Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Eeramana rojave serial: ஒரு காதல் தோல்விக்கு இன்னொரு காதல்தான் மருந்தா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் மலர் என்கிற மலர் விழிக்கு நாட்டரசன் முதல் மகன் மாறன் மீதுதான் காதல் மலர்ந்து இருக்கிறது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து கல்யாணமும் முடிவு செய்து இருக்கிறார்கள்.

கல்யாணத்துக்கு முதல் நாள்,மலருக்கு மோதிரம் வாங்க தானே கடைக்கு போகணும்னு தம்பி வெற்றியை கூப்பிடறான் மாறன். இருவரும் பைக்கில் போக, சாலையில் வேண்டும் என்றே ஒரு லாரி மோதி, மாறன் இறந்துவிடுகிறான்.

மாறனுக்கு பதில், கல்யாண மேடையில் மலர் கழுத்தில் தாலி கட்டியவன்தான் இப்போது புருஷனாக இருக்கும் வெற்றி. மாறனின் முதல் நினைவு நாளில் வீடே சோகத்தை அனுஷ்டிக்கிறது.

மாறன் இறப்பு

மாறன் இறப்பு

வீட்டில் மாறனின் முதல் நினைவு நாளில் பெண்கள் ஒப்பாரி வைத்து துக்கம் அனுஷ்டிப்பது என்பது புதிய முறையாக இருக்கிறது. முதல் நினைவு நாளை திவசம் அல்லது திதி கொடுத்து, படையல் வைத்து வணங்குவதைத்தான் பார்த்து இருக்கிறோம். இப்படி நினைவு நாளில் ஒப்பாரி வைத்து பெண்கள் அழுவதை பார்க்கையில் என்னவோ போல இருக்கிறது.மாறன் வாழ வேண்டிய வயதுதான். அதற்காக இப்படியா?

ராசி இல்லாத மலர்

ராசி இல்லாத மலர்

கல்யாணத்துக்கு முதல் நாளே மாறன் இறந்துவிட்டதால், மலர் ராசி இல்லாதவள்.. அவளோட கெட்ட ராசியிலதான் நீ என்னை விட்டுட்டு போயிட்டேன்னு மாமியார் மாறனிடம் கும்பிடும்போது சொல்லிட்டு அழறாங்க. மலருக்கு அழுகையாக வருகிறது.அவளை கல்யாணம் செய்துகிட்டு வெற்றிக்கும் கஷ்டமாக இருந்தாலும்,, அம்மா ஆத்திரத்தில் அழறாங்கன்னு விட்டுடறான். இதை தாங்க முடியாத மலர் படுக்கையில்படுத்து அழறா.

மலர் வெற்றி

மலர் வெற்றி

ரூமுக்குள் அழுதுக்கொண்டே போன மனைவியைத் தேடி வெற்றி போறான்.அழாத மலர் அம்மா வருத்தத்துல ஏதாவது சொல்லி இருப்பாங்க. அதை நினைச்சுகிட்டே இருக்கதேன்னு சொல்றான். காலையில் நீங்க எல்லாரும் எங்கே போயிருந்தீங்க என்று கேட்கிறாள் மலர். மாறன் சமாதிக்கு போயி கும்பிட்டுட்டு வந்தோம்னு வெற்றி சொல்றான். என்னை அங்கே கூட்டிகிட்டு போறீங்களான்னு மலர் கேட்க, வா மலர் அழைச்சுட்டு போறேன்னு சொல்லி அழைச்சுட்டு போறான்.

மாறன் சமாதி

மாறன் சமாதி

நான் வெளியில் நிற்கிறேன்..நீ கும்பிட்டுட்டு வா மலர்னு வெற்றி போயிடறான்.அப்போது மலர் மாறனின் சமாதியில் நானும், நீங்களும் உயிருக்கு உயிரா காதலிச்சது உண்மைதான்.க டைசியில் இறக்கறப்போ கூட என்னைப் பத்திதான் நீங்க பேசி இருக்கீங்க.உங்களை மறக்கவே முடியாதுன்னு தான் நான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா, உங்க தம்பி வெற்றி என்கிட்டே காட்டின அன்பில் என்மனசு அவர் பக்கம் போக ஆம்பிச்சுருச்சு. இப்போ அவரை நான் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்.

இன்னொரு காதல்

இன்னொரு காதல்

ஒரு காதல் தோல்விக்கு மருந்து இன்னொரு காதல்னு எல்லோரும் சொன்னப்போ எனக்கு நம்பிக்கை வரல. ஆனா, இப்போ உண்மைன்னு நம்பறேன். எனக்கு வெற்றி கூட வாழணும்.,இதை அவர்கிட்ட சொல்ற தைரியம் எனக்கு இல்லை. நீதான் தெய்வமா இருந்து எங்களை வாழ வைக்கணும்னு கதறி அழுது வேணடிக்கறா.

காதல் போயின் காதல் போயின் சாதல் என்பதெல்லாம் சரி இல்லை. மலர் முடிவுதான் சரி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+