Eeramana rojave serial: அடடா... இதென்ன வரதட்சணை கொடுமை!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் உண்மையில் குடும்ப சிரியல்தான். வரதட்சணை கேட்டு மாமியாரும், நாத்தனாரும் வீட்டு வாசல் முன்னால் நின்று கத்துகிறார்கள்.
நாத்தனார் பெண்ணோட அப்பாவை, அதுவும் தம்பியின் மாமனாரை பார்த்து கேள்வி கேட்கறாங்க பாருங்க.உண்மையில் இதெல்லாம் ரொம்ப கொடுமை.
இது போல குடும்பங்களில் நடந்தால் சும்மா இருக்காதீங்க. அதுவும் மாப்பிள்ளை வீட்டார் மீது தவறு இருக்கும் பட்சத்தில் தட்டி கேட்கணும்.

புகழ் அகிலா
அகிலாவுக்கு நிச்சயம் செய்த கல்யாணத்தில் மாப்பிள்ளை நல்லவன் இல்லை என்று தெரிந்து கல்யாணம் நின்று போகிறது. .அகிலாவின் அக்கா மலரின் புருஷன் வெற்றியின் தம்பி புகழுக்கு கல்யாணம் செய்து வச்சுடறாங்க.அப்போது சீர் செனத்தி எதுவும் செய்ய முடியாமல்போகிறது.சரி, மறுவீட்டுக்கு வரும்போது, சீர் செனத்தி பண்ணி அனுப்புங்கன்னு சொல்லிடறாங்க.

கடன் பிரச்சனை
அதற்குள் பெண் வீட்டுக் காரர் கடன் பிரச்சனை வந்து, பெரும் திண்ட்டாட்டத்தில் இருக்கார்.இதை தெரிஞ்சுக்கிட்ட மாப்பிள்ளை வீட்டார், இருபது லட்சம் பணம் குடுத்து உதவி செய்யறார். வீட்டில், மனைவிக்கோ, தம்பி பெண்ணுக்கோ இது தெரியாது. அதே போல மறுவீட்டுக்கு அழைத்த பெண் மாப்பிள்ளைக்கும் அஞ்சு லட்சம் ரூபாய் பணம், முதல் பையனுக்கு அவங்க போட்ட செயின், பிரேஸ்லெட், மோதிரம் இவைகளை இரண்டாவது பையனுக்கு போட்டு சீர் செய்திருங்கன்னு சொல்லி அனுப்பறார்.

வீட்டுப் பெண்கள்
ஒரு குடும்பத்து பெண்கள்;இப்படியா இருப்பாங்க. அதுவும் கல்யாணம் ஆகாத இரு பெண்கள்.. மாமியார் கூட சேர்ந்துக்கறாங்க.தெரு முழுக்க கத்திகிட்டே வந்து, பெண் எடுத்தவரின் வீட்டு வாசலில் நின்னு கத்தறாங்க. ஊரே வேடிக்கை பார்க்குது.வீட்டுக்குள்ள போயி கூட பேசாத இந்த பெண்களை ராட்சஸிகள் என்றுதான் சொல்லணும். .

பெண்களை அனுப்பி
கடனாக வாங்கிய இருப்பது லட்சம் ரூபாய் பணம் ,செய்ய வேண்டிய சீர் வரிசை,போட வேண்டிய நகைகள் எல்லாத்தையும் செய்துட்டு, உங்க ரெண்டு பெண்களையும் எங்க வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைங்கன்னு சொல்லி கத்தறாங்க. வந்து உங்க ரெண்டு பொண்ணுங்களை அழைச்சுக்கிட்டு போங்கன்னு சொல்லி கத்தறாங்க.
இதில் பெண்ணை கொடுத்தவரும்,பெண்ணை எடுத்தவரும் நண்பர்கள்...உறவுக்காரர்கள் வேற!குடும்பத்தில் இந்த மாதிரி வீட்டு பெண்கள் இருந்தால் என்னதான் செய்வது?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications