Eeramana Rojave Serial: மாமான்னு கூப்பிட ஆசை! இந்த சீன் கூட.. நல்லாத்தாய்யா இருக்கு!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் சின்ன சின்ன ஆசைகள் என்று இருந்த தம்பதியின் பெரிய ஆசையும் நிறைவேறப் போகிறது.
தனித் தனியாக படுக்கை பேருந்தில் பயணம் செய்ய இருந்தவர்கள் இப்போது ஜோடி ஜோடியாக பயணிக்க ஆரம்பிச்சு இருக்கிறார்கள். இதெல்லாம் டபுள் பர்த் பஸ்ஸில் நடக்குது.
புருஷன் பொண்டாட்டி அன்யோன்யங்களை சீரியல்கள் இப்போது வெளிச்சம் போட்டு காண்பிப்பதில், வீட்டில் கூட கணவன் மனைவி நெருக்கம் அதிகமாகி இருப்பதாக பேச்சுக்கள் இருக்கிறது.

சேர்ந்துபோச்சு ஜோடி
எப்படியோ தம்பி புகழை கரெக்ட் பண்ணி, அகிலா இருக்கும் படுக்கை சீட்டுக்கு இவனை அனுப்பி விடுகிறான்.மலர் இவனுடன் இருக்க சீட்டுக்கு வந்து விடுகிறாள். அங்கு அகிலாவும் ,புகழும் எலியும் பூனையும் போல இருத்து ஒரே படுக்கை சீட்டில் உட்கார்ந்து பயணிக்கிறார்கள்.

வெற்றி மலர்
மலர் வெற்றி இருவரும் ஆசையாக பேசிக்கொண்டு வருகிறார்கள்.கல்யாணமான போது பயணித்த முதல் பயணத்தில் இருவரும் பலவித எண்ணங்களோடு பயணித்ததை நினைவு படுத்திக்க கொண்டே பேசிக்கொண்டு வருகிறார்கள்.என்னை முதலில் கை கொடுத்து தூக்கி விட்ட போது, அப்போது எனக்கு என்னவோ போல இருந்துச்சு.இப்போ சுகமா இருக்குதுன்னு பேசிக்கிட்டு வர்றாங்க.,

ஆசை மாமா
மாமான்னு எனக்கு பின்னாடி கல்யாணம் ஆன அகிலாகூட பிடிக்காத புருஷன் புகழை மாமான்னு கூப்பிட்டுட்டா. .நம்மால் கூப்பிட முடியலைன்னு ஆசைப்பட்ட மலர் ,மாமான்னு கூப்பிடறா. மெதுவாக. வெற்றி திரும்பி மலர் என்னை நீ இப்போ கூப்பிட்டியான்னு கேட்க.. இல்லையே சும்மா பார்த்தேங்கன்னு சொல்றா மலர்.

அகிலா புகழ்
அகிலாவும் புகழும் எலியம் பூனையும் போல, உட்கார்ந்து இருக்க, அகிலா புகழை வம்புக்கு இழுக்க நினைக்கிறாள்.அவனின் ஹெட்செட்டை அவன் கண் மூடி இருக்கும்போது இழுத்து விடுகிறாள். அவன் கண் முழுச்சு மறுபடி காதில் எடுத்து வச்சுக்கறான். மீண்டும் அவள் எடுத்துவிட, என்னது இப்படி கீழே விழுதுன்னு சொல்லிகிட்டே மறுபடியும் காதில் வச்சுக்கறான். அவள் மீண்டும் கையை கிட்டே கொண்டு போக, அவன் பார்த்துவிட்டு உன் வேலைதானே இதுன்னு முறைக்கிறான்.
இப்படித்தான் காட்சிகள் கணவன் மனைவிகளை, காதலர்களை சீ ண்டி விடுவது போல ஈரமான ரோஜாவே சீரியலில் பயணிக்கிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications