Eearamana Rojave Serial: மஞ்சக் கலர் சேலை.. டிரான்ஸ்பரன்ட் ஜாக்கெட்.. அப்படியே சரோஜா தேவி
சென்னை: இப்பெல்லாம் கான்செப்ட்டுக்கு ரொம்ப கஷ்டப்படுவதில்லை டிவி சீரியல்கள்... ஏதாவது ஹிட் படத்தை எடுக்க வேண்டியது.. டமால் டுமூல்னு சுட வேண்டியது. போய்ட்டே இருக்க வேண்டியது.
நிறையப் படங்களின் காட்சியை நேரடியாகவோ அல்லது லேசு பாசாக மாற்றியோ பயன்படுத்துவது ஒரு ஸ்டைலாக மாறி விட்டது. மக்களுக்கும் வேற வழி ரசிச்சுத்தானே ஆகணும்.
இப்பக் கூட பாருங்க விஜய் டிவியில் வரும் ஈரமான ரோஜாவில் ஒரு சூப்பர் ஹிட் எம்ஜிஆர் பாடலை சுட்டு அதில் ஹீரோ ஹீரோயினை ஆட வைத்து வேடிக்கை காட்டியுள்ளனர். அதுவும் சரோஜாதேவி பாட்டு..

எடுப்பான அழகு
அந்தக் கால நடிகைகளிலேயே எடுப்பான அழகு கொண்டவர் சரோஜாதேவி.. அவரிடம் நடிப்பு மட்டும் மல்ல அழகும், கவர்ச்சியும் கூட ஒரு படி தூக்கலாகவே இருக்கும். ஆனால் நிஜத்திலும் அவர் நல்ல கலர்தாங்க.. சுண்டி இழுக்கும் கலர்.. செவப்புக் கலர்.

சரோஜா தேவி எம்ஜிஆர்
இவரும் எம்ஜிஆரும் இணைந்து ஆடிப் பாடினால்.. அடடா அடடா அப்படிக் கேட்கலாம்.. ரசித்துப் பார்க்கலாம்..காதல் ரசம் பொங்கி வழியும். எம்ஜிஆர் உதட்டுச் சுழிப்பும்.. கூடவே சரோஜாதேவியின் நவரசங்களும் இணையும் போது நமது மனதிலும் உடலிலும் கூட காதல்

சூப்பர் மெகா ஹிட்
அப்படிப்பட்ட ஜோடி ஆடிப் பாடிய சூப்பர் மெகா ஹிட் பாடல்தான் நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்.. இப்பக் கேட்டால் கூட செமத்தியாக இருக்கும்.. அதில் சரோஜா தேவிக்கு மஞ்சள் சேலையைக் கட்டி விட்டிருப்பார்கள்.. பார்க்கவே கொள்ளை அழகு.. எம்ஜிஆருக்கு சிவப்பு நிற டிரஸ். கேட்கணுமா அமர்க்களமாக இருக்கும்.

ரசிகர்களை நிலை குலைய
அழகான ஜடை, தலையில் அலங்காரமாக கவர்ச்சிகரமான ரோஸ், டிரான்ஸ்பெரன்ட் ஜாக்கெட், கவர்ச்சிகரமான மஞ்சள் சேலையில் சரோஜாதேவி அந்தக் கால ரசிகர்களை நிலை குலைய வைத்திருப்பார்.. இந்தப் பாடலைத்தான் ஈரமான ரோஜாவே சீரியல் மலரை, வெற்றியுடன் ஆட வைத்துள்ளனர்.
|
அதே சிரிப்பு அதே ஸ்டைல்
சும்மா சொல்லக் கூடாதுங்க.. செமையாக ஆடியுள்ளார்.. அதே ஸ்டைல்.. அதே சிரிப்பு.. அதே வெட்கம்.. அடடா பிச்சுப்புட்டீங்க போங்க என்று சொல்லும் அளவுக்கு களை கட்டியுள்ளது ஆட்டம்.. இன்னிக்கு 2.30 மணிக்கு சீரியல் பாருங்க.. ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications