தர்ஷா குப்தா சார்.. பாருங்க சார்.. குழந்தை மனசு சார்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தர்ஷா குப்தா ஒரு குழந்தை மாதிரிங்க.. அழகுல மட்டும் இல்லங்க மனசும் கூடதான் குழந்தை போலவே பச்சக்கென்று ஈரத்தோடு இருக்கிறது. இதை நாம சொல்லலைங்க.. தர்ஷாவே சொல்லிருக்காங்க.

சும்மாவே இவரைப் பார்த்து ரசிகர்கள் கிறங்கிப் போய் இருக்கும்போது என்னோட குழந்தை மனசு என்று போஸ்ட் போட்டு ரசிகர்களை வேர்த்து விறுவிறுக்க வைத்திருக்கிறார்.

தர்ஷா குப்தா சீரியல்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஜீ தமிழ் சீரியலில் முள்ளும் மலரும் சீரியல் மூலமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தினமும் போஸ்ட்

தினமும் போஸ்ட்

அதற்கு பிறகு அவர் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வராததால் இப்போ இணையதளத்தை தன்னுடைய கைவசம் வைத்திருக்கிறார். தினமும் போஸ்ட் விதவிதமாக போட்டு தள்ளுகிறார். இதுமட்டுமல்ல ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப தாராளம் காட்டி வருகிறார். குடும்பப் பாங்காகவும் சரி கவர்ச்சி நாயகியாகவும் என்னால் கலக்க முடியும் என்று விதவிதமான போட்டோக்களை அப்லோட் பண்ணி ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.

ரசிகர்களைப் பிடிக்கும்

ரசிகர்களைப் பிடிக்கும்

இவருக்கு ஒரு ஸ்பெஷல் என்னன்னா ரசிகர்களை கமெண்டுக்கு பதில் அளிப்பதே இவருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கிறதாம் .சில மாடல்கள் ரசிகர்களின் கமெண்ட்களுக்கு ரிப்ளை கூட பண்ண மாட்டார்கள். ஆனால் இவர் ஒவ்வொரு ரசிகருக்கும் ஒவ்வொரு கமெண்டுக்கும் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். இது ரசிகர்கள் வட்டாரத்தில் இவருக்கு நல்ல ஒரு மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெஞ்சினிக்கும் ஆட்டம்

நெஞ்சினிக்கும் ஆட்டம்

இப்போ ஒரு கவர் ஸ்டோரி ஒன்னு போட்டு ரசிகர்களை மேலும் கிறங்கடித்து இருக்கிறார். 'வசீகரா ...என் நெஞ்சினிக்க' பாடலுக்கு செமயா ரொமான்டிக்காக ஆட்டம் போட்டிருக்கிறார். இதுதான் கோயம்புத்தூர் குசும்பு என்பார்கள் போல. அதுவும் கருப்பு கலர் சேலையில் அவரது ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் கிறங்கி தான் போய் இருக்கிறார்கள்.

ஹீரோயின்களை தூக்கிச் சாப்பிடுகிறார்

ஹீரோயின்களை தூக்கிச் சாப்பிடுகிறார்

டுவிட்டரில் இந்த போஸ்ட்டை போட்டுவிட்டு அதில், ஏதோ பண்ணி இருக்கேன்.. அப்படின்னு போட்டிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் செமையாக பண்ணி இருக்கிறீர்கள். நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கிறது. ஹீரோயின்கள் எல்லாம் தூக்கி சாப்பிடுகிற அளவுக்கு உங்க எக்ஸ்பிரஷன் இருக்கிறது என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். சிலர் இந்த மாதிரி எக்ஸ்பிரஷன் காட்டுனா எங்களால அடக்க முடியாதும்மா அப்படின்னு புலம்பி இருக்கிறார்கள்.

குழந்தை மனசு வேணும்

குழந்தை மனசு வேணும்

அது மட்டும் இல்ல வேறு ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார் .அதில் 'உங்களுக்கு எவ்வளவு வயதாக இருந்தாலும் உங்களுக்குள் இருக்கும் அந்தக் குழந்தையை ஒருபோதும் கொல்ல வேண்டாம் 'என்று ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். இதுவும் வேற லெவல் இருக்கிறது. சிவப்பு கலர் டிரஸ் ....இல்லல்ல இது ட்ரெஸ்ஸே இல்லை என்ற அளவில் ஒரு டிரஸ் போட்டுக்கிட்டு கேக் சாப்பிடுகிறார். அதையும் அவர் குழந்தைத்தனமாக ரசித்து சாப்பிடுவாராம்.

சூப்பர் போஸ்

சூப்பர் போஸ்

அதை பார்த்த ரசிகர்கள் அந்தக் குழந்தை மீது விழுந்து விட்டார்கள். அதுவும் பெட்டில் படுத்துக்கொண்டு ஒரு போஸ் கொடுத்திருக்கிறார் அதனால் சிலருக்கு தூக்கமே வரவில்லையாம். இப்படி ரசிகர்களை தூங்க விடாமல் பண்ணிக் கொண்டிருக்கும் நம் தர்ஷா ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல இன்று ஒரு ரசிகரின் லைவ்வில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

லைவில் போய் அசத்தல்

லைவில் போய் அசத்தல்

அது அந்த ரசிகருக்கு மட்டுமல்ல அந்த லைவ்வில் இருந்த 300 ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சிதான் .இவர் லைவில் வந்ததும் அந்த ரசிகரால் என்ன பேசப்போகிறோம் என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார். அதில் சிலர் கமெண்டுகளை வீசிக் கொண்டிருந்தார்கள். அவருடைய குழந்தைத்தனமான பேச்சும் அவருடைய முகமும் ரசிகர்களுக்கு கண்ணுக்குள்ளே நிற்கிறதாம்.

 தூக்கம் போச்சே தர்ஷா

தூக்கம் போச்சே தர்ஷா

இணையதளத்தில் இப்படி பல பேருக்கு தூக்கத்தை கெடுத்து பலே கில்லாடியாக கலக்கிக் கொண்டிருக்கும் தர்ஷா விற்கு சீக்கிரமாக பட வாய்ப்புகளை கொடுங்கள் என்றும் சில ரசிகர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை ஆட்டி வைத்திருக்கிறாராம் தர்ஷா.. இருந்தாலும் இப்போதைய லாக்டோன் சமயத்தில் தர்ஷா போன்றோரால்தான் பொழுதும் சுகமாகப் போகிறது பலருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+