விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு.. ரொம்ப பேராசை.. சிலிர்க்கும் துல்கர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நாயகன் துல்கர் சல்மான், விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு நடிச்ச கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிச்சு இருக்கலாம்னு பேராசை என்று கூறினார்.

சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் அனிதா எந்த கதாபாத்திரத்தில் நீங்க நடிச்சு இருக்கலாமேன்னு நினைக்கிறீங்க என்று கேட்டபோது...

விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்திக் கதாபாத்திரத்தில் சிம்பு சூப்பரா நடிச்சு இருப்பர். அதில் நாம் நடிச்சு இருக்கலாமேன்னு ஏக்கம் வந்துச்சு என்று கூறினார் துல்கர்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

ஓகே கண்மணி திரைப்படத்துக்குப் பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் துல்கர் சல்மானை மீண்டும் ஒரு துறுதுறுப்பான இளைஞராக அடையாளப்படுத்தி இருக்கிறது. படமும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. ஹேண்ட்சம்... ஃபிட் பாடி சாம் என்று இளம் பெண்கள் மனதில் மீண்டும் இடம் பிடிச்சு இருக்கார் துல்கர்.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் என்ன ஸ்பெஷல்.. எதற்காக அந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது, படம் இளமைத் துள்ளலுடன், ரசிச்சு பார்க்கும்படி இருக்கும். நிறைய யங்ஸ்டர்ஸ் நடிச்சு இருக்கோம்.. செம ஜாலியா இருக்கும் என்று கூறினார். இந்த படம் ஓகே ஓகே படம் போல மெசேஜ் சொல்வதாகவும் விமர்சகர்கள் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை விமர்சித்து உள்ளனர்.

யாருடைய பயோகிராபி

யாருடைய பயோகிராபி

யாருடைய பயோகிராபியில் நடிக்க ஆசை என்று கேட்டபோது, ஜெமினி கணேசன் அங்கிள் மாதிரி எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சதே பெரிய விஷயம். அதனால், அந்த பாக்கியம் போதும்னு நினைக்கிறேன் என்று சொன்னனர் துல்கர். ஜெமினி கணேசன் பாத்திரத்தில் சாவித்திரி படத்தில் அருமையாக நடிச்சு இருந்தார் துல்கர்.

நாலஞ்சு நாளில்

நாலஞ்சு நாளில்

சே...இந்த படத்தில் நடிச்சு இருக்கவே வேணாம்னு நீங்க நினைக்கும் படம் எது என்று கேட்டபோது, பேர் சொல்ல மாட்டேன் என்று சொன்னார். மொழியாவது சொல்லுங்கள் என்றபோது மலையாள படம்..நடிக்க ஆரம்பிச்சு நாலஞ்சு நாட்களில் இந்த படம் தேறுமா தேறாதான்னு தெரிஞ்சுரும்.. அடடா.. மாட்டிக்கிட்டோமேன்னு நினைச்சு இருக்கேன் என்று சொன்னார்.

விண்ணைத் தாண்டி வருவாயா

விண்ணைத் தாண்டி வருவாயா

விண்ணைத் தாண்டி வருவாயா படம் ஒரு மேஜிக்.. அதில் சிம்பு ஏற்று நடிச்ச கார்த்திக் கதாபாத்திரத்தில் நான் நடிச்சு இருக்கலாமோன்னு ஏக்கம் வரும். சிம்பு, த்ரிஷா ரெண்டு பேருமே ரொம்ப அற்புதமா நடிச்சு இருப்பாங்க. இன்று வரைக்கும் கவுதம் மேனன் சார் செய்து இருக்கும் மேஜிக்.. படத்தின் முன் கட்டிப்போட்டு விடுகிறது என்று கூறினார் துல்கர் சல்மான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+