நான் சொல்றேன்க்கா.. அக்காவுக்கு உங்க மேலதான் இஷ்டம்.. ஐயன் பார்த்த மாப்பிள்ளையை அக்காவுக்கு புடிக்கலைன்னு சொல்லட்டுமான்னு கேட்கறா

தங்கம்

தங்கம்

அப்படி சொல்ல கூடாது தங்கம். சின்னவருக்கும், சின்ன எஜமானி அம்மாவுக்கும் கல்யாணம் மணமேடை வரை வந்து நின்னு போச்சாம். அது நடக்கணும்னுதான் இவ்ளோ பூஜை, பரிகாரம்னு செய்யறாங்க. சின்னவர் வாழ்க்கை நேர்கோட்டுல போயிகிட்டு இருக்கு. நான் அதுல குறுக்க எதுக்கு போவணும் தங்கம்னு தங்கச்சிய கட்டிக்கிட்டு அழறா.

என்னோட

என்னோட

தங்கம் எனக்கு அது கூட பரவால்ல... ஐயன் பார்த்து வச்சுருக்கார் பாரு ஒரு மாப்பிள்ளை.. அவனை கட்டிக்கிட்டு குப்பை கொட்ட போறதை நினைச்ச என் நெஞ்சே வெடிச்சுரும் போல இருக்கு தங்கம். எனக்காக ஒரு உதவி செய்வியான்னு கேட்கறா. சொல்லுக்கா செய்யறேன்னு தங்கம் சொல்ல, எனக்கு அவன் கூட தனியா போக கஷ்டமா இருக்கு.. நீயும் வர்றியான்னு கேட்கறா.. வர்றேன்க்கான்னு சொல்றா தங்கம்.

நம்ம நாட்டுல பல பெண்களுக்கு இப்படித்தான் பொருத்தம் இல்லாத, பிடிக்காத கல்யாணம் நடக்குதுன்னு சீரியல் பார்க்கறவங்க புலம்பறாங்க.

English summary
Sun TV's kanmani serial is a bit worrying. But, the location of the location is there for the story, there is an extra plus for the display.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X