எந்த நேரத்திலும் தைரியத்தை இழக்கக் கூடாது ... சரத்குமார்!
சென்னை: மனைவி ராதிகா நடத்தும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சரத்குமார் வில்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஆர்த்தியின் தந்தையிடம், எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையை விட்றாதீங்க என்று கூறினார்.
14 வயசிலேயே வில்சன் டிசீஸ் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. அன்னிலேர்ந்து மாத்திரை எடுத்துக்கிட்டு வர்றேன்னு சொல்லும் ஆர்த்திக்கு, இப்போதும் உடல் நிலை எதாவது ஒன்று என்று படுத்திக் கொண்டே இருக்கிறது.
இப்போதும் மருத்துவமனையில் இருந்தபடி பேசும் ஆர்த்தி படிப்பையும் விடாமல் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறார்.

லட்சத்துல 10 பேருக்கு
வில்ஸன் டிசீஸ் லட்சத்துல 10 பேருக்குத்தான் வருமாம்..அதில் என் மகளும் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை வந்திருச்சு.மாத்திரை எடுத்துகிட்டே வந்ததுல 2016 ம் ஆண்டு கொஞ்சம் சீரியசாகி லிவர் டிரான்பரன்ட் பண்ணும் சூழ்நிலை வந்துருச்சு. அப்போ குடுத்த ஸ்டீராய்டு மாத்திரையில் கணையம் பாதிச்சு டயபடீஸ் வந்திருச்சு.

சரத்குமார் வரலட்சுமி
ஆர்த்தி பேசுகையில்..தொடை எலும்பு மாத்தணும்னு சொன்னாங்க.. இதுக்கு நடுவுல கோடீஸ்வரி நிகழ்ச்சிக்கு அப்ளை பண்ணி இருந்தேன். அங்கிருந்து கால் வந்துருச்சு. ஆனால், எனக்கு ஜான்டிஸ் வந்துருச்சு. அதனால எனக்கு பதில் சரத் குமார் அங்கிளும், வரலட்சுமி அக்காவும் விளையாடறாங்க என்றார்.

அப்படி சொல்லக்கூடாது
கம்பியூட்டர் சயின்ஸ் மூணாவது வருஷம் முடிக்கப் போவுது என் பிள்ளை. இந்த மகளை வச்சுக்கிட்டு நான் போராடிகிட்டு இருக்கேன். ஆண்டவன் இந்த பிள்ளையை குடுத்ததுக்கு கொடுக்காமலே இருந்து இருக்கலாம் என்று ஆர்த்தியின் அப்பா வெங்கடேசன் கண் கலங்க.. அப்படி சொல்லக் கூடாது என்று சொன்னார் சரத் குமார்.

60 அடியில் விழுந்தேன்
60 அடியில் கீழே விழுந்தேன்.. சி 4 சி 5 ஸ்பைனல் கார்ட் காயம். 6 மாசம் பெட்டில் இருந்தேன். தலையில ரெண்டு ஓட்டை போட்டு கழுத்தில ஓபன் செய்து பிளேட் வச்சு, சைக்கிள் ஓட்ட கூடாது, கார் ஓட்ட கூடாது இப்படி எல்லாம் சொன்னாங்க. இருந்தாலும் நம்பிக்கையோட சர்வைவல் பண்ணிக்கிட்டு இருக்கேன். எந்த நேரத்திலும் தைரியத்தை இழக்கக் கூடாது என்று சொன்னார்.
உங்க மகளுக்காக நாங்க விளையாடி மருத்துவ உதவி செய்யறோம், தனிப்பட்ட முறையில் தேவையான உதவிகளை செய்யறோம்னு சரத்குமார் சொன்னார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications