Eeramana Rojave Serial: சமைச்சது மலர் பரிமாறுவது நீயா? செல்லாது செல்லாது!
சென்னை: விஜய் டிவியின் மலர் சீரியலில் சீர் செனத்தி வரதட்சணை பிரச்சனை காரணமாக புது புருஷன் பொண்டாட்டி பிரிந்து இருக்கிறார்கள். அக்கா தங்கை அண்ணன் தம்பியை கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இரு தம்பதிக்குமே இதே நிலைதான்.
பொண்டாட்டி மலரை பார்க்க மகன் வெற்றி அவளது வீட்டுக்கே போயிருக்கான் என்று தெரிந்த வெற்றியின் அம்மா, மகனை திட்டுவதற்கு பதில் மருமகளை போன் செய்து திட்டறாங்க.
இதை மலர் வெற்றியிடம் நீங்க எங்க வீட்டுக்கு வராதீங்க.எங்க அம்மா அப்பா யாரும் உங்களை எங்க வீட்டுக்கு வர கூடாதுன்னு சொல்ல மாட்டாங்க. ஆனால், என்னால் அப்படி சொல்லாம இருக்க முடியாது. அத்தைகிட்டே என்னாலத் திட்டு வாங்க முடியாது. இனிமேல் எங்க வீட்டுக்கு வராதீங்கன்னு சொல்றா மலர்.

வெற்றி ஒரு விவசாயி
விவசாயி வெற்றி அம்மாவிடம் கோச்சுக்கிட்டு வயல் வெளியில் மோட்டார் பம்ப்செட் கொட்டகையில் தங்கிக்கறேன்னு சொல்லி போயிடறான். மலருக்கு இது தெரிய வர, என்னடா புருஷன் கோச்சுக்கிட்டு பம்ப்செட் கொட்டகையில் தங்கி கஷ்டப்படுகிறார்... சாப்பாடு ஹோட்டலில்னு சொல்றார். வயிறு என்னாகுமோன்னு கவலையில் இருக்கும் மலருக்கு ஞாயிறு விடுமுறை.

நான்தான் சமைப்பேன்
இன்னிக்கு யாரும் என் கூட சமையல் கட்டுக்கு வர கூடாது. நான்தான் சமைப்பேன்னு சொல்லி சமைக்கறா. ரெண்டு கிலோ வஞ்சிரம் மீன்,முட்டை என்று சமையல் அமர்களப்படுது. வீட்டில் எல்லாரும் வாசனை பிடிக்க, சாப்பிட கூப்பிடுவான்னு பார்த்தால்,கேரியரில் வச்சு புருஷனுக்கு எல்லாத்தையும் கட்டி தங்கச்சி தேனிடம் குடுத்து அனுப்பிவிடறா.

வயல் மம்மட்டி
வயலில் மம்மட்டி பிடித்து வேலை செய்து கொண்டு இருக்கும் வெற்றிக்கு, தேன் சாப்பாடு கொண்டு வர...செல்லாது செல்லாது...சமைக்கறவளுக்கு ஆசையா பரிமாற தெரியாதா? அவளையே வர சொல்லுன்னு சொல்றான் வெற்றி. தேனும் அக்கா நீதான் மாமாவுக்கு பாரிமாறணுமாம். நீயே வான்னு சொல்றா.

புருஷனுக்கு பிடித்த
புருஷனுக்கு பிடித்த நீல நிற புடவையை கட்டிக்கிட்டு மலர் புருஷனுக்கு ஆசையா உணவு பரிமாற வருகிறாள். அவனும் இலையில் போட்ட வஞ்சிர மீன்,முட்டை பொரியல்னு விரும்பி ருசிச்சு சாப்பிட, உங்களுக்கு பிடிச்ச புடவையை கட்டிக்கிட்டு வந்திருக்கேன். அதை நல்லாருக்குன்னு சொல்ல கூடாதான்னு மனசுக்குள்ளே பேசிக்கிறாள்.

மலர் அப்புறம்
அப்பறம் மலர் என்று அவன் சாப்பிட்டுக்கொண்டே கேட்க, அப்புறமென்ன...நீங்கதான் சொல்லணும்.என்று வேண்டும் என்றே புடவையை எடுத்து ரொம்ப வேர்க்குது இல்லேன்னு விசிறிக்கிறாள் .ஆமா மலர் என்னவோ இன்னிக்கு காத்து வீ சலை. எனக்கும் விசிறிவிடேன்னு சொல்றான். அட...சீ இந்த புடவை உனக்கு நல்லாருக்கு ஒரு வார்த்தை சொல்லி போட்டாத்தான் என்னவாம்ன்னு நினைச்சுகிட்டே விசிறிவிடறேன்னு கோவத்தில் விசிறுகிறாள்.
புருஷன் புடவை நல்லாருக்குன்னு சொன்னால் மனைவிக்கு சந்தோஷம்தான்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications