Eeramana Rojave Serial: இவனுங்களா புருஷனுங்க? முதலில் மனுஷன்களா?
சென்னை: கிராமத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் சொந்தம். இப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து மகன்களுக்கு ஒரே வீட்டில் இரண்டு பெண் எடுக்கறாங்க.
இதில் சீர் செனத்தி செய்யலைன்னு மாமியார் கொடுமை... அதை விட தனக்குத் தெரியாமல் புருஷன் சம்பந்தி வீட்டுக்கு பணம் கொடுத்துட்டார்னு மருமகள்களை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.
இதைப் பார்த்துக்கிட்டு அம்மாவுக்கு புத்தி சொல்லலை.அம்மாவுக்கு பயந்துகிட்டு பிள்ளைகள் ரெண்டு பேரும் பேசா மடந்தை போல இருக்காங்க.

ட்ரிப் ஏற்காடு
புருஷன் பெண்டாட்டி தனித் தனியா இருந்தாலும், பேசிக்க ஆரம்பிச்சுடறாங்க. பிறகு ஏற்காடு ட்ரிப் போயி அங்கே ரிசார்ட்டில் தங்கி ஜாலியா இருக்கறாங்க. இது மாமியார் வீட்டுக்குத் தெரியாது. மாப்பிள்ளைகள் இதை அம்மாவிடம் சொல்ல கூட தைரியம் இல்லாம பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு போறாங்க.

புகுந்த வீட்டில்
வாங்கின கடனை திருப்பி கொடுத்தால்தான் புகுந்த வீட்டில் வாழ முடியும்னு அம்மா சொல்ல, அப்போதும் பிள்ளைகள் இருவரும் பெண்டாட்டிக்கு ஆதரவா வாய் திறக்கலை. ஏற்காட்டுக்கு போனது வேற தெரிஞ்சு போகுது.வரட்டும் இன்னிக்கு விலக்குமாத்தால் அடிக்கறேன்னு மாமியார் தொடப்பக் கட்டையுடன் நிற்க..

கேட்கவும் ஆளில்லை
இதைத் தட்டிக் கேட்கவும் மாமனார்,மாமனாரின் அப்பா என்று யாருக்கும் தைரியம் இல்லை. சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு நிக்கறாங்க. தொடப்பக் கட்டையை எடுத்துக்கிட்டு வந்து அடிக்க வர அப்போதும் பிள்ளைகளிடம் சலனமில்லை. அந்த நேரம் பார்த்து மருமகள்கள் அப்பா வருகிறார்.

வித்துட்டு பணம்
சூட்கேஸ் நிறைய பணம் எடுத்துட்டு வந்து இந்தாங்க சம்பந்தி உங்களுக்கு கொடுக்க வேண்டிய கடன் பணம், சீர் பணம், அதுக்கு மேல வட்டி அஞ்சு லட்சம் ரூபாய்னு கொடுக்க மருமகள்களை வீட்டுக்குள் விடறாங்க.
ஆனால், பூர்வீக வீட்டை வித்த சம்பந்தி, அடுத்த நாளே வீட்டை காலி பண்ணணுமாம்..அவர் குடும்பத்தை அழைச்சுக்கிட்டு எங்கே போவார்?
இந்த காலத்திலும் இப்படியா?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications