உடம்பு குண்டானாலும் தைரியமாக நீச்சல் உடையில் சுற்றும் துஷாரா விஜயன்! ரசிகர்கள் பாராட்டு
சென்னை: தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பும், அழகும், தைரியமும் கொண்ட நடிகையாக துஷாரா விஜயன் (Dushara Vijayan) இன்று ரசிகர்களிடையே தனித்த இடத்தைப் பெற்றுள்ளார். 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, தனித்த ஸ்டைலால் ஈர்த்த துஷாரா, தனது இயற்கையான நடிப்பால் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒருசேர கவர்ந்தார்.
அதன் பிறகு, 'ராயன்', 'வேட்டையன்' மற்றும் சமீபத்தில் வெளியாகியுள்ள 'வீர தீர சூரா' போன்ற படங்களில் அவர் நடித்தது, அவரது நடிப்புத் திறனை மேலும் சிறப்பாக காட்சிப்படுத்தியது.

துஷாரா விஜயன், திரையுலகில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில், அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய டூ பீஸ் நீச்சல் உடை புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் மீடியா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மற்றொரு நீச்சல் உடை படம் சமீபத்தில் வைரலாகி வருகிறது. அது அவரது இன்ஸ்டா பேஜில் கூட இல்லை. துஷாரா, மல்லாக்க படுத்து எடுத்த அந்த புகைப்படங்கள், திரைப்படங்களில் பார்த்த அவரது டோன்ட் கேர் பாலிசியை நிஜத்திலும் எதிரொலிக்கிறது.
இந்த புகைப்படங்கள் வெளியாகியவுடன், உடல் எடை அதிகரித்திருப்பதை ரசிகர்கள் நோட் செய்து, கமெண்ட் போட ஆரம்பித்தனர். ஆனால் துஷாரா தைரியமாக எதிர்கொண்டு ஒரு முடிவோடுதான் போட்டோவை போட்டுள்ளார், "உடல் எடையோ, தோற்றமோ தடையில்லை; தைரியமே அழகு" என்ற கருத்தை ரசிகர்களிடையே சொல்லாமல் வலியுறுத்தியுள்ளார் என்று சிலாகிக்கிறார்கள் அவரது ரசிகாஸ்.

துராஷா உடல் எடை சற்று அதிகமாக இருந்தாலும், பலரும் "அழகில் மின்னும் துஷாரா", "உடல் நம்பிக்கையின் ரோல் மாடல்" என புகழ்ந்து கருத்துகள் பகிர, அவருடைய புகைப்படங்களுக்கு லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்துள்ளன.
துஷாரா விஜயன் தனது திரைப்படப் பயணத்தில், வெறும் கதாபாத்திரங்களை மட்டுமல்ல, சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் நம்பிக்கை, அழகு குறித்த பாரம்பரியக் கருத்துகளை மாற்றும் விதமாக தைரியமான பங்களிப்பை வழங்கி வருகிறார். 'சார்பட்டா பரம்பரை'யில் பாரம்பரிய குடும்ப கதாபாத்தில் நடித்தாலும், முரட்டு கணவனை அடக்கும் வகையில் நடித்து பாராட்டைப் பெற்ற அவர், 'ராயன்' மற்றும் 'வேட்டையன்' படங்களில் நவீன பெண்மையை வெளிப்படுத்தியுள்ளார். 'வீர தீர சூரா' படத்திலும் முரட்டு கணவனை அதட்டி சமாளிக்கும் கதாப்பாத்திரம்தான் அவருக்கு.

இணையத்தில் அவரது நீச்சல் உடை புகைப்படங்கள் வைரலாகி, இளைஞர்களிடையே ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளது. உடல் எடைக்கும், தோற்றத்துக்கும் அப்பால் தைரியமும், தன்னம்பிக்கையும் தான் உண்மையான அழகு என்பதை துஷாரா விஜயன் தனது வாழ்க்கையிலும், சமூக வலைதளங்களிலும் நிரூபித்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications