Eeramana Rojave Serial: டியூஷன் படிக்கும் பிள்ளைகளை வேலை வாங்கலாமா?
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் இன்றைய எபிசோட் எல்லாரும் உணர்ந்து பார்க்க வேண்டிய ஒன்று என்று தோன்றுகிறது. பார்த்துவிட்டு மட்டும் போகாமல் கடைப்பிடிக்க வேண்டியவர்கள் அதை முறையாக கடைப் பிடிக்கவும் வேண்டும்.
அக்கா மலரும், தங்கையும் டியூஷன் சென்டர் நடத்திக்கிட்டு வர்ராங்க. அக்கா மலர் ஏற்கனவே அரசு பள்ளி ஆசிரியர். இதனால் வீட்டிலிருக்கும் தங்கை அகிலா, தனக்கும் ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து, இருவருமாக மாடியில் டியூஷன் சென்டர் நடத்தறாங்க.
டீச்சர்களை நம்பி பிள்ளைகளை பள்ளிக்கு எப்படி அனுப்புகிறோமோ அதே போலவே, டியூஷனுக்கும் பிள்ளைகளை நம்பித்தான் ஒரு வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

கடைக்கு பிள்ளைகளை
மலரிடமும், அகிலாவிடமும் பிள்ளைகள் டியூஷன் படிக்க வருவது பிடிக்காத இருவரின் நாத்தனார்களும், மாமியாரும் சேர்ந்து படிக்க வரும் பிள்ளையை வேண்டும் என்றே கடைக்கு முட்டை வாங்கிட்டு வர அனுப்பிடறாங்க. இதை பார்த்துட்டு, அந்த பிள்ளையின் அம்மா வந்து மலரிடமும், அகிலாவிடமும் சண்டை போட்டுக்கிட்டு, இனிமேல் பிள்ளையை டியூஷன் அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டு போயிடறாங்க.

அப்செட் மூட்
என்ன மலர் ஒரு மாதிரி இருக்கேன்னு புருஷன் வெற்றி கேட்க, நடந்ததை புருஷனிடம் சொல்கிறாள். என்னடா இன்னும் வீட்டில் ஒரு பிரச்சனையும் பண்ணாமல் இருக்கங்களேன்னு நினைச்சேன். சரி விடு மலர் அந்த நடுத்தெருவில் இருந்து வரும் பையன்தானே .அவன் எனக்கு தெரிஞ்ச ஒருத்தரோட பையன்தான். நான் அந்த அண்ணன் கிட்ட சொல்லி அவனை டியூஷனுக்கு வர சொல்றேன்னு சொல்றான்.

வீட்டில் டியூஷன்
அரசு ஆசிரியர் வீட்டில் டியூஷன் எடுப்பதே முதலில் தவறு. அதை ஊக்குவிப்பது போல இருக்கிறது கதை. அதுவும் இவர் வேலை வாங்கவில்லை என்றாலும், வீட்டில் இருப்பவர்கள் டியூஷன் பிள்ளைகளை வேலை வாங்கும் போது டீச்சரின் கவனம் எங்கு இருந்தது? இவர்களை நம்பி குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்பலாமா?

குருகுலம் இல்லை
இப்போது இங்கு ஒன்றும் குருகுலம் நடக்கவில்லை. அதனால், யாரும் குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.எனவே, அரசு ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பதும் தவறு.இப்படி டியூஷனுக்கு வரும் குழந்தைகளை கடைகளுக்கு அனுப்புவதும் தவறு. குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புவதும், டியூஷனுக்கு அனுப்புவதும் டீச்சர்களை நம்பித்தான் என்பதை புரிந்து கொண்டால் சரி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications