Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது வெட்கமா.. சேச்சே.. நமக்கு அதுவே ஆகவே ஆகாதுங்க.. ரசிகர்கள் ஸ்வீட் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை ஈரமான ரோஜாவே சீரியலில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் நிவிஷாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. அவருக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை வெட்கமாம்!

இப்போது வெட்கப்படுவதை யே வெறுக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நிவிஷா. இதைக்கேட்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இவர் தமிழில் முதலில் தெய்வமகள் சீரியலில் தான் அறிமுகமானார்.

இந்த சீரியலில் வாணி போஜன் கதாநாயகியாகவும் கிருஷ்ணா கதாநாயகனாகவும் நடித்து இருப்பார். இதில் வாணி போஜன் இன் தங்கையாக சங்கீதா கேரக்டரில் காலேஜ் போகும் டீன்ஏஜ் பொண்ணாக நடித்திருப்பார். இதில் இவர் பார்வையாலேயே ரசிகர்கள் கூட்டம் கூடிடுச்சு.

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே

தெய்வமகள் சீரியலில் தொடர்ந்து இவருக்கு நடிக்க வந்ததெல்லாம் வில்லி கேரக்டர் தானாம். இப்போ ஈரமான ரோஜாவே சீரியல் அஞ்சலியாக கலக்கிக் கொண்டிருக்கிறார் .இந்த சீரியலில் மூலமாக நிறைய ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் நிறைய ரசிகர்கள் இவரைப் ரசிக்கிறார்கள். இவர் முள்ளும் மலரும் சீரியலில் மகாலட்சுமி கேரக்டரிலும் நடித்துள்ளார்.

 தெய்ம் தந்த வீடு வனிதா

தெய்ம் தந்த வீடு வனிதா

அதேபோல சிவகாமி சீரியலில் தேனு கேரக்டரிலும் கண்ணம்மா சீரியலில் மீரா கேரக்டரிலும் தெய்வம் தந்த வீடு சீரியலில் வனிதா கேரக்டரிலும் தெய்வமகள் சீரியலில் சங்கீதாவும் கலக்கி இருக்கிறார். இவ்வளவு பிசியா நடிச்சுட்டு இருந்தாலும் டிக் டாக் டப்ஸ்மாஷ் களிலும் கலக்கியிருக்கிறார். டிக் டாக் இப்போ தடை செய்யப்பட்டதால் முழுவதுமாக இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவனத்தை செலுத்தியுள்ளார்.

அழகுக் கூட்டம்

அழகுக் கூட்டம்

இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இணையதளங்கள் மூலமாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது இவர் போஸ்ட் கிக்காக ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்து இருக்கிறார்களாம். இவர்களின் காத்திருப்புக்கு பயனாக வனிதாவும் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை குவிக்கிறார்.

கவர்ச்சிப் புயல்

கவர்ச்சிப் புயல்

சேலை கட்டிக்கொண்டு கவர்ச்சி புயலாக ரசிகர்களை மிரட்டுகிறார். இவருக்கு மேக்கப் என்றால் அவ்வளவு பிடிக்குமாம் .சின்ன வயசுல இருந்து மேக்கப் போடுறதுல கொள்ளை பிரியமாம் .அவங்க வீட்டுல லிப்ஸ்டிக் போடதுக்கு கூட விட மாட்டாங்களாம். ஆனால் குட்டி வயசுல இருந்தே லிப்ஸ்டிக் போட்டுகிட்டு அடி எல்லாம் வாங்கி இருக்காங்களாம்.

நல்ல அழகுதான்

நல்ல அழகுதான்

கல்யாண வீட்டு பங்க்ஷன் ல பொண்ணுக்கு மேக்கப் பண்றத வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்களாம். புது புது டிரஸ் போடறது ரொம்ப கொண்டாட்டமாம். இவங்க கப்போர்டுல பார்சல் பிரிக்காத டிரஸ்ஸஸ் இருந்தாலும் பங்ஷனுக்கு போகணும்னா டிரஸ் வாங்கணும்.... ட்ரெஸ்ஸே இல்ல அப்படின்னு தான் பீல் பண்ணுவாராம். ரொம்பத்தான் சேட்டை போல.

மொட்டைமாடி ஷூட்டிங்

மொட்டைமாடி ஷூட்டிங்

இப்போ ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகு தான் இவருக்கு சந்தோசமாக இருக்கிறதாம் .இந்த லாக் டவுன் டைம்ல வீட்டுக்குள்ளேயே இருக்கிறது இவருக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்ததாம். மேக்கப் போட்டுட்டு லைட் முன்னாடி இருக்கிறதுதான் இவங்களுக்கு ஹைலைட். ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மொட்டமாடி சூட்டிங் பிசியா போய்க்கிட்டு இருக்காம்.

 ரசிகர்களுக்கு கிறக்கம்

ரசிகர்களுக்கு கிறக்கம்

விதவிதமாக போட்டோஸ். எடுத்து இணையதளத்தில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார் .இவர் உதட்டுக்கு கீழ் இருக்கும் மச்சத்திற்கு ரசிகர்கள் கிறங்கிப் போய் இருக்கும் போது இப்படி கவர்ச்சியிலும் சொக்க வைக்கிறாராம்.. ஒரு பேட்டியில் எனக்கு வெட்கப்படுவது பிடிக்காதுங்க.. அதை நான் வெறுக்கிறேன்.. எப்பவும் நான் தைரியமான பொண்ணு என்றும் சொல்லி வைத்துள்ளார்.. ரசிகர்கள் அப்படியே கிறங்கிப் போய்க் கிடக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+