Webseries: தொடாமலே காதல்... கைகள் படாமலே... கல்யாணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாக்அவுட் என்கிற யூடியூப் சானல் கெட்டி மேளம் என்று ஒரு வெப் சீரீஸ் வெளியிட்டு இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வெப்சீரீஸை கண்டுள்ளனர்.

ஒரு டைட்டில் போரடிக்குது என்றால் வெப்சீரீஸ் பொறுத்த வரை கவலையில்லை. அவர்கள் மெயினா ஒரு டைட்டில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு டைட்டில் வைத்து கதையை கொண்டு போகிறார்கள்.

அது ஒரு வசதி என்றுதான் சொல்ல வேண்டும்... வெப்சீரீஸுக்கு இந்த தொடர்ச்சி.. கிடர்ச்சி என்கிற லாஜிக் எல்லாம் இல்லை. சில சமயம் சில சீரீஸ் பார்க்கும்போது சின்ன பசங்க சொப்பு சாமான் வச்சு விளையாடுவது போல சீரீஸ் எடுக்கிறார்களோ என்று கூடத் தோன்றுகிறது.

 கெட்டி மேளம்

கெட்டி மேளம்

கெட்டி மேளம் வெப் சீரீஸின் முதல் எபிசோட் உன்னருகில் நான் இருந்தால்...மதன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவளைத் தொட்ட அனுபவம் கூட இல்லை. ஆனால், காதல் பிரேக் அப். காதலித்த பெண்ணின் மீது கைகள் படாமலே இருந்த நிலையில், பெற்றோர்கள் பார்த்து வைத்த கல்யாணத்தில் இப்போது அவன் முதலிரவுக்கு தயாராக உட்கார்ந்து இருக்கான்.

 கிஸ் பண்ணிடு

கிஸ் பண்ணிடு

பயத்தில் உட்கார்ந்து இருக்கான் மதன்.. வெறும் பலூனில்தான் முதலிரவு அறை அலங்காரம். ஃபிரண்ட்ஸ் போனில் பொண்ணு வந்த உடனே கிஸ் பண்ணிடுன்னு சொல்லித் தராங்க. இவனும் பக்கத்தில் மனைவி உட்கார்ந்த உடனே கிட்டத்தில் போறான். இந்த எபிசோடுக்கு உன்னருகில் நான் இருந்தால்னு பேர் வச்சு இருக்காங்க.

 பயபுள்ள கண்ணை மூடி

பயபுள்ள கண்ணை மூடி

பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்க போனவன் பய புள்ள கிட்டத்துல போயி கண்ணை மூடிக்கிட்டு வாயை குவிச்சுக்கிட்டான். பாவம் அந்த பொண்ணு எதேச்சையா திரும்பிப் பார்த்து பயந்துருச்சு. என்ன பண்றீங்கன்னு கேட்டுட்டு தூக்கம் வருதுன்னு படுக்க போயிருச்சு.

 சரி அடுத்த முயற்சி

சரி அடுத்த முயற்சி

சரி அடுத்த முயற்சி கைக்கொடுக்குதான்னு பார்ப்போம்னு அவள் படுத்து இருக்க. அவள் முதுகை ஒட்டி இவன் படுத்துகிட்டான். மெதுவா கையை அவள் தோளில் போடப் போக.. அப்போதும் கண்ணை மூடிக்கிட்டான். கையை வைடா வைடான்னு தனக்குத் தானே மனசுக்குள் சொல்லிகிட்டே கையை நூல் நூலா கீழே இறக்க...அவள் எழுந்து வந்து இந்த பக்கமா நின்னு என்ன பண்றீங்கன்னு கேட்கற வரைக்கும் கண்ணைத் திறக்கலே இவன்...

ஹும்...எப்படி முதலிரவோ...நீங்க தொடர்ந்து பாருங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+