Eeramana rojave serial: என்ன இப்படி சண்டை போட்டுக்கறாங்க? தப்பாப் போச்சே!
சென்னை: விட்டுக் கொடுக்கறது தப்பில்லை, யாருக்கு எதை விட்டுக் கொடுக்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும். அப்போதுதான் அந்த விட்டுக் கொடுத்தலுக்கு அர்த்தம் இருக்கும்.
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் ஏற்காடு ரிசார்ட் ஒன்றில் சிறந்த தம்பதி 2019 ம் ஆண்டுக்கான போட்டி தம்பதியர் இடையே நடக்குது.
இதில் புகழின் அண்ணன் வெற்றியும், அகிலாவின் அக்கா மலரும் முதலிடத்தில் இருக்கின்றனர். இரண்டாவது இடத்தில் தம்பி புகழும், தங்கை அகிலாவும் இருப்பதால் அவங்களுக்கு விட்டுக் கொடுத்துடலாம் என்று முதல் ஜோடி நினைக்கிறார்கள்.

தம்பதியர் சைக்கிள் ரேஸ்
தம்பதியருக்கு கடைசியாக சைக்கிள் ரேஸ் வைக்கிறார்கள். மலர் புருஷன் வெற்றியிடம் சொல்கிறாள். மாமா ... நாமதான் இந்த போட்டியில வின்னர் அவார்ட் ஜெயிக்கணும்னு ஆசைப்பட்டோம். ஆனால். புகழும் அகிலாவும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா நெருங்கி வர்ற மாதிரி இருக்கு.

இப்போது இரண்டாவது
இப்போது இரண்டாவது இடத்தில் அவங்க இருக்காங்க. முதலிடத்தில் நாம இருக்கோம். இந்த சைக்கிள் ரேஸில் நமக்கு பின்னாடிதான் அவங்க வருவாங்க. நாம விட்டுக் கொடுத்து, அவங்களை அவார்ட் வாங்க வச்சுட்டா அவங்களுக்குள்ள நெருக்கம் இன்னும் அதிகமாகும் மாமான்னு சொல்றா.

மலர் நிஜமாவா?
நிஜமாத்தான் சொல்றியா மலர்..நீதானே நாம் அவார்ட் வின் பண்ணணும்ணு சொன்னேன்னு கேட்கறான் நாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டோம். ஆனால், அவங்களுக்குள்ள இன்னும் நெருக்கம் வரலை.அதான் மாமா சொல்றேன்னு சொல்ல வெற்றியும் சரின்னு ஒத்துக்கறான்.

முன்னால் சைக்கிளில்
சைக்கிளில் அவங்கவங்க பொண்டாட்டியை முன்னாடி உட்கார வச்சு சைக்கிளை வேகமா ஓட்டணும். முதலிடத்தில் வந்து கொண்டு இருந்த வெற்றி ஸ்லோ பண்ணிட்டு புகழும் அகிலாவும் வருவாங்கன்னு காத்து இருக்க, எல்லா ஜோடிகளும் அவங்களை கிராஸ் பண்ணிட்டு போறாங்க.
என்னடான்னு பார்த்தா.. ரொம்ப உரசிகிட்டு உட்காராதய்யான்னு அகிலா புருஷனை திட்ட, அவன் வாயை மூடிக்கிட்டு பேசாம வான்னு சொல்லி சைக்கிள் ஓட்ட அப்படி ஒண்ணும் இந்த போட்டியில் ஜெயிக்கத் தேவையில்லைன்னு இவள் சொல்ல அப்படீன்னா என்னை இறக்கிவிடுன்னு அகிலா சொல்றா. போடின்னு அவன் இறக்கி விட்டுட்டு சைக்கிளை உதைச்சு தள்றான்.
இவளொரு பக்கம் அவளொரு பக்கம் கோவத்தோட போறாங்க. மலர் வெற்றியின் முதலிடமும் போச்சா?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications