Eeramana Rojave Serial: இதுதான்.. இப்படித்தான் ஹனிமூன் இருக்கணும்...!
சென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் புது தம்பதி ஹனிமூன் போவாங்க. அங்கே ஒரு டிவிஸ்ட் வச்சு, நம்மை பயமுறுத்தி வேடிக்கை பார்ப்பாங்க.
ஏற்கனவே இங்கே புதுமணத் தம்பதிகள் தனியா ஹனிமூன் போறதுன்னா பயப்படறாங்க.இதில் சீரியலையும் இப்படி கொண்டு போனால் நிம்மதியா எப்படி ஹனிமூன் போக முடியும்?
ஆனால், விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் அக்கா தங்கை அண்ணன் தம்பியை கல்யாணம் செய்துகிட்டு ஏற்காடு ஜாலி ட்ரிப் போயிருக்காங்க.

நோ ஹனி மூன்
அண்ணன் அக்காவையும், தம்பி தங்கையையும் என்று இரு கல்யாணமும் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்தது என்பதால், இன்னும் கூட இரு தம்பதியரும் ஒன்று சேரவில்லை.. ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்வதற்குள் சீர் வரிசை பிரச்சனை வந்து மாமியார் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.

வெற்றியும் மலரும்
மலரும் வெற்றியும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பிச்சு இருந்த வேளையில் ஏற்காடு டூர் டிரிப் அமைகிறது. இருவர் மட்டும் எப்படி தனியா போறதுன்னு புகழையும், அகிலாவையும் கூடவே கூட்டிச் செல்கிறார்கள். இரு தம்பதியும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இந்த டிரிப் அமைகிறது.

ஜோடிப் பொருத்தம்
போன இடத்தில் ரிசார்ட் ஒன்றில் தங்க, அந்த ரிசார்ட்டில் ஜோடிப் பொருத்தம் என்று பல போட்டிகள் வைத்து தம்பதியை குஷிப் படுத்துகிறார்கள். விலகி இருந்த மலரும் வெற்றியும் நெருங்கும் வாய்ப்பாக இது அமைகிறது. எலியும் பூனையுமாக இருந்த அகிலாவும் புகழும் கூட ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்க நல்ல சந்தர்ப்பமா இது இருக்கு.

இருக்கிறது பிரச்சனை
இந்த சீரியலிலும் பிரச்சனை, மாமியார் வரதட்சணை சீர் செனத்தி செய்யவிலை என்று கொடுமைதான் படுத்தறாங்க. ஆனாலும், அவர்களுக்குத் தெரியாமல் இரு ஜோடிகளும் ஒன்று சேர்ந்து ஜாலி டிரிப் போகிறார்கள், வந்தவுடன், இல்லை வருவதற்குள் பிரச்சனை துவங்கும் என்றாலும், திக் திக் காட்சிகள் இந்த சீரியலில்.இல்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications