அம்மா அப்பா பொங்கலுக்கு புதுத்துணி போட்டுக்கணும்...!
சென்னை: அம்மா அப்பா பொங்கலுக்கு புதுக் துணி உடுத்த வேண்டும் என்று தனது ஆசையை சொன்னார் ஈஸ்வரி.
கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏழைப்பெண் ஈஸ்வரியின் சின்ன சின்ன ஆசைகள் பற்றி கேட்டுத் தெரிந்துக்கொண்டார் ராதிகா சரத்குமார்.
அப்போது கல்லூரி படிக்கும் பெண் ஈஸ்வரி வெள்ளந்தியாய் சில ஆசைகளை சொன்னதும், அதை கேட்டு பெற்றோரும், மற்றோரும் ரசித்ததும் நன்றாக இருந்தது.

கோடீஸ்வரி ஈஸ்வரி
கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஈஸ்வரியிடம் ராதிகா. ஈஸ்வரி நாம ரொம்ப விஷயங்கள் பத்தி பேசிட்டோம். இப்போ உங்க சின்ன சின்ன ஆசைகள் பத்தி சொல்லுங்க என்று கேட்டார். நல்லா படிச்சு, வேலைக்கு போயி எங்க சமுதாயத்துல எல்லாரும் படிச்சவிங்களா இருக்கும் அளவுக்கு அவங்களை முன்னேத்தணும் மேடம்னு சொன்னார் ஈஸ்வரி.

அது லட்சியம்
அது லட்சியம்...நான் கேட்டது சின்ன சின்ன ஆசை..இப்போ எனக்கு நிறைய சாக்லேட் சாப்பிடணும்னு ஆசை இருக்கும். குண்டாயிடுவேன்னு சாப்பிட மாட்டேன். டயட் காரணமா... அது மாதிரி ஏதாவதுன்னு கேட்டார் ராதிகா. அப்பா கொலுசு வாங்கிட்டு வந்து தந்தாங்க மேடம்.. என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் எனக்கு குடுத்து, நீதான் காலேஜ் போறே..நாங்க வேலைக்குத்தானே போறோம்னு விட்டுக் கொடுத்துட்டாங்க.

ஹாய் சொல்லுங்க
அவங்களுக்கு இங்கே உங்க கிட்டே அவங்களை பத்தி பேசணும்னு ஆசை. அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஹாய் சொல்லுங்க என்றார். பார்த்தீங்களா.. இப்பவும் அவங்க ஆசையைத்தான் சொல்றீங்க.. உங்க ஆசையை சொல்லுங்க என்று கேட்டபோது..அப்பா அம்மா எந்த விசேஷம்னாலும் புதுத்துணி எடுத்துக் குடுத்துருவாங்க.

சந்தோசம் இருக்காது
ஆனா, அவங்க கூட இருக்க மாட்டாங்க. அன்னிக்கு இன்னும் காசு கிடைக்கும்னு வியாபாரத்துக்கு போயிடுவாங்க. தலை சீவுன்னா கூட அம்மா சீவ மாட்டாங்க.எல்லாம் இருந்தும் அவங்க கூட இல்லேன்னா சந்தோசம் இருக்காதுன்னு சொன்னார். அப்போ இந்தப் பொங்கலுக்கு நீங்க ஜெயிக்கிற பணத்துல பொங்கலை சந்தோஷமா கொண்டாடுங்க.
அம்மா அப்பா புதுத்துணி போட்டுக்குவாங்க. அம்மாவுக்கு தலை சீவி பூ வச்சு குடும்பத்தோட போட்டோ புடிச்சு எனக்கு அனுப்புங்க. என்னம்மா சரியான்னு கேட்டார் ராதிகா. ஈஸ்வரியின் அம்மாவும் சரி என்கிறார். இப்படி சந்தோஷமாக இருந்தது நிகழ்ச்சி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications