Eeramana Rojave Serial: என்னங்க... எனக்கு ஆசை.. மாமான்னு கூப்பிடலாமா?
சென்னை: அத்தை மகன் என்றால் முறைப் பெண்கள் அத்தான் என்று கூப்பிடுவதும், அறியாத தெரியாத ஒருவரை திருமணம் செய்துக் கொள்ளும்போது அவரையும் அத்தான் என்பதும் வழக்கம்.
பழைய சினிமாக்களில் ஹீரோயின்கள் பெரும்பாலும் ஹீரோக்களை அத்தான் என்றே அழைத்தார்கள். தாய் மாமன், தாய் மாமன் மகன்களை மாமா என்று அழைத்து வந்தார்கள்.
கிராமத்து பெண்கள், தங்களது கணவனை மாமா என்று அழைப்பதுண்டு. இப்போது சீரியல்களில் மாமா என்று கணவனை அழைப்பது டிரெண்டாகி உள்ளது.

விஜய் டிவி சீரியல்
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் அக்கா மலர் அண்ணன் வெற்றியையும், தங்கை அகிலா தம்பி புகழையும் கல்யாணம் செய்துக்கறாங்க. மலரும் வெற்றியும் கல்யாணமாகி ஒரு வருடத்துக்குப் பிறகு காதலிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால்,அகிலாவின் மனதில் புகழும், புகழின் மனதில் அகிலாவும் இருந்தாலும் எப்போதும் சண்டைக் கோழியாக இருக்கிறார்கள் இருவரும்.

பிரச்சனை பிரிவு
சீர் செனத்தி பிரச்சனையில், மாமியார் மலரையும், அகிலாவையும் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க மாமியார். ரெண்டு ஜோடிகளும் சேர்ந்து இருவர் வீட்டுக்கும் தெரியாமல் கொடைக்கானல் பிக்னீக் போறாங்க. அப்பாவிடம் அக்கா ஸ்கூலில் பிக்னீக் நானும் போறேன்னு அகிலா பர்மிஷன் கேட்கிறார். உன் புருஷன் புகழ்கிட்ட பர்மிஷன் கேளுன்னு அப்பா சொல்றார்.

மாமான்னு கூப்பிடு
போனை ஸ்பீக்கரில் போட்டு பேசுன்னு அப்பா சொல்றார். ஏற்கனவே பிளான் போட்டுட்டு,இப்போ எதுக்கு இது பத்தி பேசறான்னு குழம்பி போகிறான் புகழ். அகிலா மாப்பிள்ளையை மாமான்னு கூப்பிட்டு பேசும்மான்னு அப்பா சொல்றார்.மாமா அக்கா டீச்சரா இருக்கும் ஸ்கூலில் பிள்ளைங்களை பிக்னீக் கூட்டிகிட்டு போறாங்க, அக்காவுக்கு துணைக்கு நான் போயிட்டு வரேன் மாமான்னு கேட்கிறாள்.போயிட்டு வான்னு சொல்றான் புகழ்.

அகிலா மாமா
எனக்குப் பின்னால் இப்போதான் கல்யாணம் ஆனவ அகிலா.அவ புருஷனை மாமான்னு கூப்பிட்டுட்டா.என்னால் கூப்பிட முடியலையேன்னு கொள்ளை கொள்ளையாய் வருத்தம் மலருக்கு. சும்மா ஒரு ஜாலி வாக் போகையில்,எனக்கு ஒரு ஆசைங்க.. அதை சொல்லட்டுமான்னு கேட்கிறாள் மலர். சொல்லு மலர்னு வெற்றி சொல்ல,உங்களை மாமான்னு கூப்பிடட்டுமான்னு கேட்கிறாள்.

கூப்பிடு மலர்
சந்தோஷத்தில் என்ன மலர், நீ எப்போ இப்படி கூப்பிடுவேன்னு ஆசையா காத்திருக்கேன். கூப்பிடு மலர்னு சொல்ல, மாமான்னு கூப்பிடறா வெட்கப் பட்டுக்கொண்டே.துள்ளிக் குதித்த வெற்றி, என் பொண்டாட்டி மாமான்னு கூப்பிட்டுட்டான்னு குணா கமல் மாதிரி குஷியில் டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்க, இங்கே மலர் வெற்றியின் பெயரை மரத்தில் எழுதி முத்தமிட்டுக்கொண்டு இருக்கிறாள். .
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications