இது கூட நல்லாதான் இருக்கு தர்ஷனா.. மரமே வெட்கப்படுமே!
சென்னை: மருத்துவராக இருந்தாலும் என் தனது ஆசைக்காக நடிகையாக களமிறங்கியிருக்கும் தர்ஷனா தற்போது போட்டோசூட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவரது லேட்டஸ்ட் போட்டோ சூட் மெருன் கலர் உடையில் இடுப்பழகை காட்டி திடீரென்று இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டவர் தான் தர்ஷனா அசோகன் இவர் ஒரு மருத்துவர். இவரது தந்தையும் மருத்துவர்.

டாக்டர் தர்ஷனா
அப்பாவின் விருப்பத்திற்காக இவர் மருத்துவத்தை படித்துவிட்டு இவர் தந்தை இவருக்காக கட்டிக்கொடுத்த கிளினிக்கில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார் .ஆனால் இவரது ஆசை கனவு எல்லாமே நடிப்பு தானம் . அதனால் வீட்டில் அடம்பிடித்து இந்தத் துறைக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

ரசிகர்கள் ஹேப்பி
முதலில் மறுத்த இவரது பெற்றோர்கள் தற்போது ஓகே சொல்லி இருக்கிறார்களாம். இவருக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பை அவர்களும் அறிந்திருக்கின்றனர். இருந்தாலும் இவர் ஆசை சின்னத்திரையில் ஜொலிப்பது மட்டுமல்லாமல் வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான். இவரது ஆசையாம் அதற்காக வேலைகளில் இறங்கி அழுத்தமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

முதலில் மாடலிங்
ஏற்கனவே இவர் இந்த சீரியலில் அறிமுகமாகும் அதற்கு முன்பாக பல விளம்பர மாடலாகவும் கலக்கியிருக்கிறார்.
100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்து வந்த பிறகுதான் இவருக்கு இந்த சீரியலில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது .முதலில் இந்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்று அவர் கூட நினைக்கவில்லை.

வீட்டுப் பெண் போல
அந்த அழகு இருக்கும் பலரும் இவரை தங்கள் வீட்டு பெண் போலதான் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்த சீரியல் வயது வித்தியாசமான காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்ததாக தான் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இவருக்கு ஜீ தமிழில் அவார்டுகள் கூட கிடைத்தது.

திறமைக்கு கிடைத்த அடையாளம்
அப்போதுதான் தன் திறமைக்கு கிடைத்த அடையாளமாக இதை நினைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பலரும் இந்த பீல்டில் வரும்போது நடிக்க தெரியாமல் நான் திணறும் போது என்னை கேலி செய்தார்கள். அப்போது எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று இவர் கூறியிருந்தார்.

சுப்ரீம் கேப்ஷன்
அதுமட்டுமல்லாமல் அதேபோலத்தான் இப்போதும் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு அதற்கு ஒரு கேப்ஷன் போட்டிருக்கிறார் .அதில் உங்கள் குறிக்கோள் வலுவானதாக இருக்க வேண்டும் .பலரும் வெளியில் இருந்து பேசும் வார்த்தைகளை அது பாதிக்காத அளவில் மேலும் வளரும் வகையான குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்களுக்கு மோட்டிவேஷன் ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்.

கலக்கலோ கலக்கல்
இதுவரைக்கும் சீரியல்களில் முழுக்க முழுக்க சுடிதாரோடும் சேலையிலும் இவரைப் பார்த்து வந்த அவருடைய ரசிகர்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் மெரூன் கலரில் கலக்கலான உடை அணிந்து அவரது கலருக்கும் அந்த உடைக்கும் எடுத்து தூக்கிக் காட்டுவது போல கச்சிதமான ஒரு போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார். அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். ரசிகர்கள் இவருக்கு ஹார்ட்டுகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications