Incredibles2...அப்பா அடிச்சா ஒன்றரை டன்னு வெயிட்டு!
சென்னை: நாளை மதியம் 12:30 மணிக்கு விஜய் டிவியில் Incredibles2 குழந்தைகளுக்கான திரைப்படம்.. தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு வழிவிட்டு, அவர்களை இந்த படத்தை பார்க்க விடுங்கள்.
குழந்தைகள் மட்டுமா.. இப்போது பெரியவர்களும் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடி மகிழும் காலம். சோ..அவங்களோட உட்கார்ந்து நீங்களும் இந்த படத்தைப் பார்க்கலாம்.
அப்பா அடிச்சா ஒன்றரை டன்னு வெயிட்டு.. அம்மா தாவினா 100 அடி ஹைட்டு.. இப்படித்தான் படத்தின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. நடிகர்கள்னா யாருன்னு சொல்றது? எல்லாமே அனிமேஷன்...

அனிமேஷன் படம்
குழந்தைகள் இருக்காங்க.. ஆனா இல்லை. பெரியவர்கள் இருக்காங்க ஆனா இல்லை...வீடு..சாலை.. கார்.. ஊர் என்று இருக்கு..ஆனா இல்லை. இருக்கறது எல்லாமே அனிமேஷனில் இருக்குங்க. பாருங்களேன்..குழந்தைகளின் குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

அக்கா தம்பி சண்டை
அக்கா, தம்பி என்று குழந்தைகளுக்குள் சண்டை.. அப்பா ஹீரோவாகவும், அம்மா வீரமான அம்மாவாகவும் குழந்தைகளுக்கு தெரியும்படியான ஒரு கதை. என்னதான் குழந்தைகளுக்குள் சண்டை என்றாலும், உடன்பிறந்தவர் ஒருவரை ஒருவர் விட்டுத் தர மாட்டார்.அது இந்த கதையில் உண்டு.

சூப்பர் ஹீரோ
சாகசங்கள் செய்யத் தெரிந்தாலே குழந்தைகள் மத்தியில் அவர்கள் மனதில் சூப்பர் ஹீரோவாக இடம்பிடித்து விடலாம். அப்படித்தான் இந்த கதையிலும் சூப்பர் ஹீரோ வருகிறார். நெருப்பை கையில் பிடிக்கிறார். மின்சார கம்பியைத் தூக்கிப் போடுகிறார். இப்படி ஏகப்பட்டவைகள்.

சின்ன பாப்பா செல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா என்று செல்லம் கொடுக்க கொடுக்க. அந்த குழந்தை செய்யும் வால்தனம் எல்லாரையும் ரசிக்க வைத்துவிடுகிறது. சின்ன பாப்பா காரில் போகும்போது வியந்து பார்க்கும் அழகு, பொம்மை போல இருக்கிற்றது. இருந்தாலும் இது அனிமேஷன் குழந்தை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications