Eeramana Rojave Serial: உன் கூட போயி எப்படிடா? ஐயோ கொல்றானே!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் எளிமையான முறையில் ஷூட் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதனால்தானோ என்னவோ மக்களின் மனம் கவர்ந்த சீரியலாகவும் இது இருக்கிறது.
விவசாய குடும்பம் , கிராமத்து ஜோடிகள் கதை என்பதாலும் சீரியலை மக்கள் தொடர்ந்து பார்க்க தூண்டுகிறது. இதைவிட வேற புதிதாக கதை ஒன்றும் இல்லை என்றாலும், வரதட்சணை பற்றியும் கொஞ்சம் தொட்டு இருப்பதால், சீரியலை பார்க்கலாம்.
பார்க்க போனால், வரதச்சனை கொடுமையால் ஜோடிக்குள் பிரிவு ஏற்பட்டு அதைத்தான் காட்சிகளாக காண்பித்து எபிசோடுகளை நகர்த்தி வருகிறார்கள்.

வெற்றி மலர்
மலர் வெற்றியின் அண்ணனை காதலித்து, அவன் கல்யாணத்துக்கு முதல் நாள் இறந்துவிட, தம்பி வெற்றிக்கு கல்யாணம் செய்து வச்சுடறாங்க. கல்யாணம் நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் ஏற்பட்டு காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அதற்குள் வரதட்சணை தரவில்லை என்று அம்மா வீட்டுக்கு அனுப்பப் படுகிறாள் மலர்.

புகழ் அகிலா
அகிலா மலரின் தங்கை, இவளுக்கும் வேறு இடத்தில் கல்யாணம் நடக்க இருக்கையில்,, இவளை ஜவுளிக் கடையில் உடை மாற்றும்போது வீடியோ எடுத்து, ஒருவன் மாப்பிள்ளையிடம் காண்பிக்க, மாப்பிள்ளை ஓடிவிடுகிறான். வேறு வழி இல்லாமல், மலரின் மாமனார் தனது அடுத்த மகன் புகழுக்கு அகிலாவை கல்யாணம் செய்து வைக்கிறார். எப்போதும் சண்டைக்கு கோழியாக இருந்த இவர்கள் வரதட்சணை,சீர் செனத்தி செய்யவில்லை என்று பிரிக்கப் படும்போதுதான் ஆசை மலர்வது போல கண்டும் காணாமல் இருக்கிறது.

ஏற்காடு போக
மலரும், வெற்றியும் காதலில் இருப்பதால், எங்காவது வெளியூர் போயிட்டு வரலாம். வந்து ஒரு வருட கல்யாண நாளை கொண்டாடலாம் என்று பிளான் போடுகிறார்கள். அப்போது, அகிலாவும், புகழும் கூட வந்தால் நன்றாக இருக்கும் என்று இருவரையும் பிடிவாதமாக கூப்பிட்டு, ஒரு வழியாக புருஷன்கள் வெற்றியும், புகழும் பொண்டாட்டிகளை தங்கள் வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாக கிளம்பும் காதலர்கள் போல கிளம்புகிறார்கள்.

பஸ்ஸில் மாறிப்போச்சு
பஸ்ஸில் புகழ் நாம ரெண்டு பேரும் இந்த பர்த்தில் படுத்துக்கலாம். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து படுத்துக்கட்டும் என்று சொல்ல, டேய் நீ அகிலாகூட படுத்துக்கோடா...மலர் என் கூட பர்த்தில் இருக்கட்டும்னு வெற்றி சொல்ல, ஐயையே இவ கூட ஒரு ராத்திரி முழுக்கவா? முடியாதுன்னு சொல்லிட்டு படுத்துக்கறான் புகழ். அப்போ நான் உன் கூட ராத்திரி முழுக்க இருக்கவாடா..இந்த ஏற்காடு டூரை அரேன்ஜ் பண்ணினேன்னு சொல்லி,அம்போன்னு உட்கார்ந்து இருக்கான் வெற்றி.
இது எப்படி இருக்கு?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications