Eeramana Rojave Serial: வண்டி ஒரே மாதிரி ஓடிக்கிட்டே இருக்குமா? .இந்த பெண்கள்...!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் வரதட்சணை, சீர்,செனத்தி, சம்பந்தி வீட்டிலேயே யாருக்கும் தெரியாமலே இருபது லட்சம் ரூபாய் கடன் வாங்கியது என்று, சம்பந்தி வீட்டில் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள்.
இதனால், வெற்றிக்கு கல்யாணம் செய்து வைத்த மலர், அவனது தம்பி புகழுக்கு கல்யா ணம் செய்து வச்ச மலரின் தங்கை அகிலா ரெண்டு பேரையும் மாமியார் வாழா வெட்டியா வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.
வெற்றியும், புகழும் அவ்வப்போது தங்களது மனைவிகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் வெற்றி மலரின் வீட்டுக்கே போயி அவளுடன் பேசிவிட்டு வருவதாக மாமியாருக்கு தகவல் கிடைச்சுருது. விடுவாங்களா?

நடக்கறது ஒண்ணு
கோயிலுக்கு மாமியார், நாத்தனார் போயிருக்கும்போது, மலர், அகிலாவின் அம்மாவும், பாட்டியும் அங்கு இவர்களிடம் மாட்டிக்கறாங்க. ஏண்டி ஈசு நாம என்ன நினைச்சு இவங்க பொண்ணுங்களை வீட்டுக்கு அனுப்பி வச்சோம். ஆனால் இங்கே வேற ஒண்ணுல்ல நடக்குதுன்னு மாமியார் சொல்றாங்க.

சின்னம்மா என்ன?
என்ன சின்னம்மா சொல்றே என்று நாத்தனார் ஆரம்பிக்குது.ஆமாண்டி, தர வேண்டிய பணம், சீர் எல்லாத்தையும் தந்தால்தான் உங்க பொண்ணுங்க நம்ம வீட்டுக்கு வந்து வாழலாம்னு சொன்னோம். ஆனா, இவங்க வேற கணக்கு போட்டு இருக்காங்கடி. கதவைத் திறந்து வச்சுக்கிட்டு வீட்டு மாப்பிள்ளையை வரவேற்று காவல் காக்கிறாங்கடின்னு சொல்றாங்க.

சித்தி நிஜமாவா
நிஜமாவா சித்தி சொல்றே...இதென்ன அசிங்கம். இப்படி எல்லாம் கூடவா நடக்கும். வெட்கம் கெட்ட பிழைப்பு இது..மாப்பிளையை வீட்டுக்கு வரவச்சு காவல் காக்கறதா... அசிங்கமா இருக்கு சின்னம்மா.. அவ்ளோ தூரம் போறவங்க பணத்தை குடுத்துட்டு மாப்பிள்ளையையும் , பெண்ணையும் வாழ வைக்கலாம்லன்னு சொல்ற நாத்தனார்.

நில்லுங்க போறீங்க
மாமியார், நாத்தனார் சம்பந்தியிடம் கண்டதை பேசிவிட்டு கிளம்பு, நில்லுங்க வந்தீங்க, பேசுனீங்க.. நீங்க பாட்டுக்கு போறீங்க. இப்போ நான் சொல்றதையும் கேட்டுட்டு போங்க.எங்க மாப்பிள்ளை எங்க வீட்டுக்கு வந்தா கதவைத் திறந்து வரவேற்கத்தான் செய்வோம்.

ஒரே மாதிரி வண்டி
அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா பேசிகிட்டு இருந்தா, யாரும் தொந்திரவு பண்ணாதீங்க.. அங்கே போகாதீங்கன்னு காவல் காக்கத்தான் செய்வோம். ஏன், எங்க வீட்டு பெண்ணைத் தேடி வர்றது உங்க பிள்ளைதானே.. முடிஞ்சா அவரை இங்கே வராதீங்கன்னு கண்டிச்சு வைன்னு சொல்ல அதிர்ச்சியில்; நிக்கறாங்க மாமியார், நாத்தனார்.
மலரின் பாட்டி வந்து நானும் நாலு வார்த்தை பேசிட்டு வரேன்னு சொல்லி, இங்க பாருடி... நாங்க கடன் வேணும்னு உங்களை கேட்கலை.உங்க வீட்டு ஆளுங்கதான் தாங்களா குடுத்தாங்க இப்போதைக்கு திருப்பி தர முடியாது. பார்த்துக்கலாம் போங்கடீன்னு சொல்றாங்க.
இப்படித்தான் வரதட்சணை கேட்டால் திருப்பி கேட்கணும்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications